நாக்பூரிலிருந்து 90 கண்டெய்னர்களுடன் மும்பை சென்ற சரக்கு ரயில் மாயமா? உண்மை என்ன?
மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் இருந்து 90 கண்டெய்னர்களுடன் மும்பை சென்ற சரக்கு ரயில் மாயமானதாக தகவல் வெளியானது குறித்து ரயில்வேத் துறை விளக்கம் அளித்துள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் இருந்து 90 கண்டெய்னர்களுடன் மும்பை சென்ற சரக்கு ரயில் மாயமானதாக தகவல் வெளியானது குறித்து ரயில்வேத் துறை விளக்கம் அளித்துள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் நகரின் மிஹான் பகுதியில்இருந்து பல கோடி ரூபாய் மதிப்புள்ள ஏற்றுமதிப் பொருட்களை ஏற்றிக்கொண்டு 90 கண்டெய்னர்களுடன் சரக்கு ரயில் மும்பைக்கு கடந்த 1ம் தேதி புறப்பட்டது.
டெல்லி பிபிசி சேனல் அலுவலகத்தில் வருமானவரித்துறை சோதனை
இந்த ரயில் திட்டமிட்டபடி அடுத்த 5 நாட்களுக்குள் மும்பை ஜவஹர்லால் நேரு துறைமுகம் சென்றுடைய வேண்டும். ஆனால், 13 நாட்களாகியும் துறைமுகத்துக்கு ரயில் சென்று சேரவில்லை, திடீரென மாயமாகிவிட்டதாக சில ஆங்கில இணையதளங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
இந்த செய்தி வெளியானதும் பலருக்கும் வியப்பையும், ஆச்சர்யத்தையும் ஏற்படுத்தியது, பல்வேறு கேள்விகளும் எழுந்தன. அந்த செய்தியில் “ நாசிக் மற்றும் கல்யான் இடையிலான உம்பர்மாலி ரயில் நிலையத்துக்கு pjt1040201 என்ற எண் கொண்ட சரக்கு ரயில் 90 பெட்டிகளுடன் வந்தது அதன்பின் ரயில் எங்கு சென்றது எனத் தெரியவில்லை இதுவரை கண்டுபிடிக்கவில்லை” எனத் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் மத்திய ரயில்வே மண்டலம், அந்தச் சரக்கு ரயில் குறித்து விளக்கம் அளித்துள்ளது. ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில் “ நாக்பூரில் இருந்து மும்பைக்கு 90 பெட்டிகளுடன் புறப்பட்ட சரக்கு ரயில் மும்பை ஜவஹர்லால் நேரு துறைமுகத்துக்கு வந்து சேர்நதுவிட்டது.
பாதாளத்தில் பாகிஸ்தான் பொருளதாரம்! பால் லிட்டர் ரூ.210, கோழி இறைச்சி கிலோ ரூ.800!
அந்த ரயில் திடீரென மாயமாகிவிட்டது என்று வெளியிடப்பட்ட செய்தி தவறானது. அது உண்மை நிலவரங்களை அறிந்தபின் விளக்கமான செய்தியை வெளியிட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளது.