Asianet News TamilAsianet News Tamil

நிக்சனின் சில்மிஷ வேலைகளை குறும்படம் போட்டு காட்டிய பிக்பாஸ்... ச்சீ-னு காரித்துப்பிய ஹவுஸ்மேட்ஸ்

வினுஷா குறித்து பிக்பாஸ் போட்டியாளர் நிக்சன் சொன்ன கேவலமான கமெண்ட்டை குறும்படம் போட்டுக்காட்டியதால் ஹவுஸ்மேட்ஸ் அவரை சரமாரியாக சாடி உள்ளனர்.

Vichithra reacts to Nixen vulgar comment about vinusha exposed by BiggBoss gan
Author
First Published Nov 8, 2023, 10:47 AM IST

பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது படிப்படியாக பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகிறது. பிக்பாஸ் வீட்டில் உள்ள பெண்களிடம் பிரதீப் ஆண்டனி தவறாக நடந்துகொண்டதாக கூறி, அவரை கடந்த வாரம் ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்பினார் கமல். அவரால் வீட்டில் உள்ள பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என அங்கிருந்த போட்டியாளர்கள் சில கூறியதை காரணம் காட்டி அவர் அதிரடியாக வெளியேற்றப்பட்டார்.

இந்த விஷயத்தில் கமல்ஹாசன் பிரதீப் தரப்பு நியாயத்தை கேட்காததும் விவாத பொருளாக மாறியது. நேற்று கமல்ஹாசனுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியபோது கூட தீர விசாரிப்பதே மெய் என பிரதீப் பதிவிட்டு கமல் மீதான தனது அதிருப்தியை வெளிப்படுத்தி இருந்தார். பிரதீப் வெளியேறி கிட்டத்தட்ட 4 நாட்கள் ஆனாலும் அவருடைய எவிக்‌ஷன் தான் தற்போது பிக்பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்கள் இடையே சண்டை வெடிக்க காரணமாகவும் அமைந்தது.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

BB Tamil 7

விசித்ரா, தினேஷ், அர்ச்சனா ஆகியோர் பிரதீப்புக்கு எதிராக ஆதரவாக விவாதித்ததால், மாயா, பூர்ணிமா, ஐஷூ, ஜோவிகா, நிக்சன் ஆகியோர் அவர்களிடம் சண்டையிட்டு வருகின்றனர். இதுதான் கடந்த இரு தினங்களாக தொடர்ந்து வருகிறது. இந்த நிலையில், பிக்பாஸ் வீட்டில் பிரதீப்புக்கு எதிராக பேசும் பலர் என்னென்ன கீழ்தரமான கமெண்ட்டுகளை செய்துள்ளார்கள் என்பதை குறும்படமாக போட்டுக்காட்டி அதற்கு சம்பந்தப்பட்ட போட்டியாளர் விளக்கம் கொடுக்க வேண்டும் என கூறி இருக்கிறார்.

இதில் நிக்சன் வினுஷா பற்றி கூறிய கமெண்ட்டும் இடம்பெற்று உள்ளது. அந்த கமெண்ட்டில், “வினுஷா வேலைக்காரி. Not my Type, ஒரு ஒருத்தங்களுக்கு ஒன்னு Attract ஆகணும்ல? எனக்கு வந்து உடம்புங்கிறது Perfect ஆ இருக்கனும். இதுக்கேத்த இது. இதுக்கேத்த இது. அவங்களுக்கு மண்ட மட்டும் தான் குட்டியா இருக்கு. அவங்க கண்ணு நல்லா இருக்கு. டிரெஸ் போட்டா Perfect ஆ இருக்கு. அது ஓகே... பூர்ணிமாக்கா அழகா இருக்காங்க. அந்த மாதிரி தான் இருக்கனும் Perfect ஆ” என பேசி உள்ளார். அவர் ஐஷூவிடம் தான் இந்த கமெண்ட்டை சொன்னார்.

இதைப்பார்த்து விசித்ரா, அர்ச்சனா, ரவீனா உள்ளிட்ட ஹவுஸ்மேட்ஸ் முகம்சுளித்தனர். உடனே சிரித்துக் கொண்டே விளக்கம் கொடுக்க சென்ற நிக்சன், விசித்ராவை பார்த்து நான் அந்த அர்த்தத்துல சொல்லல, நீங்க அப்படி மூஞ்ச வச்சிட்டு இருந்தீங்கனா செம்ம டென்ஷன் ஆகுது. அந்த மாதிரி நான் பேசல. அப்படி நீங்க நினைத்திருந்தால் சாரி என கைகூப்பி மன்னிப்பு கேட்கும் காட்சிகள் அதில் இடம்பெற்று உள்ளது.

இதையும் படியுங்கள்... இளையராஜா உடன் சண்டை... நான் இசையமைப்பாளர் ஆனதற்கு காரணமே இதுதான் - மனம்திறந்த மிஷ்கின்

Follow Us:
Download App:
  • android
  • ios