நிறைமாத கர்ப்பிணியாக தாமரை மேல் அமர்ந்து... வயிற்றை காட்டியபடி வித்தியாசமாக போஸ் கொடுத்த சீரியல் நடிகை நீலிமா!
சோசியல் மீடியாவில் படு ஆக்டிவாக வலம் வரும் நீலிமா ராணி, தமிழ் சினிமாவின் டாப் நடிகைகளுக்கே டப் கொடுக்கும் அளவிற்கு போட்டோ ஷூட்களை நடத்தி வருகிறார். தற்போது கர்ப்பமாக இருக்கும் இவர் வித்தியாசமாக எடுத்து வெளியிட்டுள்ள புகைப்படம் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
கமலின் தேவர் மகன் படம் மூலமாக குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நீலிமா ராணி, அதன் பின்னர் மொழி, தம், ராஜாதி ராஜா, நான் மகான் அல்ல, சந்தோஷ் சுப்ரமணியம் உள்ளிட்ட படங்களிலும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
சின்னத்திரையில் மிகவும் பிரபலமான நடிகையாக வலம் வரும் நீலிமா ராணி இதுவரை 50க்கும் மேற்பட்ட தொடர்களில் நடித்துள்ளார். குறிப்பாக வில்லி வேடத்தில் பின்னிபெடலெடுத்து வருகிறார்.
கோலங்கள், மெட்டி ஒலி சீரியல்கள் மூலமாக தமிழ் ரசிகர்களின் மனம் கவர்ந்த நீலிமா. அனைவரும் அறிந்த பிரபலமான சின்னத்திரை முகமாக வலம் வருகிறார்.
சீரியல், சினிமா, தொகுப்பாளினி, தயாரிப்பாளர் என பல அடையாளங்களைக் கொண்டுள்ள நடிகை நீலிமா ராணி. விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வந்த அரண்மனைகிளி சீரியலில் துர்கா என்ற வில்லி கதாபாத்திரத்தில் மிரட்டிய நீலிமாவை யாரும் மறந்திருக்க முடியாது.
தற்போது இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருப்பதால், அனைத்து சீரியல்களில் இருந்தும் விலகி தன்னுடைய குடும்பத்துடன் ஜாலியாக பொழுதை கழித்து வருகிறார்.
இந்நிலையில் மிகவும் வித்தியாசமாக Pregnancy போட்டோ ஷூட் ஒன்றை நடத்தி ரசிகர்களை வியக்க வைத்துள்ளார்...
கோல்டன் நிற எளிமையான சேலையில்... தாமரை பூ மேல் அமர்ந்து... தன்னுடைய கர்ப்பமான வயிறு தெரிய போஸ் கொடுத்துள்ளார்.
பார்ப்பதற்கு லட்சுமி தேவி போல் பிரதிபலிக்கும் இவரது லேட்டஸ்ட் புகைப்பட தொகுப்பு சமூக வலைத்தளத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.