இந்தியப் பங்குச்சந்தைகள் வாரத்தின் முதல்நாளான இன்று ஏற்றத்துடன் வர்த்தகத்தை தொடங்கியுள்ளன. சென்செக்ஸ், நிப்டி புள்ளிகள் உயர்ந்துள்ளன.
இந்தியப் பங்குச்சந்தைகள் வாரத்தின் முதல்நாளான இன்று ஏற்றத்துடன் வர்த்தகத்தை தொடங்கியுள்ளன. சென்செக்ஸ், நிப்டி புள்ளிகள் உயர்ந்துள்ளன.
அமெரிக்க பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த வரும் மார்ச் மாதக் கூட்டத்தில் பெடரல் ரிசர்வ் 50 புள்ளிகள்வரைவட்டியை உயர்த்தலாம் எனத்தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அமெரிக்க டாலர் மதிப்பும், பங்குகப்பத்திரங்கள் மதிப்பும் அதிகரித்துள்ளது.
மார்ச் 31-க்குள் முதலீடு செய்யுங்க| மாதம் ரூ.18,500 ஓய்வூதியம் தரும் அரசு பென்ஷன் திட்டம் முடிகிறது
கடந்த சில வாரங்களாக முதலீட்டை சந்தையில் இருந்து திரும்பப்பெற்றுவந்த அந்நிய முதலீட்டாளர்கள், கடந்த வாரத்தில் முதலீடு செய்துள்ளனர். இந்தியச் சந்தையில் எதிர்மறையான போக்கு நிலவ அதானி குழு விவகாரம் முக்கியக் காரணமாகும்.

அமெரிக்க பெடரல் ரிசர்வ் எடுக்கும் முடிவு இந்தியச் சந்தையிலும் எதிரொலிக்கும். அந்நிய முதலீட்டாளர்கள் பங்குகளை அதிக அளவில் விற்கலாம், குறைந்த அளவில் வாங்கும் சூழல் உருவாகும்.
காலை வர்த்தகம் தொடங்கியதும் மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 240 புள்ளிகள் உயர்ந்து, 61,242 புள்ளிகளில்வர்த்தகத்தை நடத்தி வருகிறது. தேசியப் பங்குச்சந்தையில் நிப்டி 50 புள்ளிகள் அதிகரி்த்து, 17,994 புள்ளிகளில் வர்த்தகத்தை நடத்தி வருகிறது.
பங்குச்சந்தை| 3 நாட்களுக்குப்பின் சென்செக்ஸ், நிப்டி வீழ்ச்சி:உலோகம், ஐடி பங்கிற்கு அடி
மும்பை பங்குச்சந்தையில் உள்ள 30 முக்கிய நிறுவனங்களின் பங்குகளில் 13 நிறுவனப் பங்குகள் சரிவிலும், மற்ற 17நிறுவனப் பங்குகள் லாபத்திலும் உள்ளன. ஏர்டெல், எச்சிஎல்டெக், அல்ட்ராடெக்சிமெண்ட், ரிலையன்ஸ், இன்போசிஸ், லார்சன்அன்ட்டூப்ரோ, ஆக்சிஸ் வங்கி, எச்யுஎல், என்டிபிசி,ஐடிசி, மகிந்திரா அன்ட் மகிந்திரா உள்ளிட்ட பங்குகள் லாபத்துடன் நகர்கின்றன

நிப்டியில் எய்ச்சர் மோட்டார்ஸ், ஏசியன் பெயின்ட்ஸ், டாக்டர் ரெட்டீஸ் லேப்ஸ், பவர் கிரிட், பஜாஜ்பின்சர்வ் பங்குகள் லாபத்தோடு நகர்கின்றன. சிப்லா, அதானி என்டர்பிரைசர்ஸ், அதானி போர்ட்ஸ், விப்ரோ, டிவிஸ் லேப்ஸ் பங்குகள் சரிவில் உள்ளன.
பங்குச்சந்தை| இன்று தாக்கத்தை ஏற்படுத்தும் 10 காரணிகள் என்ன?
அதானி குழுமப் பங்குகளில் அதானி வில்மர், அதானி பவர் பங்குகள் மட்டுமே லாபத்தில் நகர்கின்றன,மற்றவை சரிவில் உள்ளன. நிப்டியில் வங்கி, ஆட்டோமொபைல், நிதிச்சேவை, எப்எம்சிஜி, ஐடி, பொதுத்துறை வங்கி ஆகிய துறைகளின் பங்குகள் லாபத்தில் உள்ளன.
