- Home
- Cinema
- சிவாஜிக்கு ஒரு குரல்.. எம்.ஜி.ஆருக்கு ஒரு குரல்! நடிகர்களுக்காகவே குரலை மாற்றிய டி.எம்.எஸ் - வியக்க வைக்கும் ரகசியம்!
சிவாஜிக்கு ஒரு குரல்.. எம்.ஜி.ஆருக்கு ஒரு குரல்! நடிகர்களுக்காகவே குரலை மாற்றிய டி.எம்.எஸ் - வியக்க வைக்கும் ரகசியம்!
T M Soundararajan Voice Modulation Secrets in Tamil Cinema : தனது குரல் வைத்தே எந்த நடிகரின் படம் என்று எளிதில் கண்டுபிடிக்கும் வகையில் பாடலை கொடுப்பதில் வல்லவர் தான் டி எம் சவுந்தரராஜன்.

TMS Voice Modulation Secret
தமிழ் சினிமாவின் திரையுலகிற்கு 60 மற்றும் 70 களில் குரல் குரல் கொடுத்த புகழ்பெற்ற பின்னணிப் பாடகர் டி.எம்.சௌந்தரராஜன். இவர் ஒவ்வொரு நடிகர்களுக்கும் ஏற்ற வகையில் தனது உடல் மொழி மற்றும் உணர்வுகளை மாற்றி பாடுவதில் வல்லமை மிக்கவர் அதில் எந்தெந்த ஹீரோக்களை எப்படி எல்லாம் பாடியுள்ளார் என்பதை நாம் இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
T.M. Soundararajan Songs Tamil
1960கள் மற்றும் 70களில் தமிழ் சினிமாவினல் திரையுலகிற்கு குரல் கொடுத்த புகழ்பெற்ற பாடகர்களில் மாமேதி தான் டி.எம். சௌந்தரராஜன், கடுமையான சுவாசப் பிரச்சினையால் காலமானார். 'டி.எம்.எஸ்' என்று அன்பாக அழைக்கப்பட்ட சௌந்தரராஜன், தமிழ் திரைப்பட இசையில் வேறு யாரையும் விடாமல் ஆதிக்கம் செலுத்திவந்தார். அவரது இசை வாழ்க்கையின் மனம் துன்பட்டி இருந்தாலும் மனதை குணப்படுத்தும் அளவிற்கு இவ்வளவு இவரது குரல் நமக்கு மருந்தாக இருக்கும்.
TMS songs for Shivaji and MGR
காதல் பாட்டு கிராமத்து பாட்டு சாமி பாட்டு என்று அனைத்திலும் தனித்தே சிறந்து விளங்கினார். ஒரு சூழ்நிலைக்கேற்றும் ஒவ்வொரு நடிகர்கள் கேட்ட உடல் மொழி உணர்வுகளை அறிந்தும் பாடுவதில் வல்லமை வாய்ந்தவர். டி.எம்.எஸ் இன் இசை பயணம்: 1922 ஆம் ஆண்டு மதுரையில் துகுலுவ மீனாட்சி ஐயங்காருக்கு மகனாகப் பிறந்தவர் தான் சௌந்தரராஜன், சாரங்கபாணி பாகவதரிடம் பயிற்சி பெற்றார்.பிறகு புகழ்பெற்ற கர்நாடக இசைக் கலைஞர் அரியக்குடி ராமானுஜ ஐயங்கார் அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் தனது திறமைகளை வளர்த்துக் கொண்டார்.
T.M. Soundararajan Achievements
டி.எம்.எஸ் தனது காலத்தில் வாழ்ந்த சிறந்த பாடகர் மற்றும் நடிகர் எம்.கே.தியாகராஜ பாகவதரை பின்பற்றுவதில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். உண்மையில், டி.எம்.எஸ்ஸின் முதல் பாடலான ராதை என்னை விட்டு ஓடாதே தி பாடலைக் கிருஷ்ண விஜயம் திரைப்படத்தில் கேட்கும்போது, எம்.கே. தியாகராஜ பாகவதர் குரல் அப்படியே இருக்கும். கண்டுபிடிக்காத அளவுக்கு நேர்த்தியாக பாட இருப்பார் டி எம் எஸ்.
டி.எம். சௌந்தரராஜன் இசைத்திறமை:
டி எம் சௌந்தரராஜன் பாடும்போது அந்தந்த நடிகர்களின் உடல்மொழியைப் பின்பற்றியே பாடுவார். சிவாஜிக்கு பாடும்போது கணீர்க்கென்றும், எம்.ஜி. ராமச்சந்திரனுக்கு பாடும்போது மென்மையாகவும் குரலை மாற்றிப் பாடும் வித்தை அவருக்க கைவந்த கலையாகும். டிஎம்எஸ் பாடியதாலும் இவர்களின் படம் வெற்றி படமாக்கப்பட்டது என்றும் கூறலாம். ஏனென்றால் இவர் பாடிய ஒவ்வொரு பாடலிலும் மனம் உறுதியுடனும் மனம் வலியுடன் கண்ணீருடனும் பாடி இருப்பார்களுக்கு ஏற்றார் போல் இவர்கள் நடித்து தமிழ் சினிமாவை வியக்க வைப்பார்கள் என்றே சொல்லலாம்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.