இந்தியப் பங்குச்சந்தைகள் இன்று காலை கடும் ஊசலாட்டத்துடன் வர்த்தகத்தை தொடங்கியுள்ளன. சென்செக்ஸ், நிப்டி புள்ளிகள் கடும் ஏற்ற இறக்கத்தில் உள்ளன.
இந்தியப் பங்குச்சந்தைகள் இன்று காலை கடும் ஊசலாட்டத்துடன் வர்த்தகத்தை தொடங்கியுள்ளன. சென்செக்ஸ், நிப்டி புள்ளிகள் கடும் ஏற்ற இறக்கத்தில் உள்ளன.
அமெரிக்கப் பங்குச்சந்தைக்கு நேற்று விடுமுறை என்பதால் அங்கிருந்து எந்தவிதமான சமிக்கையும் முதலீட்டாளர்களுக்கு இல்லை. இதனால் காலை வர்த்தகத்தை ஏற்றத்துடன், நம்பிக்கையுடன் முதலீட்டாளர்கள் தொடங்கியுள்ளனர்.
பங்குச்சந்தை|ஏற்றத்தில் தொடங்கி சரிவில் முடிந்த சென்செக்ஸ், நிப்டி: அதானி பங்குகள் அடி

இருப்பினும் அமெரிக்கப் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த பெடரல் ரிசர்வ் வட்டிவீத்தை 50 புள்ளிகள் வரை உயர்த்தும் என்ற தகவல் முதலீட்டாளர்களுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால்தான் கடந்த சிலநாட்களாக சந்தையில் ஊசலாட்டமான போக்கு காணப்படுகிறது.
ஆனால், உள்நாட்டு முதலீட்டாளர்கள் அதிகளவில் முதலீடு செய்துவருவதும், கடந்த சில நாட்களாக அந்நியமுதலீட்டாளர்கள் பங்குகளை அதிக அளவில் வாங்கி வருவதும் இந்திய சந்தை முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
காலை வர்த்தகம் தொடங்கியதும் மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 100 புள்ளிகள் வரையிலும், தேசியப் பங்குச்சந்தையில் 50 புள்ளிகள் வரையிலும் உயர்ந்தது. ஆனால், சிறிது நேரத்தில் சென்செக்ஸ் புள்ளிகள் மளமளவெனச் சரிந்தது.
பங்குச்சந்தை| சென்செக்ஸ், நிப்டி புள்ளிகள் ஏற்றம்: ஐடி பங்குகள் லாபம்

மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 6 புள்ளிகள் குறைந்து, 60,685 புள்ளிகளிலும், தேசியப் பங்குச்சந்தையில் நிபட்ி 5புள்ளிகள் அதிகரித்து 17,849 புள்ளிகளிலும் வர்த்தகத்தை நடத்தி வருகிறது.
மும்பை பங்குச்சந்தையில் உள்ள முக்கிய 30 நிறுவனங்களின் பங்குகளில், 10 நிறுவனங்களின் பங்குகள் சரிந்தும், மற்ற 20 நிறுவனங்களின் பங்குகள் ஏற்றத்திலும் உள்ளன. மாருதி, எச்டிஎப்சி வங்கி, பஜாஜ்பின்சர்வ், டைட்டன், பஜாஜ் பைனான்ஸ், ஏசியன்பெயின்ட்ஸ், இன்டஸ்இன்ட் வங்கி, ஐசிஐசிஐ வங்கி, ஆக்சிஸ் வங்கி ஆகிய வங்கிப் பங்குகள் சரிவில் உள்ளன.
அதானி சொத்து 5000 கோடி டாலருக்கும் கீழ் சரிந்தது|30 நாட்களுக்குமுன் 3வது இடம்!இப்போ 25!
நிப்டியில் என்டிபிசி, டாடா ஸ்டீல், எச்யுஎல், பார்தி ஏர்டெல், எச்டிஎப்சி லைப் ஆகிய நிறுவனப் பங்குகள் லாபத்திலும், அதானி என்டர்பிரைசர்ஸ், ஆக்சிஸ் வங்கி, கோல் இந்தியா, இன்டஸ்இன்ட் வங்கி, எச்டிஎப்சி வங்கி பங்குகள் சரிவிலும் உள்ளன
