Adani -Hindenburg: அதானி-ஹிண்டன்பர்க் விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் காங்கிரஸ் நிர்வாகி புதிய மனு: 17ல் விசாரணை
அதானி குழுமம் பங்குச்சந்தையில் செய்த தில்லுமுல்லு, மோசடிகள் குறித்து ஹிண்டன்பர்க் ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்ட அறிக்கை தொடர்பாக விசாரணை கோரி காங்கிரஸ் நிர்வாகி ஜெய தாக்கூர் தாக்கல் செய்த மனுவை வரும் 17ம் தேதி விசாரணைக்கு எடுப்பதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
அதானி குழுமம் பங்குச்சந்தையில் செய்த தில்லுமுல்லு, மோசடிகள் குறித்து ஹிண்டன்பர்க் ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்ட அறிக்கை தொடர்பாக விசாரணை கோரி காங்கிரஸ் நிர்வாகி ஜெய தாக்கூர் தாக்கல் செய்த மனுவை வரும் 17ம் தேதி விசாரணைக்கு எடுப்பதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
அதானி குழுமம் பங்குச்சந்தையில் செய்த மோசடிகள், நிதி மோசடி பரிவர்த்தனைகள், தில்லுமுல்லு போன்றவை குறித்து அமெரிக்காவின் ஹிண்டன்பர்க் ஆராய்ச்சி நிறுவனம் அறிக்கை வெளியிட்டது. இந்த அறிக்கைக்குப்பின் அதானி குழுமத்துக்கு 10000 கோடி டாலர் இழப்பு ஏற்பட்டதாக ஊடகங்களில் தகவல் வெளியானது.
டெல்லி, மும்பை பிபிசி அலுவலகத்தில் ஐடி ரெய்டு 2வது நாளாகத் தொடர்கிறது
இந்நிலையில் காங்கிரஸ் நிர்வாகி டாக்டர் ஜெயா தாக்கூர் உச்ச நீதிமன்றத்தில் பொதுநலன் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். அதில் “ அதானி குழுமம் பங்குச்சந்தையில் செய்த நிதி மோசடி, பங்கு மோசடிகள் குறித்து அமெரி்க்காவின் ஹிண்டன்பர்க் ஆராய்ச்சி நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
இந்த அறிக்கை தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும். எல்ஐசி மற்றும் எஸ்பிஐ வங்கிகளில் உள்ள மக்களின் சேமிப்புப்பணம் கோடிக்கணக்கில் அதானி குழுமத்துக்கு கடன் வழங்கப்பட்டுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டது.
இந்ந மனு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. இந்த மனுவை பரிசீலித்த தலைமை நீதிபதி சந்திரசூட் வரும் 17ம் தேதி விசாரணைக்கு எடுப்பதாகத் தெரிவித்தார். ஏற்கெனவே ஹிண்டன்பர்க் அறிக்கை தொடர்பாக விசாரணை கோரி தொடரப்பட்ட மனுக்களுடன் சேர்த்து இந்த மனுவும் விசாரிக்கப்பட உள்ளது.
நாக்பூரிலிருந்து 90 கண்டெய்னர்களுடன் மும்பை சென்ற சரக்கு ரயில் மாயமா? உண்மை என்ன?
இதற்கிடையே அதானி குழுமம் மோசடி செய்திருப்பதுகுறித்து விசாரணைக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவில் நேற்று பங்குச்சந்தை ஒழுங்கமைப்பான செபி பதில் மனுத் தாக்கல் செய்தது. அதில் “ அதானி குழுமத்தின் பங்கு மதிப்பு குறைந்ததைப் போல், மற்ற முதலீட்டாளர்களின் முதலீட்டு மதிப்பும் குறைந்துவிடக்கூடாது என்பதைத் தடுக்கும் வகையிலும், முதலீட்டாளர்களின் நலன்காக்கவும் உச்ச நீதிமன்றம் வல்லுநர் குழு அமைப்பதில் எந்தவிதமான ஆட்சபைனையும் இல்லை. ஏற்கெனவே செபி செயல்படுத்திவரும் செயல்முறைகள், விதிகளையும் ஆய்வு செய்யலாம்.
ஹிண்டன்பர்க் அறிக்கை தொடர்பாக ஏற்கெனவே விசாரணைக்கும் செபி உத்தரவிட்டுள்ளது” எனத் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.