adani group: ndtv: ‘ஹாஸ்டைல் டேக்ஓவர்’ என்றால் என்ன? இப்படித்தான் என்டிடிவியை கபளீகரம் செய்ததா அதானி குழுமம்

ஹாஸ்டைல் டேக்ஓவர் என்ற அடிப்படையில்தான் என்டிடிவியின் பங்குகளை அதானி குழுமம் வாங்கியதாக சந்தை வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்

What is a hostile takeover? How Adani Group moved stealthily to acquire NDTV stake

ஹாஸ்டைல் டேக்ஓவர் என்ற அடிப்படையில்தான் என்டிடிவியின் பங்குகளை அதானி குழுமம் வாங்கியதாக சந்தை வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்

என்டிடிவியின் 29.18 சதவீத பங்குகளை அதானி குழுமம் கையகப்படுத்தியுள்ளது, விரைவில் 26% பங்குகளையும் ஓபன் ஆஃபர் மூலம் வாங்க உள்ளது. ஆனால், இந்த பங்குகளை வாங்கும்போது தங்களிடம் எந்த கருத்தும், ஒப்புதலும், சம்மதமும் கேட்கவில்லை என்று என்டிடிவி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

What is a hostile takeover? How Adani Group moved stealthily to acquire NDTV stake

தலைமை நீதிபதி என்.வி.ரமணா நாளை ஓய்வு: உச்ச நீதிமன்றத்தில் 5 முக்கிய வழக்குகள் விசாரணை

என்டிடிவி உரிமையாளர்கள், நிர்வாக இயக்குநர்கள் அனுமதியின்றி ஒப்புதல் இன்றி என்டிடிவியை அதானி குழுமம் கபளீகரம் செய்ததை ஆங்கிலத்தில் ஹாஸ்டைல் டேக்ஓவர்(hostile takeover) என அழைப்பர். 

Hostile takeover என்றால் என்ன
ஹாஸ்டைல் டேக்ஓவர் என்பது, ஒரு நிறுவனம்(கையகப்படுத்தும் நிறுவனம்) மற்றொரு நிறுவனத்தை இலக்காக வைத்து, அதாவது கையகப்படுத்தும் நோக்கில், அந்த நிறுவனத்தின் இயக்குநர்கள் அனுமதியின்றி மேற்கொள்ளும் முயற்சியாகும்.

அதாவது நேர்மையான முறையில் நிறுவனத்தின் இயக்குநர்கள் ஒப்புதலுடன், வெளிப்படையாக நடப்பதுதான் நிறுவனத்தை வாங்குவதாகும். ஆனால், புறவழி மூலம், இயக்குநர்களுக்கே தெரியாமல் நிறுவனத்தை வாங்குவது ஹாஸ்டைல் டேக்ஓவராகும். 

What is a hostile takeover? How Adani Group moved stealthily to acquire NDTV stake

ரூ.20 கோடி தர்றோம்..! இந்த பக்கம் வாங்க! எம்எல்ஏக்களுக்கு பாஜக வலை: அம்பலப்படுத்திய ஆம் ஆத்மி

ஹாஸ்டைல் டேக்ஓவர் இரு வழியில் நடக்கும். முதல் வகை, கையகப்படுத்தும் நிறுவனம், கைப்பற்றப்போகும் நிறுவனத்தின் பங்குதாரர்களுக்கு வெளிப்படையாக ஆஃப் அளித்து, நிர்வாகத்துக்கு தெரியாமல் பங்குகளை வாஹ்குவதாகும். இதற்கு டெண்டர் ஆஃப் எனப் பெயர்

2வதாக, கையகப்படுத்தும் நிறுவனம், குறிப்பிட்ட நிறுவனத்தின் நிர்வாகத்துக்கு எதிராக மாற்ற நிறுவனத்துக்குள் குழப்பத்தை ஏற்படுத்தி கையகப்படுத்துவதாகும். 

அதானி குழும அறிவிப்பு! என்டிடிவி பங்கு 14 ஆண்டுகளில் இல்லாதஉயர்வு: அடுத்து என்ன நடக்கும்?

What is a hostile takeover? How Adani Group moved stealthily to acquire NDTV stake

ஹாஸ்டைல் டேக்ஓவர் நடந்த சம்பவங்கள்

1.    2010ம் ஆண்டு புகழ்பெற்ற பிரிட்டிஷ் நிறவனமான கேட்பரி நிறுவனத்தை கிராப்ட் புட் நிறுவனம் கையகப்படுத்தியது. 2009ம் ஆண்டு செப்டம்பரில் கிராப்ட் புட் சிஇஓ ஐரனி ரோசன்பீல்ட் தனது நோக்கத்தை தெளிவுபடுத்தி, 16.3 பில்லியன் டாலருக்கு வாங்கினார்.

2.    1993ம் ஆண்டு, ஜவுளி உலகின் ஜாம்பவான் நுஸ்லி வாடியா, ராஜன் பிள்ளையிடம் இருந்து பிரிட்டானியா நிறுவனத்தை வாங்கினார். இது ஹாஸ்டைல் டேக்ஓவருக்கு சிறந்த உதாரணமாகும். நிறுவனத் தலைவர் ராஜன் பிள்ளைக்குத் தெரியாமல் 38சதவீத பங்குகளை வாடியா விலைக்கு வாங்கினார். 

என்டிடிவி ஒப்புதல் இல்லாமல் 29% பங்குகளை வாங்கிய அதானி குழுமம் : விவரம் என்ன?

3.    1998ம் ஆண்டு ராசி சிமெண்ட் நிறுவனத்தை இந்தியா சிமெண்ட் நிறுவனம் வாங்கியது. 
4.    2009ம் ஆண்டு இமாமி நிறுவனம் ஜண்டு நிறுவனத்தையும், லார்சன் அன்ட் டூப்ரோ நிறுவனம் மைன்ட்ட்ரீ நிறுவனத்தை விலைக்கு வாங்கியது.

 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios