Asianet News TamilAsianet News Tamil

பிக்பாஸ் வீட்டில் ஜெயில் வேற இருக்கா... அரஸ்ட் வாரண்ட் பிறப்பித்து கைது செய்யப்பட்ட இருவர் யார் தெரியுமா?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் முதல் வார இறுதியில் போரிங் போட்டியாளர்களாக இருவரை தேர்வு செய்து அவர்களை சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.

Vinusha devi and akshaya udhayakumar arrested by bigg boss gan
Author
First Published Oct 9, 2023, 4:05 PM IST | Last Updated Oct 9, 2023, 4:05 PM IST

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசனில் முதல் வாரத்திலேயே சூடுபிடிக்க தொடங்கி உள்ளது. வழக்கமாக ஒரு வீட்டில் நடத்தப்படும் பிக்பாஸ் நிகழ்ச்சி, இந்த முறை இரண்டு வீடுகளில் நடத்தப்படுவதால், இதில் பிரச்சனைகளும் டபுள் டபுளாக வருகிறது. முதல் வார இறுதியில் மக்கள் அளித்த வாக்குகளின் அடிப்படையில் குறைவான வாக்குகளை பெற்ற அனன்யா ராவ் வெளியேற்றப்பட்டார்.

இதையடுத்து எஞ்சி இருந்த 17 போட்டியாளர்களில் எழுத்தாளர் பவா செல்லதுரை, தனக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் தானாக முன்வந்து பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறினார். இதனால் தற்போது எஞ்சியுள்ள 16 போட்டியாளர்களிடையே ஆட்டம் சூடுபிடித்துள்ளது. இந்த நிலையில் தற்போது வெளியாகி உள்ள புரோமோவில் புது டுவிஸ்ட் ஒன்றை கொடுத்துள்ளார் பிக்பாஸ்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

Vinusha devi and akshaya udhayakumar arrested by bigg boss gan

அதன்படி கடந்த வார அடிப்படையில் சுவாரஸ்யம் இல்லாத போட்டியாளர்கள் என இருவரை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு அரெஸ்ட் வாரண்ட் பிறப்பித்து சிறையில் அடைக்க உத்தரவிட்டுள்ளார். அதன் அடிப்படையில் அக்‌ஷயா மற்றும் வினுஷா தேவி ஆகியோர் இந்த சீசனில் முதன்முறையாக சிறைக்கு செல்ல உள்ளதாக பிக்பாஸ் அறிவித்துள்ளார்.

அக்‌ஷயா ஜெயிலுக்கு செல்ல உள்ளதாக பிக்பாஸ் அறிவித்ததும் அதை சுமால் பாஸ் வீட்டில் இருப்பவர்கள் கைதட்டி கொண்டாடி உள்ளனர். இதனால் மனமுடைந்துபோன அக்‌ஷயா, கேமரா முன் நின்று அழும் காட்சிகளும் இந்த புரோமோவில் இடம்பெற்று உள்ளது. 

இதையும் படியுங்கள்... பிக்பாஸ் வீட்ல அவ தம் அடிச்சா உனக்கென்ன? விசித்ராவை வெளுத்துவாங்கிய வனிதா விஜயகுமார்

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios