காதலர்களுக்குள் சண்டையை மூட்டிவிட்ட பிக்பாஸ்... நிக்சன் - ஐஷூ ஜோடி பிரேக் அப் ஆகிறதா?
நிக்சன் மற்றும் ஐஷூ இடையேயான காதல் அவர்களது விளையாட்டை பாதிப்பதாக கூறி கோர்ட் டாஸ்க்கில் வழக்கு தொடர்ந்து விவாதித்துள்ளார் மணி.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசனில், மணி - ரவீனா, நிக்சன் - ஐஷூ என இரண்டு காதல் ஜோடிகள் வலம் வருகின்றன. இதில் முதல் இரண்டு வாரம் மணி - ரவீனா இருவரும் ரொமான்ஸ் செய்வதிலேயே கவனம் செலுத்தியதால் கேமில் கோட்டைவிட்டு விடுவதாக விமர்சனங்கள் எழுந்ததை அடுத்து உஷாரான இருவரும் பின்னர் லவ் டிராக்கை நிறுத்திவிட்டு விளையாட்டில் கவனம் செலுத்த தொடங்கி உள்ளனர்.
அவர்கள் லவ் டிராக்கை நிறுத்தியதும் அந்த இடத்தை நிக்சனும் ஐஷூவும் பிடித்துக் கொண்டனர். இருவரும் ரொமான்ஸ் என்கிற பெயரில் செய்யும் செயல்கள் எல்லாம் கடும் விமர்சனத்துக்குள்ளாகி உள்ளன. முதல் வாரத்தில் நிக்சன், ஐஷூ இருவரும் தனித்தனியே விளையாடிய விதம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தது. ஆனால் எப்போது காதல் செய்ய தொடங்கினார்களோ அப்போதே அவர்களது கேமும் பாதித்தது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
இதை மணி சந்திரா ஒரு வழக்காக தொடுத்து கோர்ட் டாஸ்க்கில் விவாதித்துள்ளார். அப்போது என்னுடைய வளர்ச்சிக்கு ரவீனா தடையாக இருப்பதாக சொன்ன நிக்சன், ஐஷூவோட வளர்ச்சிக்கு தடையாக இருப்பதை ஒத்துக்கொள்ள வேண்டும் என வாதிட்டார். நிக்சனால் தன்னுடைய கேம் பாதித்ததாக ஐஷூ தன்னிடம் பர்சனல் ஆக வந்து சொன்னதாகவும் மணி வாதத்தை முன்வைத்தார்.
இந்த டாஸ்க் முடிந்த பின்னர் மணியிடம் வந்து நானும் ஐஷூவும், உங்களையும் ரவீனாவையும் போலவா இருக்கிறோம் என சண்டை போட. உடனே மணி, நான் ஐஷூ சொன்னதை சொன்னால் எல்லாமே காலி என நிக்சனுக்கு வார்னிங் கொடுத்துள்ளார். இதைப்பார்க்கும் போது காதல் ஜோடிக்கு இடையே சண்டையை மூட்டிவிட்டு பிக்பாஸ் வேடிக்கை பார்ப்பதாக நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். ஐஷூ தனக்கு வெளியில் ஆள் இருப்பதாக மணியிடம் தனியாக கூறி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... இந்த 2 விஷயத்துக்கு ஓகே சொல்லுங்க உடனே வரேன்... பிரதீப் போட்ட கண்டிஷனால் ஆடிப்போன பிக்பாஸ் டீம்