adani: ambani:அதானி கெத்து! சொத்து மதிப்பு ஓர் ஆண்டில் எவ்வளவு அதிகரிப்பு? அம்பானி, டாடா குழுமம் பின்னடைவு

பங்குச்சந்தையில் அதிக முதலீட்டு மதிப்பில் தொடர்ந்து முகேஷ் அம்பானி குழுமத்தைப் பின்னுக்குத் தள்ளி, அதானி குழுமம் 2-வது இடத்தில் இருந்து வருகிறது. முதலிடத்தில் டாடா குழுமம் இருந்து வருகிறது. 

Adani maintains his market cap lead over Mukesh Ambani at Rs 19.44 trillion

பங்குச்சந்தையில் அதிக முதலீட்டு மதிப்பில் தொடர்ந்து முகேஷ் அம்பானி குழுமத்தைப் பின்னுக்குத் தள்ளி, அதானி குழுமம் 2-வது இடத்தில் இருந்து வருகிறது. முதலிடத்தில் டாடா குழுமம் இருந்து வருகிறது. 

பங்குச்சந்தையில் டாடா குழுமத்தின் முதலீட்டு மதிப்பு 21.73 லட்சம் கோடியாகும். 2-வது இடத்தில் இருக்கும் அதானி குழுமத்தின் மதிப்பு ரூ.19.44லட்சம் கோடியாகும். 3-வது இடத்தில் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் குழுமம் ரூ.17.89 லட்சம் கோடியாக இருக்கிறது.

Adani maintains his market cap lead over Mukesh Ambani at Rs 19.44 trillion

ஒரு நேரத்தில் 2-வது இடத்தில் இருந்த முகேஷ் அம்பானி குழுமம் இப்போது 3வது இடத்தில் தொடர்ந்து பின்தங்கி வருகிறது.

ஆனால், அதானி குழுமம் தன்னுடைய துறைகள் அனைத்திலும் சிறப்பாகச் செயல்படுவதாலும், கொரோனாவுக்குபின், நிறுவனங்களின் லாபம் அதிகரிப்பாலும் முதலீட்டு மதிப்பு அதிகரித்துள்ளது.

ரூ.10 லட்சம் கோடி அதிகரிப்பு

நடப்பு காலாண்டர் ஆண்டில் மட்டும் அதானி குழும நிறுவனங்கள் மதிப்பு ரூ.10 லட்சம் கோடி அதிகரித்துள்ளது, ஆனால், முகேஷ் அம்பானி குழுமத்தின் மதிப்பு ரூ.1.61 லட்சம் கோடிதான் அதிகரித்துள்ளது. அதேசமயம், டாடா குழுமத்தின் மதிப்பும் குறைந்துள்ளது.

Adani maintains his market cap lead over Mukesh Ambani at Rs 19.44 trillion

அதானி குழுமத்தில் இருக்கும் பட்டியலிடப்பட்ட 7 நிறுவனங்களின் மதிப்பு கடந்த 2021ம் ஆண்டு டிசம்பரில் ரூ.9.62 லட்சம் கோடியாக இருந்தது. ஆனால், ஓர் ஆண்டுக்குள் இந்த நிறுவனங்களின் மதிப்பு இரு மடங்காகி, ரூ.19.44 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. 

தங்கப் பத்திரம் விற்பனை இன்று தொடக்கம்: தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியத் தகவல்கள்

9% மட்டுமே உயர்வு

இதே காலகட்டத்தில் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் குழுமத்தில் உள்ள 9 பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் மதிப்பு வெறும் 9 சதவீதம் மட்டுமே உயர்ந்துள்ளது.

அதாவது 2021 டிசம்பரில் ரூ.16.33 லட்சம் கோடியாக இருந்த ரிலையன்ஸ் குழுமத்தின் மதிப்பு நேற்று வரை ரூ.17.89 லட்சம் கோடியாக மட்டுமே உயர்ந்துள்ளது.

Adani maintains his market cap lead over Mukesh Ambani at Rs 19.44 trillion

டாடா குழுமத்துக்கு 6.9% சரிவு 

டாடா குழுமத்தின் 26 பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் மதிப்பு 6.9 சதவீதம் சரிந்துள்ளது. 2021 டிசம்பரில் ரூ.23.36 லட்சம் கோடியாகஇருந்த நிலையில் நேற்று ரூ.21.73லட்சம் கோடியாகக் குறைந்துள்ளது. 

கடன் வாங்குறது காஸ்ட்லி! EMI உயரும்! LIC ஹவுசிங் பைனான்ஸ் வட்டியை உயர்த்தியது

என்ன காரணம்

இதில் அதானி குழுமத்தின் அசுரத்தனமான வளர்ச்சிக்கு அதானி பவர் நிறுவனத்தின் பங்கு மதிப்பு உயர்ந்தது முக்கியக்காரணம். அதானி பவர் சந்தை மதிப்பு 334 சதவீதம் ஓர் ஆண்டில்அதிகரித்துள்ளது. 2021 டிசம்பரில் ரூ.38,473 கோடியாக இருந்தநிலையில் தற்போது ரூ.1.67 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.

Adani maintains his market cap lead over Mukesh Ambani at Rs 19.44 trillion

அதானி டிரான்ஸ்மிஷன் மதிப்பு 103 சதவீதம் ஏற்றம் கண்டுள்ளது. 2021 டிசம்பரில் ரூ.1.90 லட்சம் கோடியாக இருந்தது தற்போது ரூ.3.99 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. அதானி டோட்டல் கேஸ்  மதிப்பு 96.7 சதவீதம் அதிகரித்துள்ளது. 2021, டிசம்பரில் இந்த நிறுவனத்தின் மதிப்பு ரூ.1.89 லட்சம் கோடியாக இருந்தது தற்போது ரூ.3.70 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. 

தங்கம் வாங்க பொன்னான நேரம்! 2 நாட்களில் சவரனுக்கு ரூ.240 வீழ்ச்சி: இன்றைய நிலவரம் என்ன?

அதானி போர்ட் மற்றும் பொருளாதார மண்டல மதிப்பு 19 சதவீதம் உயர்ந்து, ரூ.1.77 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. இது 2021, டிசம்பரில் ரூ.1.49 லட்சம் கோடியாக இருந்தது. 
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios