Asianet News TamilAsianet News Tamil

மொபைல் போன் பேட்டரி வெடித்து திடீர் தீ விபத்து: உயிர்தப்பிய வியாபாரி: பேட்டரி பாதுகாப்புக்கு அட்வைஸ் என்ன?

மத்தியப் பிரதேசத்தில் பாலகாட் மாவட்டத்தில் மொபைல் போன் பேட்டரி வெடித்து கண்ணிமைக்கும் நேரத்தில் தீவிபத்து ஏற்பட்டது. புத்சாலித்தனமாக அந்த போனை கீழே தள்ளிவிட்டு அதிர்ஷ்டவசமாக கடையின் உரிமையாளர் உயிர்தப்பினார்.

madhya pradesh : On camera, a cellphone battery bursts into flames.
Author
bhopal, First Published Aug 19, 2022, 11:36 AM IST

மத்தியப்பிரதேசத்தில் பாலகாட் மாவட்டத்தில் மொபைல் போன் பேட்டரி வெடித்து கண்ணிமைக்கும் நேரத்தில் தீவிபத்து ஏற்பட்டது. புத்சாலித்தனமாக அந்த போனை கீழே தள்ளிவிட்டு அதிர்ஷ்டவசமாக கடையின் உரிமையாளர் உயிர்தப்பினார்.

இந்த காட்சிகள் அனைத்தும் கடையில் இருந்த சிசிடிவி கேமிராவில் பதிவாகியிருந்தது.

ரூ.250 கோடியில் மகளுக்கு ‘பாகுபலி’ திருமணம் செய்த டிஆர்எஸ் முன்னாள் எம்.பி: வியக்க வைத்த வசதிகள்

பாலகாட் மாவட்டத்தில் பண்டி மொபைல் மற்றும் ரீபேர் கடை உள்ளது. இந்த கடைக்கு வந்த ஒரு வாடிக்கையாளர் கடையின் உரிமையாளர் தனது செல்போனைக் கொடுத்து சரி செய்யக் கூறினார்.

கடையின் உரிமையாளர் செல்போனை வாங்கி, அதன்பின்பக்கத்தை திறக்க முயன்றபோது, திடீரென பெரும் சத்தத்துடன் செல்போன் வெடித்து தீப்பிடித்தது. உடனடியாக சுதாரித்த கடை ஊழியர், தீப்பிடித்த அந்த செல்போனை கீழே தள்ளிவிட்டார். செல்போனை சரி செய்யக் கொடுத்தவர் திகைப்பில் நின்றவாரே பார்த்தார். 

உலகிலேயே அதிக மாசுள்ள நகரங்களில் டெல்லி, கொல்கத்தா, மும்பைக்கு இடம்: ரேங்க் என்ன?

கடையில் நடந்தது குறித்து உரிமையாளர் கூறுகையில் “ செல்போனில் ஏதோ கோளாறு இருப்பதால் பேட்டரியை பார்க்க முயன்றேன். அப்போது, திடீரென பேட்டரி வெடித்து தீப்பிடித்தது. நல்லவேளையாக எனக்கு காயம் ஏதும் இல்லை. உடனடியாக செல்போனை தூக்கிவீசிவிட்டேன் இதுதான் நடந்தது” எனத் தெரிவித்தார்

ஓலா, உபர் போன்று அரசு சார்பில் புதிய ஆன்லைன் டாக்சி சேவை.. நாட்டிலே முதல்முறையாக கேரளாவில் அறிமுகம்..

செல்போன் பயன்படுத்துவோருக்கு அட்வைஸ் குறித்து கேட்டபோது, “ செல்போன் பயன்படுத்துவோர், செல்போன் பேட்டரி திடீரென உப்பி, வீக்கமாக இருந்தால் செல்போனை திறக்க முயலாதீர்கள். உடனடியாக ரிப்பேர் செய்யும் கடையில் கொடுத்துவிடுங்கள். எனக்கு நேர்ந்த விபத்து உங்களுக்கும் வந்துவிடக்கூடாது” எனத் தெரிவித்தார்.

Follow Us:
Download App:
  • android
  • ios