adani: ndtv:adani group: என்டிடிவி ஒப்புதல் இல்லாமல் 29% பங்குகளை வாங்கிய அதானி குழுமம் : விவரம் என்ன?
என்டிடிவி(NDTV) குழுமத்தின் 29.18 சதவீதப் பங்குகளை மறைமுகமாக அதானி குழுமம் வாங்கஉள்ளது. ஆனால், இதை வாங்குவதில் அதானி குழுமத்துக்கு பெரும் சிக்கலும், குழப்பமும் இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
என்டிடிவி(NDTV) குழுமத்தின் 29.18 சதவீதப் பங்குகளை மறைமுகமாக அதானி குழுமம் வாங்கஉள்ளது. ஆனால், இதை வாங்குவதில் அதானி குழுமத்துக்கு பெரும் சிக்கலும், குழப்பமும் இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
என்டிடிவியை நடத்திவரும் பிரணாய் ராய், ராதிகா ஆகியோரின்(RRPRH) நிறுவனத்தின் அனுமதியில்லாமல் இந்த பங்குகளை வாங்குவதற்கு அதானி குழுமம் ஒப்பந்தம் செய்துள்ளது. ஒரு நிறுவனத்தின் பங்குகளை அதன் உரிமையாளர்கள், பங்குதாரர்கள் ஒப்புதல் இன்றி வாங்குவதை ஆங்கிலத்தில் “hostile takeover” என்று அழைக்கப்படுகிறது.
அதானி கெத்து! சொத்து மதிப்பு ஓர் ஆண்டில் எவ்வளவு அதிகரிப்பு? அம்பானி, டாடா குழுமம் பின்னடைவு
ரூ.421 கோடி வருவாய்
என்டிடிடி நிறுவனம் சார்பில் ஆங்கிலத்தில் ஒரு செய்தி சேனலும், இந்தியில் ஒருசெய்தி சேனலும், என்டிடிவி பிராபிட் என்ற வர்த்தகத்துக்கான ஒரு சேனலும்இயங்கி வருகிறது.
என்டிடிடிவியின் பங்குகள் மதிப்புஇந்த ஆண்டு மட்டும் 300 மடங்கு உயர்ந்திருக்கிறது. மும்பைப் பங்குச்சந்தையில் ஒரு பங்கு மதிப்பு நேற்றைய நிலவரப்படி ரூ.366.20 என்று இருக்கிறது. என்டிடிவியின் கடந்த ஆண்டு வருவாய் ரூ.421 கோடியாகும், நிகர லாபம் ரூ.85 கோடியாகும்.
அதானியின் தடம்
இந்நிலையில் அதானி குழுமம் கடந்த சில மாதங்களாகத்தான் ஊடகத் துறையில் தனது தடத்தை பதித்துள்ளது. அதானிகுழுமத்தின் அதானி மீடியா வென்சர்ஸ் பிரிவின் தலைவராக மூத்த பத்திரிகையாளர் சஞ்சய் புகாலியா கடந்த செப்டம்பரில் நியமிக்கப்பட்டார். அவரின் வழிகாட்டலின்படிதான் அதானி மீடியா வென்சர்ஸ் செயல்பட்டு வருகிறது
கடன் வாங்குறது காஸ்ட்லி! EMI உயரும்! LIC ஹவுசிங் பைனான்ஸ் வட்டியை உயர்த்தியது
பங்குகள்
இந்நிலையில் என்டிடிவி உரிமையாளர் பிரனாய் ராய்(15.94%) அவரின் மனைவி ராதிகா(16.32%) ஆகியோர் நடத்தும் ஆர்ஆர்பிஆர் நிறுவனத்தின் 29.18 சதவீதப் பங்குகள் உள்ளன. மீதமுள்ள 61.45 சதவீதப் பங்குகள் பிறநிறுவனங்கள், முதலீட்டாளர்கள் வசம் உள்ளன.
கடன்
ஆர்ஆர்பிஆர் நிறுவனம் கடந்த 2009 -ம் ஆண்டு தனது கைவசமுள்ள 29.18 சதவீத என்டிடிவி பங்குகளை விஷ்வபிரதான் கமர்சியல் லிமிடெட் (VCPL) நிறுவனத்திடம் அடமானம் வைத்து 403 கோடி ரூபாய் கடன் பெற்று இருந்தது. இந்த விஷ்வபிரதான் கர்ஷியல் லிமிடட் நிறுவனம் அதானி குழுமத்தின் சார்பில் அதானி என்டர்பிரைசஸ் நிறுவனத்தால் மறைமுகமாக நடத்தப்படுவதாகும்.
விபிசிஎல் நிறுவனத்திடம் பெற்ற கடனை திரும்பச் செலுத்தும் காலம் 10 ஆண்டுகளாக என்டிடிவிக்கு நிர்ணயக்கப்பட்டு அதற்குரிய காலமும் முடிந்துவிட்டது. கடனை ஆர்ஆர்பிஆர் ஹோல்டிங் நிறுவனம் திரும்ப செலுத்தாத காரணத்தினால்
அதானிக்கு விற்பனை
தற்போது விசிபிஎல் நிறுவனம் அந்தப் பங்குகளை அதானி குழுமத்துக்கு விற்பனை செய்ய இருக்கிறது என்று நேற்று மாலை தகவல் வெளியானது. அதானி மீடியா வென்சர்ஸ் நிறுவனத்தின் கிளை நிறுவனம்தான் விஷ்வ பிரதான் கமர்சியல் லிமிடெட் என்பது குறிப்பிடத்தக்கது.
இனி ஏமாற்ற முடியாது! தரம் குறைந்த, உண்மையில்லா செய்திகள் ரேங்கிங் ஆகாது: கூகுள் கிடுக்கிப்பிடி
அனுமதி பெறவில்லை
விபிசில் நிறுவனத்திடம் இருந்து பங்குச்சந்தையில் பைலிங் நடந்தவுடன் என்டிடிவி உரிமையாளர்கள் பிரனாய் ராய், ராதிகா தரப்பில் மறுப்பு அறிக்கை வெளியானது. அதில் “ என்டிடிடி நிறுவனர்கள், புரமோட்டர்ஸ்கலான பிரனாய் ராய், ராதிகா ஆகியோருடன் எந்தவிதமான ஆலோசனையும், விவாதமும், தகவலும் இல்லாமல் விஷ்வபிரதான் கமர்சியல் லிமிடெட் நிறுவனம் ஆர்ஆர்பிஆர் நிறுவனத்தின் 29.18 சதவீதப் பங்குகளை மாற்றப் போவதாகத் தெரிவித்துள்ளது.
கடந்த 2009-10ம் ஆண்டு என்டிடிவிக்கு விசிபிஎல் நிறுவனம் வழங்கிய கடன் அடிப்படையில் இந்த உரிமையை எடுத்துக்கொண்டு பங்குகளை மாற்ற முயல்கிறது.
என்டிடிவி உரிமையாளர்களான பிரனாய் ராய், ராதிகா ஆகியோரின் எந்தவிதமான ஒப்புதலும், கலந்தாய்வும், ஆலோசனையும், விவாதமும்,இன்றி பங்குகளை விசிபிஎல் நிறுவனம் மாற்ற இருக்கிறது. இந்த செய்தியே இன்றுதான் எங்களுக்குத் தெரியும். இவ்வாறு என்டிடிவி நிறுவனம் பங்குச்சந்தையில் தெரிவித்துள்ளது.
இதனால் அதானி குழுமம் தொடர்ந்து என்டிடிவி பங்குகளை வைத்திருக்குமா என்பது வரும் நாட்களில் தெரியவரும்.