google update: இனி ஏமாற்ற முடியாது! தரம் குறைந்த, உண்மையில்லா செய்திகள் ரேங்கிங் ஆகாது: கூகுள் கிடுக்கிப்பிடி

கூகுள் பயனர்களுக்கு நம்பகத்தன்மையான, உதவிகரமானத் தகவல்கள் கிடைப்பதற்காக  தேடுதல் தளத்தில் குறைந்த தரம்கொண்ட, போலியான செய்திகள் வராமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Googles latest update eliminates 'low-quality, unoriginal' content from search results.

கூகுள் (google)பயனர்களுக்கு நம்பகத்தன்மையான, உதவிகரமானத் தகவல்கள் கிடைப்பதற்காக  தேடுதல் தளத்தில் குறைந்த தரம்கொண்ட, போலியான செய்திகள் வராமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதற்கு "ஹெல்ப்புல் கன்டென்ட் அப்டேட்"(helpful content update) என்று கூகுள் பெயரிட்டுள்ளது. இந்த புதிய அப்டேட்டை வரும் 22ம் தேதி முதல் ஆங்கில மொழி பயனாளிகளுக்கு மட்டும் கூகுள் நிறுவனம் அறிமுகப்படுத்துகிறது.

10 கோடி வீடுகளுக்கு குழாய் மூலம் குடிநீர்:மக்களின் பங்களிப்பால் சாத்தியம்:பிரதமர் மோடி

Googles latest update eliminates 'low-quality, unoriginal' content from search results.

அதாவது தற்போது இணையதளங்களில் சர்ச் எஞ்சினில் முதலிடம் பிடிப்பதற்காகவும், ரேங்கிங் ஆக வேண்டும் என்பதற்காகவும் அவசரமாக செய்திகள், கொடுக்கப்படுகின்றன. அதில் பல நேரங்களில் முக்கியத் தகவல்கள் இல்லாமல் போய்விடுகின்றன. இதனால் ஆவலுடன் எதிர்பார்த்து படிக்கும் வாசகர்கள், பயனாளிகளுக்கு ஏமாற்றம் மிஞ்சுகிறது.

இதைத் தடுக்கும் பொருட்டு "ஹெல்பஃபுல் கன்டென்ட் அப்டேட்" கொண்டுவரப்படுகிறது. இதன்படி ஏதாவது ஒரு சம்பவம், பொருள், முக்கிய மனிதர், உள்ளிட்டவைப் பற்றி தரம் குறைந்த, தகவல்கள் குறைவாக, அல்லது உண்மைக்கு மாறான தகவல்கள் இருந்தால் அந்த செய்திகளை கூகுள் பயனாளிகளுக்கு காண்பிக்காது. 

 

கிருஷ்ண ஜெயந்தி திருநாள்: தமிழக மக்களுக்கு தமிழில் வாழ்த்துக் கூறிய பிரியங்கா காந்தி

அத்தகைய செய்திகளை தடுத்து, வடிகட்டிவிடும். வாசகர்கள் அல்லது பயனாளிகளுக்கு நேர்மையான, ஆழமான தகவல்கள் படித்தால் மனநிறைவு ஏற்படக்கூடிய தகவல்களுக்கும், செய்திகளுக்கும் முன்னுரிமை அளித்து தேடுதல் தளம் காண்பிக்கும்.

Googles latest update eliminates 'low-quality, unoriginal' content from search results.

இதனால் ரேங்கிங் ஆக வேண்டும் என்பதற்காக தரம் குறைவாக, விவரங்கள் இல்லாத செய்திகள், உண்மைக்கு மாறாக, கற்பனையாக எழுதும் செய்தி தளங்களின் செய்திகள் தானாகவே குறைந்துவிடும்.

இது குறித்து கூகுள் தேடுதல் தளத்துக்கான பொது அதிகாரி டேனி சல்லிவன் அவருடைய பிளாக்கில் கூறுகையி்ல் “ இணையதளத்தில் கிளிக்குகளை பெற வேண்டும் என்பதற்காகவே கவர்ச்சிகரமான தலைப்புகளுடன் செய்திகள் வரும், வாசகர்களுக்கு படிக்கும் ஆர்வத்தை தூண்டிவிடும்.

ஆனால் விவரங்கள் ஏதும் இருக்காது. இதுபோன்ற செய்திகள் பற்றி நன்கு தெரியும். அடுத்த வாரத்திலிருந்து உலகம்முழுவதும் ஆங்கிலம் பயன்பாட்டாளர்களுக்காக, தேடுதலில் தீவிரமான மேம்பட்ட விஷயங்களை சேர்க்க இருக்கிறோம்.

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியுடன் சுப்பிரமணியன் சுவாமி திடீர் சந்திப்பு

இது கூகுள் தளத்தில் குறிப்பிட்ட விஷயத்தைத் தேடுவோருக்கு உதவியாக இருக்கும். பயனற்ற, போலியான, தவறான தகவல்கள், கொண்டவை தடுக்கப்படும். அந்த செய்திகள் ரேங்கிங் ஆகாது என்பதை உறுதி செய்வோம். குறிப்பாக ஆன்-லைன் கல்வி , பொழுதுபோக்கு, ஷாப்பிங், டெக்னாலஜி தொடர்பானவை  ஆகியவற்றுக்கு உண்மைக்கு மாறான, தவறான செய்திகள் வந்தால் தடுக்கப்படும்” எனத் தெரிவித்தார்

Googles latest update eliminates 'low-quality, unoriginal' content from search results.

உதாரணமாக, புதிய திரைப்படம் குறித்து ஒருவர் கூகுள் தளத்தில் தேடும்போது, அது தொடர்பான ஏராளமான தகவல்கள், இணையதளங்கள் கிடைக்கும். ஆனால், அவை நம்பகமானவையா, அந்த தளத்துக்கு சென்றால் நம்பிக்கையான தகவல்கள் கிடைக்குமா எனத் தெரியாது. 

ஆனால் இந்த அப்டேட் நடைமுறைக்குவந்துவிட்டால், நம்பிக்கையான தளங்களில் இருந்து, அதிகமான விவரங்கள் கொண்ட, நம்பகத்தன்மையான, பயனுள்ள தகவல்கள், இதற்குமுன் தெரி்ந்திராத, ஸ்வரஸ்யமான தகவல்கள் மட்டுமே வாசகர்களுக்கு கிடைக்கும். அதற்கு ஏற்றார்போல் கூகுள் தேடுதல் தளம் மாற்றிஅமைக்கப்பட்டுள்ளது


 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios