jharkhand: suranga: ஜார்க்கண்ட் முதல்வரின் உதவியாளர் வீட்டில் ஏகே.47 துப்பாக்கிகள்: அமலாக்கப் பிரிவு பறிமுதல்
ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனின் நெருங்கிய உதவியாளர் பிரேம் பிரகாஷ் வீட்டல் 2 ஏ.கே.47 ரக துப்பாக்கிகள், குண்டுகளை அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர்.
ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனின் நெருங்கிய உதவியாளர் பிரேம் பிரகாஷ் வீட்டல் 2 ஏ.கே.47 ரக துப்பாக்கிகள், குண்டுகளை அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர்.
சட்டவிரோத சுரங்க வழக்கில் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் பிரேம் பிரகாஷ் இல்லத்தில் ரெய்டு நடத்தியபோது, பீரோவில் 2 ஏ.கே.47 ரக துப்பாக்கிகள், குண்டுகளைப் பறிமுதல்செய்தனர்.
பில்கிஸ் பானு வழக்கில் குற்றவாளிகள் விடுதலை... இது மனித குலத்திற்கே அவமானம் என கொதித்தெழுந்த குஷ்பு
அமலாக்கப்பிரிவு வட்டாரங்கள் கூறுகையில் “ கைப்பற்றப்பட்ட ஏ.கே.47 ரக துப்பாக்கிகள் சட்டவிரோதமாக வாங்கப்பட்டுள்ளன. இது குறித்து போலீஸாருக்கு தெரிவித்துள்ளோம். இது தொடர்பாக தனியாக சட்டவிரோத ஆயுததடைச் சட்டத்தில் பிரேம் பிரகாஷ் மீது வழக்குத் தொடரப்படும்” எனத் தெரிவித்தனர்.
ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு நெருக்கமானவராகக் கருதப்படும் பிரேம் பிரகாஷ் இல்லத்தில் மட்டுமல்லாது, ஜார்க்கண்ட், பீகார், தமிழகம், டெல்லி, என்சிஆர் உள்ளிட்ட 16 இடங்களில் சட்டவிரோத சுரங்க வழக்கு தொடர்பாக அமலாக்கப்பிரிவு சோதனை நடத்தி வருகிறார்கள்.
அமலாக்கப் பிரிவு வட்டாரங்கள் கூறுகையில் “ சட்டவிரோத சுரங்க வழக்கில் ஹேமந்த் சோரனையும் அமலாக்கப்பிரிவு கண்காணித்து வருகிறது. விசாரணையின்போது ஏராளமான ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக பலரிடம் பெறப்பட்ட வாக்குமூலங்கள், டிஜிட்டல் ஆதாரங்கள், ஆவணங்கள் போன்றவையும், வங்கி சேமிப்புக் கணக்கு ஆகியையும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
அரைகுறை ஆடை பெண்ணிடம் பாலியல் சீண்டல் குற்றமில்லை: சர்ச்சைத் தீர்ப்பு வழங்கிய நீதிபதி இடமாற்றம்
ஹேமந்த் சோரனுக்கு நெருக்கமானவர்களின் 37 வங்கிக்கணக்கிலிருந்து ரூ.11.88 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டது.
ஜார்க்கண்டின் சாஹிப்காஞ்ச், பார்ஹெட், ராஜ்மஹால், மிர்ஸா சவுக்கி, பார்ஹர்வா ஆகியவற்றிலிருந்து ரூ.5.34 கோடி ஆவணங்கள் கடந்த ஜூலை 8ம் தேதி அமலாக்கப்பிரிவு கைப்பற்றியது.
பீகார் முதல்வர் நிதிஷுக்கு நெருக்கடி! ஆர்ஜேடி தலைவர்கள் வீட்டில் சிபிஐ திடீர் சோதனை
கடந்த மே மாதம் மகாத்மா ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில் நடந்த ஊழல் தொடர்பாக 36 இடங்களில் அமலாக்கப்பிரிவு ரெய்டு நடத்தி ரூ.19.76 கோடியை பறிமுதல்செய்தது. இதில் ஐஏஎஸ் அதிகாரி பூஜா சிங்கால் அவரின் உதவியாளர்கள் வீட்டிலும் ரெய்டு நடந்தது குறிப்பிடத்தக்கது.