Asianet News TamilAsianet News Tamil

ஆர்டர் போட்ட கேப்டன்... அங்குட்டு போடானு விரட்டிவிட்ட சுமால்பாஸ் ஹவுஸ்மேட்ஸ் - பிக்பாஸில் முற்றும் மோதல்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களை பட்டினி போடும் விதமாக ஸ்டிரைக் செய்யும் சுமால் பாஸ் ஹவுஸ்மேட்ஸ் கேப்டனையும் இழிவாக பேசி உள்ளனர்.

Small Boss Housemates irritate captain saravana vickram during strike gan
Author
First Published Oct 12, 2023, 4:07 PM IST | Last Updated Oct 12, 2023, 4:07 PM IST

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த அக்டோபர் 1-ந் தேதி தொடங்கிய இந்நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் கலந்துகொண்டனர். இதில் முதல் வார இறுதியில் அனன்யா எலிமினேட் செய்யப்பட்டார். இதையடுத்து மற்றொரு போட்டியாளாரான பவா செல்லதுரை உடல்நலக்குறைவு காரணமாக பாதியிலேயே வெளியேறினார்.

இதனால் தற்போது 16 போட்டியாளர்கள் மட்டுமே பிக்பாஸ் வீட்டில் எஞ்சி உள்ளனர். இதில் இந்த வாரம் பிரதீப், விஜய் வர்மா, மாயா, ஐஷூ, கூல் சுரேஷ், விஷ்ணு விஜய் ஆகியோர் சுமால் பாஸ் வீட்டில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் அனைவரும் பிக்பாஸ் வீட்டில் உள்ளவர்களுக்கு சமையல் செய்துதர வேண்டும். ஆனால் தற்போது அந்த வீட்டில் உள்ளவர்கள் ஸ்ட்ரைக்கில் இறங்கி உள்ளனர்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

இதனால் பிக்பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்கள் அனைவரும் சாப்பிட உணவு இன்றி தவித்து வருகின்றனர். அவர்கள் பசியால் வாடி வருவதை பார்த்தும் சுமால் பாஸ் குடும்பத்தினர் ஸ்ட்ரைக்கை வாபஸ் வாங்க முன்வரவில்லை. இதனால் டென்ஷன் ஆன இந்த வார பிக்பாஸ் கேப்டன் சரவணன் முக்கிய அறிவிப்பு ஒன்றை அறிவிக்கிறார்.

பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போட்டியாளர்கள் சுமால் பாஸ் வீட்டிற்குள் செல்ல அனுமதி கிடைக்காவிட்டாலும், கேப்டன் அந்த வீட்டுக்கு செல்ல அனுமதி உண்டு. அதனால் சரவணன் அந்த வீட்டுக்குள் சென்று தான் அனைவருக்கு உணவு சமைக்க உள்ளதாகவும் இது தனது உத்தரவு என கூறுகிறார். இதற்கு அங்குட்டு போடானு சொல்லி சுமால் பாஸ் வீட்டில் இருக்கும் ஹவுஸ்மேட்ஸ் சொல்லி அவமானப்படுத்தி விடுகின்றனர். இதுகுறித்த புரோமோ காட்சிகள் வைரலாகி வருகிறது.

இதையும் படியுங்கள்... லேடி சூப்பர்ஸ்டாரை மிஞ்சும் அளவுக்கு வனிதாவுக்கு புது பட்டம் வழங்கிய வைஜெயந்தி ஐபிஎஸ் படக்குழு

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios