Asianet News TamilAsianet News Tamil

aap: modi:ரூ.20 கோடி தர்றோம்..! இந்த பக்கம் வாங்க! எம்எல்ஏக்களுக்கு பாஜக வலை: அம்பலப்படுத்திய ஆம் ஆத்மி

ஆம்ஆத்மி கட்சியைச் சேர்ந்த 4 எம்எல்ஏக்களுக்கு தலா ரூ.20 கோடி தருகிறோம், பாஜக பக்கம் வந்துவிடுங்கள் என்று பாஜகதெரிவித்ததாக ஆம் ஆத்மி கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

The BJP offered Rs 20 crore to each of the four MLAs who switched sides: AAP
Author
New Delhi, First Published Aug 24, 2022, 4:04 PM IST

ஆம்ஆத்மி கட்சியைச் சேர்ந்த 4 எம்எல்ஏக்களுக்கு தலா ரூ.20 கோடி தருகிறோம், பாஜக பக்கம் வந்துவிடுங்கள் என்று பாஜகதெரிவித்ததாக ஆம் ஆத்மி கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

அவ்வாறு பாஜக பக்கம் வராவிட்டால் போலி வழக்குகள், சிபிஐ, அமலாக்கப்பிரிவு விசாரணைகளை எதிர்கொள்ள நேரிடும் என பாஜக மிரட்டல் விடுத்துள்ளது என்று ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது.
ஆம் ஆத்மி கட்சியின் தேசிய செய்தித்தொடர்பாளரும் மாநிலங்களவை எம்.பி.யுமான சஞ்சய் சிங் இன்று நிருபர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது

The BJP offered Rs 20 crore to each of the four MLAs who switched sides: AAP

எங்கள் கட்சி எம்எல்ஏக்கள் அஜய் தத், சஞ்சீவ் ஜா, சோம்நாத் பாரதி, குல்தீப் குமார் ஆகியோரை பாஜக தலைவர்கள் நட்புறவு அடிப்படையில் அனுகியுள்ளார்கள்.  இந்த 4 எம்எல்ஏக்களுக்கும் தலா ரூ.20 கோடி தருகிறோம். பாஜகவுக்கு வந்துவிடுங்கள் என்று பேரம் பேசியுள்ளனர். மற்ற எம்எல்ஏக்களையும் அழைத்துவந்தால் ரூ.25 கோடி தருகிறோம் என்று பாஜக தலைவர்கள் கூறியுள்ளனர். 

இந்த கோரிக்கையை ஏற்காவிட்டால், பாஜகவில் சேராவிட்டால் பொய் வழக்குகளை சந்திக்க நேரிடும், மணிஷ் சிஷோடியா சந்திப்பதுபோல் அமலாக்கப்பிரிவு, சிபிஐ வழக்குகளையும், ரெய்டுகளையும் சந்திக்க நேரிடும் என மிரட்டியுள்ளார்கள்.

கெஜ்ரிவால் அரசை கவிழ்க்கும் முயற்சியில் பிரதமர் மோடி பல்வேறு யுத்திகளை மேற்கொண்டு வருகிறார், ஆம் ஆத்மி கட்சியை உடைக்க முயற்சிஎடுக்கிறார். தன்னுடைய ஏவல் படைகளான சிபிஐ, அமலாக்கப்பிரிவுகளைப் பயன்படுத்தி, ஆம் ஆத்மி அரசை கவிழிக்கவும் மோடி முயல்கிறார். எங்கள் எம்எல்ஏக்களுக்கு பணம் கொடுத்து ஆசை வார்த்தை கூறியும், அவ்வாறு ஒத்துழைக்காதவர்களை மிரட்டியும் வருகிறார்கள்.

The BJP offered Rs 20 crore to each of the four MLAs who switched sides: AAP

நட்புறவு அடிப்படையில் சந்திக்க விரும்பதாக தத், ஜா,பாரதி குமார் ஆகியோரிடம் பேசி, இந்த சலுகைத்திட்டத்தை பாஜக தெரிவித்துள்ளது.

மகாராஷ்டிராவில் பாஜகவின் பரிசோதனைத் திட்டம் சிவசேனாவிடம் வெற்றிபெற்றுவிட்டது. ஆனால், டெல்லியில் மணிஷ் சிஷோடியாவிடம் தோற்றுவிட்டது, இப்போது எங்கள் எம்எல்ஏக்களிடம் பரிசோதிக்கிறார்கள்.

மோடிஜி உங்கள் செயல் வெட்கமாக இருக்கிறது. இதுபோன்ற செயலை நிறுத்திக்கொண்டு நாட்டின் விலைவாசி உயர்வு, வேலையின்மை பிரச்சினையைத் தீர்ப்பதில் கவனம் செலுத்துங்கள்.
இவ்வாறு சஞ்சய் சிங் தெரிவித்தார்

The BJP offered Rs 20 crore to each of the four MLAs who switched sides: AAP

டெல்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அளித்த பேட்டியில் கூறுகையில் “ எங்கள் கட்சி எம்எல்ஏக்கள் சிலர் என்னிடம் வந்து நாங்கள் மிரட்டப்படுகிறோம், கட்சியை உடைக்க எங்களிடம் பேரம் பேசப்படுகிறது என்று என்னிடம் தெரிவித்தார்கள். இது மிகவும் தீவிரமான செய்தி. எங்களின் அரசியல் விவகாரக் குழு இதுதொடர்பாக இன்று மாலை கூடி விவாதிக்கும்” எனத் தெரிவித்தார்
 

Follow Us:
Download App:
  • android
  • ios