Asianet News TamilAsianet News Tamil

பிக்பாஸ் 7: பூர்ணிமாவுக்கு மமதை வந்துருச்சா? இது அதிகார துஷ்பிரயோகம்... கமல் பேசிய பதவி அரசியல்!

பூர்ணிமா ரவி இரண்டு முறை கேப்டனாகத் தேர்வு செய்யப்பட்டதால் அவருக்கு மமதை வந்துவிட்டதாகத் தோன்றுகிறது என்று கண்டித்திருக்கிறார் கமல்.

Kamal Haasan slams Poornima Ravi captaincy in Big Boss 7 sgb
Author
First Published Nov 5, 2023, 11:26 PM IST | Last Updated Nov 5, 2023, 11:51 PM IST

பிக்பாஸ் 7வது சீசன் விஜய் டிவியில் கடந்த அக்டோபர் 1ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகி வருகிறது. இதுவரை எவிக்‌ஷனில் அனன்யா, விஜய் வர்மா, வினுஷா தேவி, யுகேந்திரன் போன்றோர் வெளியேறியுள்ளனர். பாபா செல்லத்துரை உடல்நலக் குறைவு காரணமாக பிக்பாஸ் வீட்டை விட்டில் இருந்து வெளியேறினார்.

இந்நிலையில் சனிக்கிழமை திடீரென பிரதீப் ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்டார். இருந்தாலும் இந்த வாரம் எவிக்‌ஷன் இருக்கும் என கமல் கூறியுள்ள நிலையில், அக்‌ஷயா, கானா பாலா, ஐஷு மூவரில் ஒருவர் இன்று வெளியேறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரேகாவை பலவந்தமா லிப்கிஸ் அடிச்ச நீங்கல்லாம் பெண்கள் உரிமை பற்றி பேசலாமா? கமலை கழுவிஊற்றிய யுகேந்திரன் மனைவி

இந்நிலையில், பிக்பாஸ் மூன்றாவது புரோமோவில் கமல் பூர்ணிமாவைப் பற்றிக் கடுமையாகப் பேசியிருப்பது டிவிஸ்டாக மாறியுள்ளது. "நீங்க சொன்ன ஒரு கமெண்டை உங்களுக்கு நினைவுபடுத்துறேன். அவர் சும்மா ஒரு கார்டு கொடுத்தாரு, ஆனால் நான் ஆல் செலக்ட் பண்ணிட்டேன் என்று சொன்னீங்க. இப்ப திரும்பவும் ஒரு முறை கார்டு கொடுக்கிறேன் இதை யாருக்கு கொடுக்கணுமோ கொடுங்க." என்று கமல் கூறுகிறார்.

தொடர்ந்து, "பிக்பாஸ் ஒண்ணும் சும்மா அந்தக் கார்டைக் கொடுக்கலன்னு இப்பவாவது புரிஞ்சுகிட்டிங்களா... ரெண்டு தடவை கேப்டன் ஆனதால மமதை வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது" என்று கடுமையாகப் பேசியுள்ளார் கமலஹாசன். இப்படி பூர்ணிமாவை கமல் வறுத்தெடுக்க, ஆடியன்ஸ் அதை ரசித்து அப்ளாஸ் கொடுக்கிறார்கள்.

Kamal Haasan slams Poornima Ravi captaincy in Big Boss 7 sgb

ஆடியன்ஸ் சப்போர்ட் கிடைத்ததும் கமல் சான்ஸை பயன்படுத்தி, தனது அரசியல் கருத்தையும் பேசியிருக்கிறார். பூர்ணிமாவைப் பார்த்து, "இது அதிகாரம் துஷ்பிரயோகம் ஆகிவிடக்கூடாது... இது எந்தத் தலைமைக்கும் பொருந்தும்" என்று கோபமாகப் பேசியிருக்கிறார். நெட்டிசன்கள் கமலின் ஆவேசமான பேச்சை அரசியலுடன் தொடர்புபடுத்தி, ஆளும் கட்சியை விமர்சனம் செய்திருக்கிறார் என்று கிளப்பிவிடுகிறார்கள்.

ஏற்கெனவே பூர்ணிமா மீது ஒரு தரப்பு ரசிகர்களுக்கு அதிருப்தி இருக்கிறது. பூர்ணிமா ஐஷூ, மாயா மூன்று பேரும் கூட்டு சேர்ந்து சதி செய்வதாகவும் மாயாவோட நெகட்டிவிட்டி இன்னும் அதிகமா வரும் என்றும் சமூக வலைத்தளங்களில் கருத்து கூறி வருகின்றனர். ஐஷூவை வெளியே அனுப்புங்க என்றும் சிலர் தெரிவித்து வருகிறார்கள்.

பிரதீப்பை ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றிய பின்... போட்டியாளர்களுக்கு ஸ்வீட் அனுப்பிய கமல் - காரணம் என்ன?

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios