Asianet News TamilAsianet News Tamil

படிப்பு முக்கியமா? நீயா நானா-வாக மாறிய பிக்பாஸ் வீடு - ஜோவிகா vs விசித்ரா மோதலும்.. கோபிநாத்தின் பதிலும்

படிப்பு முக்கியமா இல்லையா என்பது குறித்து ஜோவிகாவும், விசித்ராவும் பிக்பாஸ் வீட்டில் காரசாரமாக விவாதித்துக்கொண்ட நிலையில், கோபிநாத்தின் பழைய வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

Neeya Naana Gopinath old speech viral after Bigg Boss Jovika vs Vichithra fight regarding education gan
Author
First Published Oct 7, 2023, 8:50 AM IST

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், நேற்று நடைபெற்ற டாஸ்க்கில் நடிகை விசித்ராவும், வனிதா மகள் ஜோவிகா விஜயகுமாரும் கல்வி பற்றி விவாதித்துக் கொண்டது தான் தற்போது சோசியல் மீடியாவில் பேசு பொருள் ஆகி உள்ளது. இதில் விசித்ரா முன்வைத்த கருத்து என்னவென்றால், அடிப்படை கல்வி என்பது மிகவும் முக்கியமானது. அதனால் 12-ம் வகுப்பு வரை படித்து முடித்துவிடு என்று ஜோவிகாவுக்கு அட்வைஸ் பண்ணினார்.

அவர் சொன்னது சரியான விஷயமாக இருந்தாலும், அதனை சொன்ன விதம் தான் தவறாக அமைந்தது. இதையடுத்து பேசிய ஜோவிகா தனது கல்வி பற்றி பேசவேண்டாம் என விசித்ராவிடம் கூறியும் அவர் திரும்ப திரும்ப பேசியுள்ளார். எனக்கு படிப்பு வரல அதனால் தான் நான் 9-ம் வகுப்போடு நிறுத்திவிட்டேன். என்னைப்போல் ஏராளமான குழந்தைகள் இருக்கிறார்கள் அவர்களுக்காக தான் நான் இங்கு வந்திருக்கிறேன்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

படிச்சா தான் முன்னேற முடியும் என்பது கிடையாது. எல்லாரும் டாக்டருக்கு படிச்சா யாரு கம்பவுண்டர் வேலை பார்ப்பது. இப்படி படிக்க சொல்லி வற்புறுத்துவதால் தான் நீட் மரணங்கள் நடைபெறுகின்றன என சொல்லி இந்த விஷயத்தை சென்சேஷன் ஆக்கினார் ஜோவிகா. இதில் ஜோவிகாவின் பேச்சுக்கு அங்கிருந்த மாயா உள்ளிட்ட போடியாளர்கள் கைதட்டி ஆரவாரம் செய்து உசுப்பேற்றி விட்டதால் ஒருகட்டத்தில் விசித்ராவை ஒருமையில் பேசினார் ஜோவிகா.

இப்படி ஜோவிகாவின் பேச்சுக்கு சமூக வலைதளங்களில் எந்த அளவுக்கு ஆதரவு கிடைக்கிறதோ அதே அளவுக்கு எதிர்ப்பும் கிளம்பி உள்ளது. ஜோவிகா தனக்கு படிப்பு வராததால் அவருக்கு பிடித்ததை செய்கிறார் அதில் என்ன தவறு இருக்கிறது என ஒருதரப்பினர் ஆதரவுக்கரம் நீட்டினாலும், இதை எதிர்ப்போர் சொல்வதிலும் நியாயம் இருக்க தான் செய்கிறது. ஜோவிகா, வசதியான வீட்டு பெண், அவர் படிக்கவில்லை என்றால் அவரது பெற்றோரால் அதை சமாளித்துக் கொள்ள முடியும், ஆனால் ரியாலிட்டியில் படிப்பு வரவில்லை என்று ஒரு மிடில் கிளாஸ் பொண்ணையோ பையனையோ நிறுத்திவிட முடியாது. அவன் படித்தால் தான் அவனது குடும்பம் அடுத்த நிலைக்கு செல்லும். விசித்ரா சொன்னது அடிப்படை கல்வி அவசியம் என்பது தான். அது உண்மையும் கூட என பதிவிட்டு வருகின்றனர்.

Neeya Naana Gopinath old speech viral after Bigg Boss Jovika vs Vichithra fight regarding education gan

இவர்கள் இருவரின் மோதலுக்கு முடிவுகட்டும் வகையில் நீயா நானா கோபிநாத்தின் பழைய மேடை பேச்சு ஒன்று அமைந்துள்ளது. அதில் அவர் சொன்னது என்னவென்றால், படிக்காதவன் தான் சாதித்திருக்கிறான் என்று சச்சின், பில்கேட்ஸ், காமராஜர் என ஒரு 10 பேரை சொல்லுவார்கள். 11-வது ஒரு ஆளை சொல்ல சொல்லுங்க பார்ப்போம். ஏன்னா எவனும் கிடையாது. படிக்காம ஜெயிச்ச 10 பேரை நீங்க சொன்னா, படிச்சு ஜெயிச்ச 10 லட்சம் பேரை நான் சொல்லுவேன். படிப்பு ரொம்ப முக்கியம்.

உங்களை திசை திருப்புகிறார்கள். கல்வி தான் முக்கியமானது. எழுதி வச்சிக்கோங்க இன்னும் ஒரு வருஷத்துல நீட் தேர்வுல நம்ம பையன் தான் டாப்ல வருவான். படிக்காம ஜெயிச்சவங்க லிஸ்ட்ல நம்ம பர்ஸ்ட் சொல்றது காமராஜரை தான். அவர் படிக்காதவராக இருந்தாலும் அவர் ஏன் படிப்புக்கு முக்கியத்துவம் கொடுத்தார். படிக்காத என்னாலயே இவ்ளோ செய்ய முடியுதே படிச்சவர்களால் என்னென்ன செய்ய முடியும் என்று காமராஜர் கண்ட கனவினால் தான் இன்று இவ்வளவு பேர் படித்திருக்கிறார்கள்.

வறுமையில் இருந்தாலும் பிள்ளைகளை படிக்க வைக்க வேண்டும் என்கிற பெற்றோர் இருக்குற ஒரே மாநிலம் தமிழ்நாடு தான். சோசியல் மீடியால படிப்பு ஒன்னுமே கிடையாதுனு சொல்றவன நம்பாதிங்க அவனெல்லாம் மக்குப்பய. படிப்பு என்பது மார்க் சம்பந்தப்பட்டது அல்ல. படிப்பு தான் சமூக நீதியை சொல்லிக் கொடுத்திருக்கிறது. படிப்பு ஒரு ஆயுதம்” என கோபிநாத் ஆக்ரோஷமாக பேசிய பேச்சு தற்போது பிக்பாஸ் வீட்டில் நடந்த மோதலுக்கு தக்க பதிலடியாக இருப்பதாக நெட்டிசன்கள் வைரலாக்கி வருகின்றனர்.

இதையும் படியுங்கள்...  Bigg Boss: விட்டா அடி தடியில் இறங்கிடுவாங்க போலயே? மூஞ்சை உடைச்சிடுவேன்... விஜய்யால் ரணகளமான பிக்பாஸ் வீடு!

Follow Us:
Download App:
  • android
  • ios