IT Raid on BBC: டெல்லி பிபிசி சேனல் அலுவலகத்தில் வருமானவரித்துறை சோதனை

டெல்லி, மும்பையில் உள்ள பிபிசி சேனல் அலுவலகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Income Tax Department searches the BBC office in Delhi.

டெல்லி, மும்பையில் உள்ள பிபிசி சேனல் அலுவலகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரதமர் மோடி குறித்து சமீபத்தில் சர்ச்சைக்குரிய ஆவணப்படத்தை பிபிசி சேனல் வெளியிட்டது. இதையடுத்து, அந்த ஆவணப்படத்துக்கு மத்திய அரசுதடை விதித்து. இந்தத் தடைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு அவை விசாரிக்கப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தச் சூழலில் பிபிசி சேனல் அலுவலகத்தில் இன்று வருமானவரித்துறை அதிகாரிகள் ரெய்டு நடத்தி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

வருமானவரித்துறை வட்டாரங்கள்  கூறுகையில் “ டெல்லி, மும்பை பிபிசி சேனல் அலுவலகங்களில் வருமானவரித்துறை ரெய்டு நடத்தப்பட்டு வருகிறது. சர்வதேச வரிவிதிப்பு மற்றும் பரிமாற்றங்களில் முறைகேடுகள் நடந்திருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்ததால் சர்வே நடத்தப்பட்டது. இதற்கு பெயர் ரெய்டோ, சோதனையோ அல்ல. இதற்கு பெயர் சர்வே. 

 சில பத்திரிகையாளர்களின் செல்போன், ஆவணங்களையும் வருமானவரித்துறை எடுத்துச்சென்றுள்ளனர். எடுத்துச் சென்ற பொருட்கள் ஒப்படைக்கப்படும். எங்களுக்கு சில விளக்கங்கள் தேவைப்பட்டதால், எங்கள் குழுவினர் பிபிசி அலுவலகத்துக்குச் சென்று சர்வே செய்தனர். எங்கள் அதிகாரிகள் பிபிசி அலுவலகத்தைவிட்டு சென்றுவிட்டார்கள். இதற்கு சோதனை என அர்த்தம் அல்ல, சர்வே” எனத் தெரிவித்தனர்

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios