தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு ஒரு புதிய உத்தரவை வழங்கியுள்ளது உச்சநீதிமன்றம். அதன்படி,  புதிய சிம் வாங்குவோர் கட்டாயம் ஆதார் எண் சமர்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீவிரவாத அச்சுறுத்தல் அதிகம் இருப்பதாலும், பாதுகாப்பான சேவையை வழங்குவதற்காகவும் அதே வேளையில் பல குற்ற செயல்களை தடுப்பதற்காகவும், தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு ஆதார் எண்  தேவையின் முக்கியத்துவத்தை விவரிக்கப்பட்டுள்ளது

இதன் தொடர்ச்சியாக தற்போது, தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களின் ஆதார்  அட்டை நகலை சமர்பிக்க முயற்சி மேற்கொண்டு , அதற்கான பணியில் ஈடுபட்டு வருகிறது .

இவ்வாறு மற்ற நிறுவனங்கள் மேற்கொள்ளும் ஆதார் எண் சேகரிப்பு முயற்சியை, இந்திய செல்பேசி சேவை நிறுவனங்கள் கூட்டமைப்பு மேற்பார்வை செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 பணியாளர்கள்

இந்த பணியை செய்வதற்காக ரூ.1000 கோடி செலவில், பணியாளர்களுக்குப் பயிற்சி அளித்து, ஆதார் எண் நகலை சேகரிக்கும் பணியில் மும்முரமாக ஈடுப்படுத்த உள்ளதாக செல்போன்

நிறுவனங்கள் தெரிவித்துள்ளன

ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு புது அறிக்கை வந்தாலும், ஆதார் எண் தொடர்பாக பல முக்கிய நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் இனி வரும் காலங்களில் குற்ற செயல்கள் குறையவும் வாய்ப்பு இருப்பதாக கருத்து தெரிவிக்கப்படுகிறது