Adani Net Worth: அதானி சொத்து 5000 கோடி டாலருக்கும் கீழ் சரிந்தது|30 நாட்களுக்குமுன் 3வது இடம்!இப்போ 25!
gautam adani net worth: கெளதம் அதானியின் நிகர சொத்து மதிப்பு 5ஆயிரம் கோடி டாலருக்கும் கீழ் சரிந்தது. கோடீஸ்வரர்கள் வரிசையில் 25-வது இடத்துக்கு அதானி தள்ளப்பட்டார்.
gautam adani net worth: கெளதம் அதானியின் நிகர சொத்து மதிப்பு 5ஆயிரம் கோடி டாலருக்கும் கீழ் சரிந்தது. கோடீஸ்வரர்கள் வரிசையில் 25-வது இடத்துக்கு அதானி தள்ளப்பட்டார்.
ஆனால், அதானி குழுமத்தின் ஒட்டுமொத்த சொத்து மதிப்பு 4,910 கோடியாக இருக்கிறது.
கடந்த ஒரு மாதத்துக்கு முன் 60வயதான அதானியின் சொத்து மதிப்பு 12000 கோடி டாலராக இருந்தது, உலகக் கோடீஸ்வரர்கள் வரிசையில் 3வது இடத்தில் இருந்தார். ஆனால், ஹிண்டன்பர்க் அறிக்கைக்குபின் அதானியின் நிலைமை தலைகீழாக மாறிவிட்டது.
அதானி-ஹிண்டன்பர்க் விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் காங்கிரஸ் நிர்வாகி புதிய மனு: 17ல் விசாரணை
அடுத்த ஒரு மாதத்துக்குள் அதானி கோடீஸ்வரர்கள் வரிசையில் 25வது இடத்துக்கு தள்ளப்பட்டார், சொத்து மதிப்பு ரூ.5 ஆயிரம் கோடி டாலருக்கும் கீழ் குறைந்துவிட்டது.
இந்தியப் பங்குச்சந்தையில் அதானி குழுமம் செய்த தில்லுமுல்லு, மோசடிகள் குறித்து அமெரிக்காவின் ஹிண்டன்பர்க் ஆராய்ச்சி நிறுவனம் கடந்த மாதம் அறிக்கை வெளியிட்டது.
இந்த அறிக்கைக்குப்பின் அதானி குழுமத்தின் பங்கு மதிப்பு மிகவும் மோசமாகச் சரிந்தது. கடந்த ஒரு மாதத்துக்கள் அதானி குழுமத்துக்கு ரூ.10லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக ஊடகங்களில் தகவல் வெளியாகியுள்ளது.
பங்குச்சந்தை ஒவ்வொரு நாளும் முடியும் போதும், அதானியின் சொத்து மதிப்பு படிப்படியாகக் குறைந்துவந்தது. கடந்த ஒரு மாதத்துக்குள் அதானி உலகக் கோடீஸ்வரர்களில் டாப்10 வரிசையிலிருந்து தூக்கிவீசப்பட்டு, தற்போது 25வது இடத்துக்கு தள்ளப்பட்டார். ஏறக்குறைய ஒருமாதத்துக்குள் அதானி சொத்து மதிப்பு 7100 கோடி டாலர் குறைந்துள்ளது.
கணக்குத் தணிக்கைக்காக அமெரிக்காவின் கிராண்ட் தார்ன்டன் நிறுவனத்துடன் அதானி குழுமம் ஒப்பந்தம்
ப்ளூம்பெர்க் கோடீஸ்வரர்கள் குறியீட்டில், வேகமாக சொத்துமதிப்பு குறைந்த 500 பேரில் அதானியும் இடம் பெற்றுவிட்டார். அதுமட்டுமல்லாமல் ஆசியாவின் கோடீஸ்வரர் என்ற பெருமையையும் அதானி, ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானியிடம் இழந்துவிட்டார்.
அதானி குழுமம் பற்றிய மோசடிகள் குறித்து ஹிண்டன்பர்க் நிறுவனம் அறிக்கைக்குப்பின் சர்வதேச அளவில் அதானி குழுமத்தின் மதிப்பும் குறைந்தது. பல கடன்தர நிறுவனங்கள், வங்கிகள், அதானி குழுமத்தின் பங்குப்பத்திரங்களுக்கு ஈடாக கடன்வழங்க மறுத்தன. இந்தக் காரணத்தாலும், அதானி குழுமத்தின் பல்வேறு நிறுவனப் பங்குகள் கடுமையாகச் சரிந்தன.
இடையே அதானி என்டர்பிரைசர்ஸ் நிறுவனம் எப்பிஓ வெளியிட்டு ரூ.20ஆயிரம் கோடி திரட்டியது. ஆனால், சந்தைச் சூழலைப் பார்த்தபின், அந்த பணத்தை மீண்டும் முதலீட்டாளர்களிடமே வழங்க அதானி குழுமம் முடிவு செய்து அந்த எப்பிஓ-வை ரத்து செய்வதாக அறிவித்தது.