இந்தியப் பங்குச்சந்தைகள் இன்று காலை ஏற்றத்துடன் தொடங்கி சரிவில் முடிந்தன. சென்செக்ஸ், நிப்டி பிற்பகுதியில் சரிந்தன.

இந்தியப் பங்குச்சந்தைகள் இன்று காலை ஏற்றத்துடன் தொடங்கி சரிவில் முடிந்தன. சென்செக்ஸ், நிப்டி பிற்பகுதியில் சரிந்தன.

அமெரிக்க பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த வரும் மார்ச் மாதக் கூட்டத்தில் பெடரல் ரிசர்வ் 50 புள்ளிகள்வரைவட்டியை உயர்த்தலாம் எனத்தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அமெரிக்க டாலர் மதிப்பும், பங்குகப்பத்திரங்கள் மதிப்பும் அதிகரித்துள்ளது. வடகொரியா அதிகமான அளவில் ஏவுகணைகளை உருவாக்கி வருவது முதலீட்டாளர்களுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியது. 

பங்குச்சந்தை| இன்று தாக்கத்தை ஏற்படுத்தும் 10 காரணிகள் என்ன?

அமெரிக்க பெடரல் ரிசர்வ் எடுக்கும் முடிவு இந்தியச் சந்தையிலும் எதிரொலிக்கும். அந்நிய முதலீட்டாளர்கள் பங்குகளை அதிக அளவில் விற்கலாம், குறைந்த அளவில் வாங்கும் சூழல் உருவாகும்.

அமெரிக்காவின் பொருளாதாரம் குறித்த புள்ளிவிவரங்கள் இன்று இரவு வெளியாகின்றன. இதனால் முதலீட்டாளர்கள் எச்சரிக்கையுடனே வர்த்தகத்தை அணுகியதால் பங்குச்சந்தையில் பிற்பகுதி சரிவுக்கு சென்றது. 

காலையில் ஏற்றத்துடன் தொடங்கி இந்தியப் பங்குசந்தையில் வர்த்தகத்தின் இடையே சரியத் தொடங்கின. அதானி குழுமத்தின் பங்குகள் மதிப்பு சரிவு, இந்தியச் சந்தை சரிவில் முக்கிய அங்கமாக இருந்து வருகிறது. 

மாலை வர்த்தகம் முடிவில் மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 311 புள்ளிகள் குறைந்து, 60,691 புள்ளிகளில் முடிந்தது. தேசியப் பங்குச்சந்தையில் நிப்டி 100 புள்ளிகள் சரிந்து, 17,844 புள்ளிகளில் நிலைபெற்றது.

மும்பைப் பங்குச்சந்தையில் உள்ள 30 முக்கிய நிறுவனங்களில் 12 நிறுவனப் பங்குகள் லாபமீட்டன. 18 நிறுவனப் பங்குகள் சரிவில் முடிந்தன. அல்ட்ராடெக் சிமெண்ட், மகிந்திராஅன்ட் மகிந்திரா, டெக்மகிந்திரா, பார்திஏர்டெல்,பவர்கிரிட், விப்ரோ, இன்போசிஸ், சன்பார்மா, ஐடிசி, டாடா மோட்டார்ஸ், டாடா ஸ்டீல், எச்சிஎல்டெக் பங்குகள் லாபமீட்டன.

பங்குச்சந்தை| சென்செக்ஸ், நிப்டி புள்ளிகள் ஏற்றம்: ஐடி பங்குகள் லாபம்

நிப்டியில் சிப்லா, அதானி என்டர்பிரைசர்ஸ், பிரிட்டானியா இன்டஸ்ட்ரீஸ், பிபிசிஎல், யுபிஎல் பங்குகள் சரிவைச்சந்தித்தன. டிவிஸ் லேப்ரட்ரீஸ், அல்ட்ராடெக் சிமெண்ட், டெக் மகிந்திரா, ஹிண்டால்கோ இன்டஸ்ட்ரீஸ், பவர்கிரிட் ஆகியபங்குள் லாபமீட்டன. நிப்டியில் ஐடி, ஆட்டோமொபைல் பங்குகளைத் தவிர அனைத்துத் துறைப்பங்குகளும் சரிவில் முடிந்தன