Asianet News TamilAsianet News Tamil

உங்களுக்கு வந்தா ரத்தம்; எங்களுக்கு வந்தா தக்காளி சட்னியா! ஆபாச கமெண்ட் அடித்த மாயாவை வெளுத்துவாங்கிய தினேஷ்

ஆர்.ஜே.பிராவோ பற்றி ஆபாசமாக கமெண்ட் அடித்த மாயாவை சக போட்டியாளரான தினேஷ் வெளுத்து வாங்கிய புரோமோ காட்சிகள் வெளியாகி உள்ளன.

BiggBoss Dinesh slam maya for her bad comments about RJ Bravo gan
Author
First Published Nov 8, 2023, 12:52 PM IST | Last Updated Nov 8, 2023, 1:07 PM IST

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் இதுவரை 7 போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டுள்ள் நிலையில் தற்போது தான் ஆட்டம் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது. அதுவும் கடந்த வாரம் பிரதீப் ஆண்டனி ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்டது ஆட்டத்தின் போக்கையே மாற்றி இருக்கிறது. அவரின் எவிக்‌ஷனுக்கு பின் இந்த வாரம் கேப்டனான மாயா, போட்டியாளர்களை அணிதிரட்டி சண்டை போட்டு வருகிறார்.

அதுவும் குறிப்பாக சுமால் பாஸ் வீட்டில் இருக்கும் விசித்ரா, அர்ச்சனா, தினேஷ் ஆகியோர் தான் இவர்களின் டார்கெட் ஆக உள்ளனர். மக்கள் அவர்களுக்கு ஆதரவாக இருப்பதாக நினைத்து மாயா கேங் ஆக சண்டை போட்டு வருவது அவர்களுக்கு பின்னடைவாக அமைந்துள்ளது. இந்த வாரம் மாயாவின் கேங்கில் இருக்கும் பூர்ணிமா மற்றும் ஐஷூ ஆகிய இருவரில் ஒருவரை தான் எலிமினேட் செய்ய பிளான் போட்டு உள்ளனர்.

BiggBoss Dinesh slam maya for her bad comments about RJ Bravo gan

இதுவரை நடைபெற்ற வாக்கெடுப்பில் அவர்கள் இருவர் தான் கடைசியில் உள்ளனர். கடந்த வாரம் பிரதீப்புக்கு நடந்தது அநீதி என நெட்டிசன்கள் குரல் கொடுத்து வருவதால், பிக்பாஸ் இன்று புதிய டாஸ்க் ஒன்றை கொடுத்து அங்குள்ள கருப்பு ஆடுகளையும், அவர்கள் சொன்ன கேவலமான கமெண்ட்டுகளையும் வெளிச்சம் போட்டு காட்டி இருக்கிறார். முதல் புரோமோவில் நிக்சன் வினுஷா பற்றி கூறிய கமெண்ட் இடம்பெற்றிருந்த நிலையில், தற்போது அடுத்த புரோமோ வெளியாகி உள்ளது.

இந்த புரோமோவில் மாயா, பூர்ணிமா, மற்றும் ஜோவிகா ஆகியோர் சொன்ன கமெண்ட்டுகள் இடம்பெற்று உள்ளன. முதலில் ஜோவிகா, தினேஷ் ஆம்பள இல்லனு ஃபீல் பண்றாரா என கேட்ட கமெண்ட் வருகிறது. இதையடுத்து, நீ வந்து ஆயாம்மா வேலைக்கு வரல, ஒரு கேம் விளையாட வந்திருக்க.. எது தேவையோ அத பேசு என அர்ச்சனா பற்றி பூர்ணிமா சொன்ன கமெண்ட் வருகிறது.

இறுதியாக அர்.ஜே பிராவோ பெண்களை தவறாக கீழ இருந்து மேல பார்ப்பதாக மாயா ஐஷூவிடம் சொன்ன கமெண்ட் ஒளிபரப்பானது.  இதையடுத்து பிராவோ நான் எப்போ உங்கள அப்படி பார்த்தேன் என கேட்க, ஐஷூ ஒரு funஆ தான் சொன்னோம் என சப்பைக்கட்டு கட்டுகிறார். இதைக்கேட்டு கடுப்பான தினேஷ், வர்றவன்லாம் உங்கள அப்படி தான் பாக்குறானா என மாயாவிடம் கேட்கிறார். அதற்கு மாயா, நீங்க என்னுடைய கேரக்டரை டேமேஜ் பண்ணாதீங்க என வாக்குவாதம் செய்ய தினேஷ், அந்த கமெண்ட்ல யார் கேரக்டரை டேமேஜ் பண்ணிருக்கானு கேட்டிருக்கிறார். இதைப்பார்த்த நெட்டிசன்கள் இன்னைக்கு செம சம்பவம் இருக்கு என ஆவலோடு காத்திருக்கின்றனர்.

இதையும் படியுங்கள்.. பிக்பாஸில் இந்த வாரமும் டபுள் எவிக்‌ஷனா? பிரதீப்பை பேசவிடாமல் துரத்திய கமல்; நிக்சன் மீதும் ஆக்‌ஷன் எடுப்பாரா?

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios