ndtv:adani group: அதானி குழும அறிவிப்பு! என்டிடிவி பங்கு 14 ஆண்டுகளில் இல்லாதஉயர்வு: அடுத்து என்ன நடக்கும்?
அதானி குழுமத்தின் அறிவிப்பால், என்டிடிவியின் பங்கு மதிப்பு கடந்த 14 ஆண்டுகளில் இல்லாத அளவு உயர்ந்து, ரூ.384.50 என்ற நிலையை பங்குச்சந்தையில் எட்டியது.
அதானி குழுமத்தின் அறிவிப்பால், என்டிடிவியின் பங்கு மதிப்பு கடந்த 14 ஆண்டுகளில் இல்லாத அளவு உயர்ந்து, ரூ.384.50 என்ற நிலையை பங்குச்சந்தையில் எட்டியது.
என்டிடிவியின் பங்குகளை வாங்கியுள்ள அதானி நிறுவனம், பிற பங்குதாரர்கள் பங்குகளை தங்களுக்கு விற்கலாம் அல்லது தொடர்ந்து வைத்திருக்கலாம். இதுதொடர்பாக திறந்த வெளிச் சந்தை அறிவிப்பை அதானி குழுமம் அறிவித்தது.
இது சந்தை விலையைவிட 30 சதவீதம் குறைவாக இருக்கிறது. இருப்பினும் என்டிடிவி குழுமத்தில் பெரிய அளவில் மாற்றம் வரப்போகிறது என்று பங்குதாரர்கள் பதற்றப்பட்டுகூட விற்கலாம்.
என்டிடிவி ஒப்புதல் இல்லாமல் 29% பங்குகளை வாங்கிய அதானி குழுமம் : விவரம் என்ன?
அதானி குழுமத்தின் வசம் 1.16மில்லியன் பங்குகள் கைமாறியுள்ளன. இன்னும் 98,170 பங்குகளுக்கு என்எஸ்இ, பிஎஸ்இ அமைப்புகளிடம் இருந்து ஒப்புதல் பெறவேண்டும்.
அதானி குழுமத்தின் இந்த அறிவிப்பால் என்டிடிவி பங்குகள் மதிப்பு கடந்த 2008ம் ஆண்டுக்குப்பின் உயர்ந்தது. கடந்த 3 மாதங்களாக என்டிடிவி பங்கு மதிப்பு 140 சதவீதம் அதிகரித்தது. இருப்பினும் இது கடந்த 14 ஆண்டுகளில் இல்லாத அளவு உயர்வைப் பெற்று ஒரு பங்கு மதிப்பு ரூ.384க்கு உயர்ந்தது.
பங்குச்சந்தையில் ஓபன் ஆஃபர் எனப்படும் திறந்தவெளிச் சந்தையின் மூலம் என்டிடிவி பங்குகளை விற்கலாம் என்று அதானி குழுமம் நேற்று பங்குச்சந்தை பைலிங்கில் தெரிவித்தது. பங்குச்சந்தையின் நேற்றை வர்தத்கம் முடிவில் என்டிடிவி ஒரு பங்கு மதிப்பு ரூ.366.20 ஆக இருந்தது. ஆனால், ஓபன் ஆஃபர் விலையில் ரூ.294க்கு பேசப்பட்டது குறிப்பிடத்தக்கது.
அதானி குழுமத்தின் அறிவிப்பால் என்டிடிவியின் பிற பங்குதாரர்கள் பங்குகளை விற்கலாம் அல்லது விற்காமல் கைவசம் வைத்திருக்கவும் வாய்ப்புள்ளது. ஒருவேளை பங்குதாரர்கள் விற்கநேர்ந்தால், அதானி குழுமம் வசம் அதிகமான பங்குகள் போய் சேரும்.
அதானி கெத்து! சொத்து மதிப்பு ஓர் ஆண்டில் எவ்வளவு அதிகரிப்பு? அம்பானி, டாடா குழுமம் பின்னடைவு
பங்குச்சந்தை ஒழுங்கமைப்பு விதியின்படி, ஒரு பங்குதாரர் அல்லது நிறுவனத்திடம் 26 சதவீதத்துக்கும் அதிகமான பங்குகள் இருந்தால், அவரால் அல்லது அந்த நிறுவனத்தால் எந்த முடிவையும் கட்டுப்படுத்த முடியும், தடுக்கமுடியும். ஆதலால், அதானி குழுமத்திடம் 29.28 சதவீதப்பங்குகள் வந்துள்ளதால் என்டிடிவியை கட்டுப்பாட்டுக்குள் மறைமுகமாக அதானி குழுமம்கொண்டுவரும்.
என்டிடிவியின் நிறுவனர்கள் பிரனாய் ராய், ராதிகா ஆகியோர் தங்களின் ஆர்ஆர்பிஆர் நிறுவனம் மூலம், கடந்த 2009 -ம் ஆண்டு தனது கைவசமுள்ள 29.18 சதவீத என்டிடிவி பங்குகளை விஷ்வபிரதான் கமர்சியல் லிமிடெட் (VCPL) நிறுவனத்திடம் அடமானம் வைத்து 403 கோடி ரூபாய் கடன் பெற்றனர்.
இந்த விஷ்வபிரதான் கர்ஷியல் லிமிடட் நிறுவனம் அதானி குழுமத்தின் சார்பில் அதானி என்டர்பிரைசஸ் நிறுவனத்தால் மறைமுகமாக நடத்தப்படுவதாகும்.
இனி ஏமாற்ற முடியாது! தரம் குறைந்த, உண்மையில்லா செய்திகள் ரேங்கிங் ஆகாது: கூகுள் கிடுக்கிப்பிடி
விபிசிஎல் நிறுவனத்திடம் பெற்ற கடனை திரும்பச் செலுத்தும் காலம் 10 ஆண்டுகளாக என்டிடிவிக்கு நிர்ணயக்கப்பட்டு அதற்குரிய காலமும் முடிந்துவிட்டது. கடனை ஆர்ஆர்பிஆர் ஹோல்டிங் நிறுவனம் திரும்ப செலுத்தாத காரணத்தினால் தற்போது விசிபிஎல் நிறுவனம் அந்தப் பங்குகளை அதானி குழுமத்துக்கு விற்பனை செய்ய இருக்கிறது. அதானி மீடியா வென்சர்ஸ் நிறுவனத்தின் கிளை நிறுவனம்தான் விஷ்வ பிரதான் கமர்சியல் லிமிடெட் என்பது குறிப்பிடத்தக்கது.
விபிசில் நிறுவனத்திடம் இருந்து பங்குச்சந்தையில் பைலிங் நடந்தவுடன் என்டிடிவி உரிமையாளர்கள் பிரனாய் ராய், ராதிகா தரப்பில் மறுப்பு அறிக்கை வெளியானது. அதில் “ என்டிடிடி நிறுவனர்கள், புரமோட்டர்ஸ்கலான பிரனாய் ராய், ராதிகா ஆகியோருடன் எந்தவிதமான ஆலோசனையும், விவாதமும், தகவலும் இல்லாமல் விஷ்வபிரதான் கமர்சியல் லிமிடெட் நிறுவனம் ஆர்ஆர்பிஆர் நிறுவனத்தின் 29.18 சதவீதப் பங்குகளை மாற்றப் போவதாகத் தெரிவித்துள்ளது.
புதிய மாருதி ‘மைலேஜ் அரசன்’ அல்டோ k10 கார்: ரூ.3.90 லட்சத்தில் அட்டகாச வசதிகள்
கடந்த 2009-10ம் ஆண்டு என்டிடிவிக்கு விசிபிஎல் நிறுவனம் வழங்கிய கடன் அடிப்படையில் இந்த உரிமையை எடுத்துக்கொண்டு பங்குகளை மாற்ற முயல்கிறது.
என்டிடிவி உரிமையாளர்களான பிரனாய் ராய், ராதிகா ஆகியோரின் எந்தவிதமான ஒப்புதலும், கலந்தாய்வும், ஆலோசனையும், விவாதமும்,இன்றி பங்குகளை விசிபிஎல் நிறுவனம் மாற்ற இருக்கிறது. இந்த செய்தியே இன்றுதான் எங்களுக்குத் தெரியும். இவ்வாறு என்டிடிவி நிறுவனம் பங்குச்சந்தையில் தெரிவித்துள்ளது.