Krishna Janmashtami: கிருஷ்ண ஜெயந்தி திருநாள்: தமிழக மக்களுக்கு தமிழில் வாழ்த்துக் கூறிய பிரியங்கா காந்தி

கிருஷ்ண ஜெயந்தி பண்டிகையான இன்று தமிழக மக்களுக்கு தமிழில் ட்விட் செய்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

congress leader Priyanka Gandhi wishes the people of Tamil Nadu in Tamil on  Krishna Janmashtami

கிருஷ்ண ஜெயந்தி பண்டிகையான இன்று தமிழக மக்களுக்கு தமிழில் ட்விட் செய்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

இந்துக்களின் முக்கியப் பண்டிகைகளில் ஒன்று ஸ்ரீ கிருஷ்ணர் அவதரித்த கிருஷ்ண ஜெயந்தி நன்னாளாகும். வடமாநிலங்களில் தேய்பிறை அஷ்டமி திதியான இன்றும், தமிழகத்தில் சிலபகுதிகளில் கிருஷ்ணர் பிறந்த ரோஹினி நட்சத்திரத்தின்படி நாளை(சனிக்கிழமை) கிருஷ்ண ஜெயந்தி பண்டிகை கொண்டாடப்படுகிறது. 

மொபைல் போன் பேட்டரி வெடித்து திடீர் தீ விபத்து: உயிர்தப்பிய வியாபாரி: பேட்டரி பாதுகாப்புக்கு அட்வைஸ் என்ன?

இந்த நன்னாளில் வீட்டில் குழந்தைகளை கிருஷ்ணர் வேடம் அணிவித்து பார்த்து அழகுபார்ப்பார்கள், இதன் மூலம் வீட்டுக்கு கிருஷ்ணர் வந்துவிட்டார் என்று இந்துக்கள் நம்புகிறார்கள்.

 

கிருஷ்ணஜெயந்தி பண்டிகை வடமாநிலங்களில் 10 நாட்களுக்கு முன்பேதொடங்கிவிடும். அந்த வகையில் வடமாநிலங்களில் கிருஷ்ண ஜெயந்தி பண்டிகை இன்று கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

தமிழகத்திலும் கிருஷ்ணஜெயந்தி பண்டிகை கொண்டாடப்பட்டுவரும்நிலையில் தமிழர்களுக்கு காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தமிழில் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

ரூ.250 கோடியில் மகளுக்கு ‘பாகுபலி’ திருமணம் செய்த டிஆர்எஸ் முன்னாள் எம்.பி: வியக்க வைத்த வசதிகள்

பிரியங்கா காந்தி ட்விட்டரில் பதிவிட்ட வாழ்த்துச் செய்தியில் “கிருஷ்ணா, கோவிந்தா, முராரே, நாராயண, வாசுதேவா: இனிய கிருஷ்ணா ஜெயந்தி வாழ்த்துக்கள். தேவகி மகன், கிருஷ்ணரின் அருள் எப்போதும் உங்களுக்கு கிடைக்கட்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios