Asianet News TamilAsianet News Tamil

உனக்கு அது ஜோக்கா... நிக்சனுக்கு வக்காலத்து வாங்கிய பூர்ணிமாவை பொளந்துகட்டிய வினுஷா

பிக்பாஸ் வீட்டில் வினுஷாவை உருவகேலி செய்து கொச்சையாக பேசிய நிக்சனுக்கு சப்போர்ட் பண்ணிய பூர்ணிமாவை வினுஷா வெளுத்துவாங்கி இருக்கிறார்.

Vinusha slams BiggBoss Poornima who supports Nixen in Bodyshaming issue gan
Author
First Published Jan 12, 2024, 12:57 PM IST | Last Updated Jan 12, 2024, 12:57 PM IST

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசன் இறுதி வாரத்தை எட்டி உள்ளது. வருகிற ஜனவரி 14-ந் தேதி பிரம்மாண்ட பைனல் நடைபெற உள்ளது. தற்போதுள்ள மணி, தினேஷ், விஷ்ணு, மாயா, அர்ச்சனா ஆகிய டாப் 5 போட்டியாளர்களில் ஒருவர் இந்த சீசனில் டைட்டில் வின்னர் ஆகப்போகிறார். அது யார் என்பது 14-ந் தேதி தெரிந்துவிடும். பிக்பாஸ் பைனலுக்கு முன்னர் எலிமினேட் ஆன போட்டியாளர்கள் ஒவ்வொருவராக வீட்டுக்குள் சர்ப்ரைஸ் எண்ட்ரி கொடுத்த வண்ணம் உள்ளனர்.

அந்த வகையில் இந்த சீசனில் மிகவும் சர்ச்சைக்குரிய போட்டியாளராக வலம் வந்த நிக்சன் இன்று பிக்பாஸ் வீட்டுக்குள் கெஸ்ட் ஆக எண்ட்ரி கொடுத்தார். அவர் வந்ததும் முதல் வேலையாக வினுஷா, அவரை அழைத்து சென்று தன்னை உருவகேலி செய்த விஷயம் பற்றி பேசினார். அப்போது அதற்கு தான் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக கூறிய நிக்சன், தான் தவறான எண்ணத்தில் சொல்லவில்லை அது தவறாக காட்டப்பட்டுள்ளது என்று தன்னை நியாயப்படுத்திக் கொண்டார்.

இதையும் படியுங்கள்... Captain Miller Review: தனுஷின் 'கேப்டன் மில்லர்' மாஸ் காட்டியதா? டென்ஷன் ஆக்கியதா.! விமர்சனம்

இதற்கு குறுக்கிட்டு பேசிய வினுஷா, வெளியில் தப்பாக காட்டப்பட்டுள்ளதனால் நீ மன்னிப்பு கேட்கிறாய் என்றால் அந்த மன்னிப்பை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். நீ பேசியது தவறு என்று உணர்ந்து மன்னிப்பு கேட்டால் மட்டுமே ஏற்றுக்கொள்வேன் என சொன்னதும், வேண்டா வெறுப்பாக மன்னிப்பு கேட்டுவிட்டு அந்த இடத்தில் இருந்து ஓடினார் நிக்சன். இந்த விஷயத்தில் வினுஷா முன்னதாக பூர்ணிமாவிடமும் பேசி இருந்தார்.

அப்போது பிளாஸ்மா டிவியில் நிக்சன் சொன்ன கமெண்ட் ஒளிபரப்பானபோது நீங்கள் நிக்சனை கண்டிக்காமல் அவனுக்கு நன்றி சொன்னீர்கள். அதைவிட அன்றைய தினம் மேக்கப் ரூமில் பேசும்போது நிக்சன் சொன்னது ஜோக் எனவும் ஏன் நியாயப்படுத்துனீங்க என வினுஷா கேட்டதும், வழக்கம்போல் சப்பைக்கட்டு கட்டிய பூர்ணிமா, தான் சொன்னது தவறுதான் என்று இறுதிவரை ஒத்துக்கொள்ளவே இல்லை. இதைப்பார்த்த நெட்டிசன்கள், இன்னும் நீ திருந்தவே இல்லையா என விமர்சித்து வருகின்றனர்.

இதையும் படியுங்கள்... சிவகார்த்திகேயனின் 6 ஆண்டு காத்திருப்புக்கு பலன் கிடைத்ததா? அயலான் சூப்பரா... சுமாரா? முழு விமர்சனம் இதோ

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios