Adani Wilmar: அதானி நிறுவனத்தில் இமாச்சலப்பிரதேச கலால் வரித்துறை ரெய்டு: அதானி வில்மர் விளக்கம்

அதானி குழுமத்தில் உள்ள அதானி வில்மர் நிறுவனக் கடைகள் இமாச்சலப்பிரதேச மாநில கலால் மற்றும் வரித்துறையினர் நடத்திய ரெய்டு வழக்கமானதுதான், அதில் ஆவணங்கள் ஏதும் கைப்பற்றப்படவில்லை, முறைகேடு ஏதும் நடக்கவில்லை என்று அதானி வில்மர் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

No irregularities were discovered by GST officials in: Adani Wilmar Explained

அதானி குழுமத்தில் உள்ள அதானி வில்மர் நிறுவனக் கடைகள் இமாச்சலப்பிரதேச மாநில கலால் மற்றும் வரித்துறையினர் நடத்திய ரெய்டு வழக்கமானதுதான், அதில் ஆவணங்கள் ஏதும் கைப்பற்றப்படவில்லை, முறைகேடு ஏதும் நடக்கவில்லை என்று அதானி வில்மர் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

அதானி வில்மர் ஸ்டோர்களில் புதன்கிழமை இரவு கலால் மற்றும் வரித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது, சேமிப்பு கிட்டங்கியில் இருந்த பொருட்கள் இருப்பு, ஆவணங்களை ஆய்வு செய்தனர்,  சந்தேகத்துக்குரிய வகையில் இருந்த பணம் குறித்து அதிகாரிகள் கேள்வி எழுப்பினர். இந்த ரெய்டு நள்ளிவரவு வரை தொடர்ந்துள்ளதுஎன ஆங்கில இணையதளங்களில் செய்தி வெளியானது.

No irregularities were discovered by GST officials in: Adani Wilmar Explained

அதானி குழுமம் மற்றும் சிங்கப்பூரைச் சேர்ந்த வில்மர் நிறுவனம் கூட்டாக அதானி வில்மர் நிறுவனத்தை நடத்தி வருகின்றன. இமாச்சலப்பிரதேசத்தில் மட்டும் அதானி குழுமத்துக்கு சொந்தமாக 7 நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. மிகப்பெரிய அளவில் பலசரக்கு பொருட்களை சப்ளை செய்யும் பணி என 7 நிறுவனங்களை நடத்தி வருகிறது. கடந்த 3வது காலாண்டில் இந்த நிறுவனங்கள் ரூ.246 கோடி லாபம் ஈட்டின.

இந்நிலையில் இமாச்சலப்பிரதேச கலால் மற்றும் வரித்துறையினர் நடத்திய ரெய்டு குறித்து அதானி வில்மர் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: 

அதானி குழுமத்துக்கு ரூ.5,400 கோடி போச்சு! டெண்டரை ரத்து செய்தது உத்தரப் பிரதேச பாஜக அரசு

இமாச்சலப்பிரதேசத்தில் உள்ள பர்வானு நகரில் அதானி வில்மர் சேமிப்புக் கிட்டங்கி  செயல்பட்டு வருகிறது. இங்கு கடந்த புதன்கிழமை ஜிஎஸ்டி அதிகாரிகள் வந்து ஆய்வுசெய்தனர். அதிகாரிகளுக்கு, அதானி வில்மர் நிறுவன ஊழியர்கள் முழு ஆதரவு அளித்து ஒத்துழைப்புக் கொடுத்தனர்.

அதானி வில்மர் நிறுவனத்தில் எந்தவிதமான முறைகேடு நடந்ததாக அதிகாரிகள் கண்டுபிடிக்கவில்லை, எந்தவிதமான ஆவணங்களையும் எடுத்துச் செல்லவில்லை.ஜிஎஸ்டி வரி ஏய்ப்பும் நிறுவனம் செய்யவில்லை. 

No irregularities were discovered by GST officials in: Adani Wilmar Explained

ஜிஎஸ்டி அதிகாரிகள் நடத்தும் வழக்கமான ரெய்டு இது. கடந்த முறை இந்த ஆய்வு நடந்தபோது ஊடகங்களில் வெளியாகவில்லை. நாங்கள் வர்த்தகத்தை மிகவும் வெளிப்படைத்தன்மையுடனும், பொறுப்புள்ள வகையிலும் நடத்த கடமைப்பட்டுள்ளோம்.

அதானி நிறுவனத்தில் ரெய்டு! வரிஏய்ப்பு புகாரால் இமாச்சலப் பிரதேச கலால்வரி துறை சோதனை

எங்கள் நிறுவனத்தின் செயல்பாடுகள் அனைத்தும் சட்டத்துக்கு உட்பட்டு, விதிமுறைகளுக்கு கட்டுப்பட்டுதான் செயல்படும். ஜிஎஸ்டி அதிகாரிகள் ஆய்வுக்குப்பின்பும் சேமிப்புக் கிட்டங்கியில் பணி வழக்கம்போல் நடந்து வருகிறது

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios