Adani: கணக்குத் தணிக்கைக்காக அமெரிக்காவின் கிராண்ட் தார்ன்டன் நிறுவனத்துடன் அதானி குழுமம் ஒப்பந்தம்
அமெரிக்காவின் ஹிண்டன்பர்க் அறிக்கைக்குப்பின், பங்குகள் விலை கடுமையாகச் சரிந்து பலலட்சம் கோடி இழப்புகளைச்சந்தித்த நிலையில், சுயகணக்குத் தணிக்கைச் செய்ய அமெரிக்காவின் புகழ்பெற்ற கிராண்ட் தார்ன்டன் நிறுவனத்தை அதானி குழுமம் ஒப்பந்தம் செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்காவின் ஹிண்டன்பர்க் அறிக்கைக்குப்பின், பங்குகள் விலை கடுமையாகச் சரிந்து பலலட்சம் கோடி இழப்புகளைச்சந்தித்த நிலையில், சுயகணக்குத் தணிக்கைச் செய்ய அமெரிக்காவின் புகழ்பெற்ற கிராண்ட் தார்ன்டன் நிறுவனத்தை அதானி குழுமம் ஒப்பந்தம் செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பாக ராய்டர்ஸ் செய்தி நிறுவனம் கேட்டபோது, கிராண்ட் தார்ன்டன் மற்றும் அதானி குழுமம் பதில் அளிக்க மறுத்துவிட்டன.
அமெரிக்காவின் ஹிண்டன்பர்க் நிறுவனத்துக்கு எதிராகச் சட்டப்போராட்டம் நடத்த, ஏற்கெனவே அமெரிக்காவின் வாக்டெல் எனும் சட்டநிறுவனத்தை அதானி குழுமம் ஒப்பந்தம் செய்திருப்பதாக பிரிட்டன் ஆங்கிலநாளேடு செய்தி வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
அதானி நிறுவனத்தில் இமாச்சலப்பிரதேச கலால் வரித்துறை ரெய்டு: அதானி வில்மர் விளக்கம்
அந்த நாளேடு வெளியிட்ட செய்தியில் “ ஹிண்டன்பர்க் நிறுவனத்துக்கு எதிராக வழக்குத் தொடர, அமெரி்க்காவின் வாக்டெல் மற்றும் லிப்டன் , ரோசன் அன்ட் காட்ஸ் நிறுவனத்தை அமர்த்தியுள்ளது அதானி குழுமம். நியூயார்க் நகரைச் சேர்ந்த வாக்டெல் சட்டநிறுவனம் கார்ப்பரேட் சட்டத்தில் தேர்ந்த நிறுவனம். கார்ப்பரேட் நிறுவனங்கள் மற்றும் கடினமான வழக்குகளை எளிதாக நிறுவனம் கையாளும் திறமை படைத்தது”எனத் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் ஹிண்டன்பர்க் நிறுவனத்தின் அறிக்கையால், கடந்த 10 நாட்களுக்கும் மேலாக அதானி குழுமத்தின் பங்குகள் விலை கடுமையாக வீழ்ச்சியைச் சந்தித்தன. அதானி குழுமத்துக்கு லட்சக்கணக்கான கோடிகளி்ல் இழப்பு ஏற்பட்டது. இதையடுத்து, முதலீட்டாளர்களின் நம்பிக்கையைப் பெறுவதற்காக, அதானி குழுமம் சுய கணக்குத் தணிக்கை செய்ய முடிவு செய்துள்ளது.
இதற்காக அமெரிக்காவின் இல்லிநாய்ஸ் நகரில் புகழ்பெற்ற கிராண்ட் தார்ன்டன் தணிக்கை நிறுவனத்தை ஒப்பந்தம் செய்திருப்பதாக ராய்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஹிண்டன்பர்க் நிறுவனத்துடன் சட்டப்போராட்டம்! அமெரிக்க சட்டநிறுவனத்துடன் அதானி குழுமம் ஒப்பந்தம்
கிராண்ட் தார்ன்டன் நிறுவனம் அதானி குழுமத்தை ஆய்வு செய்து சட்டவிரோதமாக பணப்பரிவர்த்தனை நடந்துள்ளதா, மோசடி ஏதும் நடந்துள்ளதா, கார்ப்பரேட் சட்டத்துக்கு உட்பட்டு அனைத்து பரிவர்த்தனைகளும், வர்த்தகங்களும் நடக்கிறதா என்பதை தணிக்கை செய்து அறிக்கை அளிக்கும்.
ஆனால், கிராண்ட் தார்ன்டன் நிறுவனத்தில் யாரை நியமிக்க உள்ளது என்பது குறித்த எந்த விவரங்களும் இல்லை. இது குறித்து அதானி குழுமத்தினரும் பதில் அளிக்க மறுத்துவிட்டனர்.
இந்தியப் பங்குச்சந்தையில் அதானி குழுமம் செய்த தில்லுமுல்லு, மோசடிகள் குறித்து அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் ஆராய்ச்சி நிறுவனம் அறிக்கை வெளியிட்டிருந்தது.
இந்த அறிக்கை இந்தியப் பங்குச்சந்தையில் பெரியபிரளயத்தை ஏற்படுத்தியது. அதானி குழுமத்தின் பங்குகள் அடுத்தடுத்த நாட்களில் மோசமாகச் சரிந்தன, கடந்த 10 நாட்களில் மட்டும் அதானி குழுமம் ரூ.10 கோடியை இழந்துள்ளது.
அதானி நிறுவனத்தில் ரெய்டு! வரிஏய்ப்பு புகாரால் இமாச்சலப் பிரதேச கலால்வரி துறை சோதனை
ஹிண்டன்பர்க் நிறுவனம் தெரிவித்த குற்றச்சாட்டுகள் அனைத்தையும் அதானி குழுமம் மறுத்தது. ஹிண்டன்பர்க் நிறுவனம் கேட்டிருந்த கேள்விகளுக்கும் அதானி குழுமம் பதில் அளித்திருந்தது. தங்கள் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைக் கூறிய ஹிண்டன்பர்க் நிறுவனத்துக்கு எதிராக சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதானி குழுமம் தெரிவித்திருந்தது.
அதானி குழுமத்துக்கு பதிலடியாக, ஹிண்டன்பர்க் நிறுவனமும் சட்டரீதியாக எதிர்கொள்வோம், அமெரிக்க நீதிமன்றத்தில் அதானி குழுமத்தை இழுப்போம் என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.