ஸ்டிரைக் பண்ணும் சுமால் பாஸ் ஹவுஸ்மேட்ஸ்... பட்டினி கிடக்கும் போட்டியாளர்கள் - ரணகளமான பிக்பாஸ் வீடு
பிக்பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்களுக்கு சமைத்து தர முடியாது என சுமால் பாஸ் வீட்டில் உள்ளவர்கள் ஸ்டிரைக் பண்ணியதால் இரு தரப்புக்கும் மோதல் வெடித்துள்ளது.
பிக்பாஸ் வரலாற்றில் முதன்முறையாக இந்த சீசனில் தான் இரண்டு வீடுகளுடன் பிக்பாஸ் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. ஒரு வீட்டில் இருந்தாலே மோதலுக்கு பஞ்சமிருக்காது. தற்போது இரண்டு வீடுகளாக பிரிக்கப்பட்டுள்ளதால் நாள்தோறும் ஏதேனும் ஒரு பஞ்சாயத்து நிலவி வருகிறது. அந்த வகையில் தற்போது இந்த வாரம் சுமால் பாஸ் வீட்டில் இருக்கும் ஹவுஸ்மேட்ஸ் பிக்பாஸ் ஹவுஸ்மேட்ஸ் உடன் மோதலில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த வாரம் சுமால் பாஸ் வீட்டில் மாயா கிருஷ்ணன், பிரதீப் ஆண்டனி, விஷ்ணு விஜய், விஜய் வர்மா, ஐஷூ, கூல் சுரேஷ் ஆகியோர் உள்ளனர். பிக்பாஸ் விதிப்படி சுமால் பாஸ் வீட்டில் இருக்கும் ஹவுஸ்மேட்ஸ் தான் பிக்பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்களுக்கு உணவுகளை சமைத்துக் கொடுக்க வேண்டும். அவர்களுக்கு தேவையான பொருட்களை பிக்பாஸ் வீட்டில் உள்ளவர் ஷாப்பிங் செய்து கொடுக்க வேண்டும்.
அந்த வகையில் இன்று சுமால் பாஸ் வீட்டில் உள்ள ஹவுஸ்மேட்ஸ் தாங்கள் பிக்பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்களுக்கு சமைத்து தர முடியாது எனக்கூறி ஸ்டிரைக்கில் இறங்கி உள்ளனர். இதனால் பிக்பாஸ் போட்டியாளர்கள் பசி தாங்க முடியாமல் அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபடும் காட்சிகள் அடங்கிய புரோமோ வெளியாகி உள்ளது.
சுமால் பாஸ் ஹவுஸ்மேட்ஸ் சமைத்து தர மறுத்ததால் அவர்களுக்கான மளிகை சாமான்களை வழங்க முடியாது என பிக்பாஸ் வீட்டில் உள்ளவர்களும் பதிலடி கொடுக்க, இரண்டு வீடுகளுக்கும் இடையே பகை முற்றிப்போய் உள்ளது. இதனால் இன்றைய எபிசோடும் அனல்பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படியுங்கள்... லியோ வெற்றிபெற வேண்டி... திருப்பதிக்கு பாதயாத்திரை சென்ற இயக்குனர் லோகேஷ் கனகராஜ் - வைரலாகும் வீடியோ