IT Raid on BBC: டெல்லி, மும்பை பிபிசி அலுவலகத்தில் ஐடி ரெய்டு 2வது நாளாகத் தொடர்கிறது
IT Raid on BBC continues: டெல்லி, மும்பையில் உள்ள பிபிசி அலுவலகங்களில் 2வது நாளாக இன்றும் வருமானவரித்துறையினர் சர்வே நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
IT Raid on BBC continues: டெல்லி, மும்பையில் உள்ள பிபிசி அலுவலகங்களில் 2வது நாளாக இன்றும் வருமானவரித்துறையினர் சர்வே நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
பிபிசி நிறுவனத்தின் முக்கிய ஆவணங்கள், நிதிரீதியான புள்ளிவிவர ஆவணங்களை வருமானவரித்துறையினர் ஆய்வு செய்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிபிசி இந்தியா நிறுவனம் வரிஏய்ப்பில் ஈடுபட்டதாகப் புகார் எழுந்ததையடுத்து, டெல்லி, மும்பையில் உள்ள பிபிசி அலுவலகங்ககளில் வருமான வரித்துறையினர் நேற்று சர்வே செய்து விசாரணை நடத்தினர்.
வருமானவரித்துறையினர் நேற்று காலை 11.30 மணி அளவில் பிபிசி அலுவலகத்துக்குள் சென்றநிலையில் 2வது நாளாக இன்றும் சர்வேயை தொடர்ந்து வருகிறார்கள்.
15 நாட்கள் பழங்குடியினர் திருவிழா! பிரதமர் மோடி வரும் 16ம் தேதி டெல்லியில் தொடங்கி வைக்கிறார்
பிபிசி அலுவலர்கள், ஊழியர்களிடம் வருமானவரித்துறையினர் நிதி தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறார்கள். ஆனால், பிற துறைகள், பத்திரிகையாளர்களை அலுவலகத்தில் இருந்து புறப்படுவதற்கு வருமானவரித்துறையினர் அனுமதித்துள்ளனர்.
கணினியின் சில பகுதிகள், மொபைல் போன்கள் ஆகியவற்றை மட்டும் வருமானவரித்துறையினர் தங்கள்வசம் வைத்துள்ளனர்.
பிபிசி அலுவலகத்துக்குள் வருமானவரித்துறையினர் ரெய்டு நடத்தியவிவகாரம் அரசியல் அரங்கில் பெரும் களேபரத்தை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ், உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பாஜக அரசின் செயல்பாட்டை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.
2002 குஜராத் கலவரம் தொடர்பாக பிபிசி சேனல் பிரதமர் மோடி குறித்து ஆவணப்படம் வெளியிட்டது. இந்த ஆவணப்படத்துக்கு மத்திய அ ரசு தடை விதித்தது. இந்த ஆவணப்படத்துக்கான தடையை விலகக் கோரி உச்ச நீதிமன்றத்திலும் வழக்கு நிலுவையில் உள்ளது.
இந்நிலையில், பிபிசி அலுவலகத்தில் வருமானவரித்துறையினர் திடீரென நேற்றிலிருந்து சர்வே செய்து வருகிறார்கள்.ஆனால், வருமானவரித்துறை தரப்பில் இருந்து இதுவரை எந்தவிதமான அதிகாரபூர்வமான அறிக்கையும் வெளியாகவில்லை.
டெல்லி பிபிசி சேனல் அலுவலகத்தில் வருமானவரித்துறை சோதனை
பிபிசி பத்திரிகையாளர் குழு ட்விட்டரில் நேற்று இரவு பதிவிட்ட செய்தியில் “ புதுடெல்லி, மும்பை பிபிசிஅலுவலகங்களில் வருமானவரித்துறையினர் இன்னும் ஆய்வு செய்து வருகிறார்கள்.
அலுவலகத்தைவிட்டு பல ஊழியர்கள் புறப்பட்டுவிட்டனர், சிலரை மட்டும் அலுவலகத்தை தங்க அதிகாரிகள் கேட்டுக்கொண்டனர். விசாரணைக்கு ஒத்துழைக்கும் படியும் கேட்டுக்கொண்டுள்ளனர்.
இந்த நேரத்தில் எங்கள் குழுவினருக்கு ஆதரவாக இருப்போம்,விரைவில் இந்தப் பிரச்சினை முடிவுக்கு வரும் என நம்புகிறோம். எங்கள் செய்தி வெளியீடு வழக்கம் போல் இருக்கும், இந்தியாவில்உள்ள எங்கள் பார்வையாளர்களுக்கு எங்கள் கடமையைச் செய்வோம் ” எனத் தெரிவித்துள்ளது.