HarGharJalUtsav: modi 10 கோடி வீடுகளுக்கு குழாய் மூலம் குடிநீர்:மக்களின் பங்களிப்பால் சாத்தியம்:பிரதமர் மோடி

அனைத்து வீடுகளுக்கும் குழாய் மூலம் சுத்தமான குடிநீர் வழங்கும் முதல் மாநிலம் கோவா என்ற பெருமை பெற்றுள்ளது. ஜல் ஜீவன் திட்டம் மக்களின் பங்களிப்பால் வெற்றி பெற்றுள்ளது என்று பிரதமர் மோடி பெருமிதத்தோடு குறிப்பிட்டார்.

HarGharJalUtsav : Piped water supply to 10 crore houses achieved: pm modi

அனைத்து வீடுகளுக்கும் குழாய் மூலம் சுத்தமான குடிநீர் வழங்கும் முதல் மாநிலம் கோவா என்ற பெருமை பெற்றுள்ளது. ஜல் ஜீவன் திட்டம் மக்களின் பங்களிப்பால் வெற்றி பெற்றுள்ளது என்று பிரதமர் மோடி பெருமிதத்தோடு குறிப்பிட்டார்.

ஹர் கர் ஜல் உத்சவ் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி இன்று காணொலி மூலம் பங்கேற்றார். அப்போது, காணொலி வாயிலாகப் பிரதமர் மோடி பேசியதாவது:

இந்த தேசயம் முக்கியமான மைல்கல்லை அடைந்திருக்கிறது. நாட்டின் பல்வேறு மாநிலங்களில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் திறந்தவெளிக் கழிப்பிடங்கள் இல்லாததாக மாறிவிட்டது. 

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியுடன் சுப்பிரமணியன் சுவாமி திடீர் சந்திப்பு

3-வது மிகப்பெரிய சாதனை ஸ்வச் பாரத் அபியான். கடந்த சில ஆண்டுகளுக்கு முன், நாட்டு மக்களின் முயற்சிகளால் தற்போது இந்த தேசம் திறந்தவெளிக்கிழிப்படம் இல்லாததாக மாறும் அறிவிக்கப்பட்டது.

HarGharJalUtsav : Piped water supply to 10 crore houses achieved: pm modi

அதன்பின் தற்போது கிராமங்களை திறந்தவெளிக்கழிப்பிடம் இல்லாததாக மாற்றியிருக்கிறோம்.
ஒரு அரசு அமைவதற்கு அதிக சிரத்தை, முயற்சி எடுக்காது. ஆனால் ஒருதேசத்தை கட்டமைக்க கடினஉழைப்பு அவசியம். நாட்டை கட்டமைக்கும் பாதையை அனைவரும் தேர்ந்தெடுத்துள்ளம், ஆதலால் நடப்பு மற்றும் எதிர்கால சவால்களை நிலையாக இருந்துஅனைவரும் தீர்க்க வேண்டும். 

தேசத்தைப் பற்றிக் கவலைப்படாதவர்கள், தேசத்தின் நடப்பு மற்றும் எதிர்காலம் பற்றியும், நலன்பற்றியும் கவலைப்படமாட்டார்கள். குடிநீர் பற்றி அவர்கள் மிகப்பெரிய வாக்குறுதி அளிப்பார்கள் ஆனால், அது மிகப்பெரிய நோக்கில் அதைநோக்கிஒருபோதும் செயல்படமாட்டார்கள்

கிருஷ்ண ஜெயந்தி திருநாள்: தமிழக மக்களுக்கு தமிழில் வாழ்த்துக் கூறிய பிரியங்கா காந்தி

HarGharJalUtsav : Piped water supply to 10 crore houses achieved: pm modi

இந்தியாவில் ஈரநிலங்கள் எண்ணிக்கை 75 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 8 ஆண்டுகளில்தான் 50 நிலங்கள் உயர்ந்துள்ளன. நீரிலிருந்து மக்களைப் பாதுகாக்க அனைத்து தரப்பிலும் அரசு முயற்சித்து வருகிறது, அதற்கான முயற்சியில் ஒவ்வொரு திசையிலிருந்தும் முடிவுகள் கிடைத்து வருகின்றன.

3 ஆண்டுகளுக்குள் கிராமங்களில் உள்ள 7 கோடி வீடுகளுக்கு ஜல் ஜீவன் திட்டத்தின் மூலம் குழாய் மூலம் குடிநீர் வழங்கப்பட்டுள்ளது. இது சாதாரணமான சாதனை அல்ல. 70 ஆண்டுகள் சுதந்திரத்துக்குப்பின், 3 கோடி கிராமமக்களுக்கு மட்டுமே குழாயில் குடிநீர் வழங்கப்பட்டிருந்தது. 

 

நாட்டிலேயே முதல்மாநிலமாக கோவாவில் அனைத்து வீடுகளுக்கும் குழாய்மூலம் சுத்தமான குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டு சான்று வழங்கப்பட்டுள்ளது. யூனியன் பிரதேசங்களான தாத்ரா நாகர் ஹாவேலி, டையு டாமன் ஆகியவற்றிலும் வீடுகளுக்கு குழாய்மூலம் சுத்தமான குடிநீர் முழுமையாக வழங்கப்பட்டுள்ளன.

HarGharJalUtsav : Piped water supply to 10 crore houses achieved: pm modi

நாட்டின் ஜல் ஜீவன் திட்டம் வெற்றி என்பது மக்களின் பங்களிப்பு, அரசியல் தீர்மானம், மாநிலஅரசுகள் ஒத்துழைப்பு, வளங்களை அதிகபட்சமாக பயன்படுத்துவதால் உண்டானது.

36 மணிநேரத்துக்கு ரூ.38 லட்சம் செலவு! ட்ரம்ப் வருகைக்கு வாரி இறைத்த மத்திய அரசு

இந்தியாவில் கிராமங்களில் உள்ள 10 கோடி வீடுகளுக்கு குழாய் மூலம் குடிநீர் வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வீட்டுக்கும் குழாய் மூலம் குடிநீர் வழங்கப்படும் என்ற மத்திய அரசின் பிரச்சாரத்துக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி. இது அனைவரின் முயற்சிக்கு கிடைத்த வெற்றியாகும்.

நான் ஒவ்வொருவருக்கும் வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறேன் குறிப்பாக பெண்கள் சகோதரிகளுக்கு இந்த சாதனையை எட்ட துணையாக இருந்தமைக்கு வாழ்த்துகள். 

இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்


 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios