பிளான் பண்ணி ரெட் கார்டு கொடுத்து ஒருத்தன் வாழ்க்கைய அழிச்சிருக்கீங்க! மாயா, பூர்ணிமாவை கிழித்தெடுத்த விசித்ரா
பிக்பாஸ் வீட்டில் பிரதீப்பை ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றிய விவகாரத்தில் மாயா மற்றும் பூர்ணிமாவை விசித்ரா வெளுத்துவாங்கி இருக்கிறார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசனில் மிகவும் ஸ்மார்ட் ஆன போட்டியாளராக விளையாடி வந்தவர் பிரதீப் ஆண்டனி. அவரைப்போல் அந்த வீட்டின் விதிமுறைகளை தெரிந்த ஆள் யாருமே இருக்க முடியாது. அந்த அளவுக்கு விதிமுறைகளை முறையாக பின்பற்றி விளையாடி வந்தார். அவரை நாமினேட் செய்தாலும் வெளியேற வாய்ப்பில்லாததால், மாயா, பூர்ணிமா ஆகியோர் கேங்காக பேசிவைத்து அவர்மீது உரிமைக்குரல் மூலம் அடுக்கடுக்கான புகார்களை கொடுத்தனர்.
அதில் பிரதீப், இந்த வீட்டில் இருந்தால் தங்களுக்கு பாதுகாப்பு இலை என மாயா, பூர்ணிமா, ஜோவிகா, ரவீனா ஆகியோர் ஒன்றாக புகார் கொடுத்ததை அடுத்து அதிரடி ஆக்ஷனில் இறங்கிய கமல் பிரதீப்பை ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்பினார். அவர் பிரதீப் தரப்பு நியாயத்தை பேச கூட வாய்ப்பளிக்காமல் அவரை வெளியே அனுப்பியது சர்ச்சையை ஏற்படுத்தியதோடு, சோசியல் மீடியாவில் ஹாட் டாப்பிக் ஆக விவாதிக்கப்பட்டு வருகிறது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
இந்த நிலையில், பிரதீப்புக்கு ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்பிய விவகாரம் குறித்து பிக்பாஸ் வீட்டிலும் கார சார விவாதம் நடந்துள்ளது. அதன்படி இந்த வார நாமினேஷனின் போது, ரெட் கார்டு விவகாரத்தில் குரூப்பாக விளையாடிருக்காங்க என சொல்லி விசித்ரா நாமினேட் செய்திருக்கிறார். இதையடுத்து மாயா அவரிடம் சென்று இது எவ்வளவு கேவலமான விஷயம் தெரியுமா என வாக்குவாதம் செய்திருக்கிறார்.
உடனே சுமால் பாஸ் வீட்டில் இருந்த விசித்ராவும், அர்ச்சனாவும் மாயாவிடம் சண்டை போட்டுள்ளனர். women card எவ்வளவு பவர்புல்லானது என்பது உங்களுக்கு தெரியும். மனசாட்சி பிரகாரம் இதை நீங்க பயன்படுத்தி இருந்தீங்கனா பிரச்சனையே இல்ல, அப்படி யூஸ் பண்ணலன்னா நீங்க ஒருத்தரோட வாழ்க்கைய அழிச்சிருக்கீங்க, மனசுல வச்சிக்கோங்க என அர்ச்சனா சொன்னதும் பூர்ணிமா ஷாக் ஆகி உள்ளார். இதுகுறித்த புரோமோ காட்சிகள் வைரலாகி வருகிறது.
இதையும் படியுங்கள்... பெண்களுக்கு பாதுகாப்பு இல்லைனு துரத்திய கமலுக்கு ரெட் கார்டை வைத்தே தரமான பதிலடி கொடுத்த பிரதீப் - வைரல் photo