cji : nv ramana:தலைமை நீதிபதி என்.வி.ரமணா நாளை ஓய்வு: உச்ச நீதிமன்றத்தில் 5 முக்கிய வழக்குகள் விசாரணை
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா நாளை ஓய்வு பெறுவதையடுத்து 5 முக்கிய வழக்குகள் விசாரணைக்கு எடுக்கப்பட உள்ளன. இந்த வழக்குகள் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா நாளை ஓய்வு பெறுவதையடுத்து 5 முக்கிய வழக்குகள் விசாரணைக்கு எடுக்கப்பட உள்ளன. இந்த வழக்குகள் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
தலைமை நீதிபதியாக என்.வி.ரமணா கடந்த 2021, ஏப்ரல் 24ம் தேதி தலைமை பதவி ஏற்றார். இவரின் பதவிக்காலம் (நாளை)26ம் தேதியுடன் முடிகிறது.
மறைந்த மூதாட்டி உடலுடன் சிரித்தபடி போஸ் கொடுக்கும் குடும்ப உறுப்பினர்கள்… வைரலாகும் புகைப்படம்!!
இதையடுத்து, புதிய தலைமை நீதிபதியாக மூத்த நீதிபதி யு.யு.லலித் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் நாளை பொறுப்பேற்க உள்ளார். மிகக்குறுகியகாலமாக, 2022, நவம்பர் 8ம்தேதி வரை யு.யு.லலித் பதவி வகிப்பார்.
இந்நிலையில் கடைசி நாளான இன்று தலைமை நீதிபதி என்.வி.ரமணா முன் 5 முக்கிய வழக்குகள் விசாரணைக்கு வர உள்ளன. பெகாசஸ் உளவு பார்த்தல், பில்கிஸ் பானு வழக்கு, பிஎம்எல்ஏ வழக்கு, பிரதமர் மோடி பாதுகாப்பு குறைபாடு வழக்கு, தீஸ்தா சீதல்வாத் ஜாமீன் வழக்கு ஆகியவை விசாரணைக்கு வர உள்ளன.
பில்கிஸ் பானு வழக்கு
குஜராத்தைச் சேர்ந்த பில்கிஸ் பானு கூட்டுப்பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட 11 குற்றவாளிகள் தண்டனைக் காலத்துக்கு முன்பே விடுவிக்கப்பட்டனர். இதை எதிர்த்தும், அந்த விடுதலையை ரத்து செய்யக் கோரியும் சிபிஎம் தலைவர் சுஹாசினி அலி, ரேவதி லால், சமூக செயற்பாட்டாளர் ரூபா ஷர்மா ஆகியோர் தொடரப்பட்ட வழக்கை விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் விசாரணக்கு ஏற்கிறது. இந்த மனுவை தலைமை நீதிபதி என்.வி.ரமணா, நீதிபதிகள் அஜய் ரஸ்தோகி, விக்ரம் நாத் ஆகியோர் அமர்வு விசாரிக்கிறது.
பீகார் அரசியல்: நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் நிதிஷ் குமார் வெற்றி: பாஜக வெளிநடப்பு
பெகாசஸ் உளவு
இஸ்ரேலின் என்எஸ்ஓ அமைப்பின் பெகாசஸ் உளவு மென்பொருள் மூலம் இந்தியாவில் 40 பத்திரிகையாளர்கள், மத்திய அமைச்சர்கள் உள்ளிட்ட பலரின் செல்போன் ஒட்டுக் கேட்கப்பட்டதாக சர்வதேச நாளேடுகள் செய்தி வெளியிட்டன.
இந்த விவகாரத்தில் ஓய்வுபெற்ற நீதிபதி அல்லது நீதிபதி மூலம் நீதி விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் எனக் கோரி மூத்த பத்திரிகையாளர் என்.ராம், சசிகுமார், ஏசியாநெட் நிறுவனர் சசிகுமார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.பி. ஜான் பிரிட்டாஸ், வழக்கறிஞர் எம்.எல்.சர்மா, பத்திரிகையாளர் பரன்ஜாய் குஹா தாக்ருதா, எஸ்என்எம் அப்தி, பிரேம் சங்கர் ஜா, ரூபேஷ் குமார் சிங், இப்சா சடாக்ஸி ஆகியோர் தி எடிட்டர்ஸ் கில்ட் ஆஃப் இந்தியா சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.
இது குறித்து விசாரணை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி ஆர்வி ரவீந்திரன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழு அறிக்கை அளித்துள்ளது. இந்த வழக்கில் தலைமை நீதிபதி என்.வி.ரமணா, சூர்யகாந்த், ஹிமா கோலி ஆகியோர் அமர்வு தீர்ப்பு வழங்க உள்ளது.
ரூ.20 கோடி தர்றோம்..! இந்த பக்கம் வாங்க! எம்எல்ஏக்களுக்கு பாஜக வலை: அம்பலப்படுத்திய ஆம் ஆத்மி
பிரதமர் மோடி பாதுகாப்பு குறைபாடு
பிரதமர் மோடி கடந்த ஜனவரி மாதம் பஞ்சாப் சென்றிருந்தபோது அவருக்கு பாதுகாப்புக் குறைபாடு எழுந்தது.இது தொடர்பாக லாயர்ஸ் வாய்ஸ் அமைப்பு தொடர்ந்த வழக்கில் ஓய்வு பெற்ற நீதிபதி இந்து மல்ஹோத்ராவை விசாரணை நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அந்த அறிக்கையின் மீது தலைமை நீதிபதி என்.வி.ரமணா, ஹிமா கோலி, சூர்ய காந்த் அமர்வு தீர்ப்பு வழங்குகிறது.
பிஎம்எல்ஏ வழக்கு
சட்டவிரோதப் பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கப்பிரிவு கைது செய்ய அதிகாரம் உண்டு என்று உச்ச நீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பு வழங்கியது. இதை எதிர்த்து காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் சீராய்வு மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான தீர்ப்பு தலைமை நீதிபதி என்.வி.ரமணா, நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, சிடி ரவிகுமார் அமர்வு தீர்ப்பு வழங்கஉள்ளது.
ஜார்க்கண்ட் முதல்வரின் உதவியாளர் வீட்டில் ஏகே.47 துப்பாக்கிகள்: அமலாக்கப் பிரிவு பறிமுதல்
தீஸ்தா சீதல்வாத் ஜாமீன் மனு
குஜராத் முதல்வராக மோடி இருந்தபோது, கோத்ரா கலவர வழக்கில் அவருக்கு எதிராக ஆவணங்களை ஜோடித்ததாக எழுந்த குற்றச்சாட்டில் சமூக செயற்பாட்டாளர் தீஸ்தா சீதல்வாத் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த மனு நீதிபதி யுயு லலித், ரவிந்திர பாட், சுதான்சு துலியா ஆகியோர் அமர்வு தீர்ப்பு வழங்குகிறது