Asianet News TamilAsianet News Tamil

ரேகாவை பலவந்தமா லிப்கிஸ் அடிச்ச நீங்கல்லாம் பெண்கள் உரிமை பற்றி பேசலாமா? கமலை கழுவிஊற்றிய யுகேந்திரன் மனைவி

ரெட் கார்டு கொடுத்து பிரதீப்பை பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றிய நடிகர் கமல்ஹாசனை யுகேந்திரனின் மனைவி மாலினி சரமாரியாக சாடி உள்ளார்.

Bigg Boss yugendran wife Malini befitting reply fot Kamalhaasan's Unfair eviction of Pradeep gan
Author
First Published Nov 5, 2023, 2:27 PM IST | Last Updated Nov 5, 2023, 2:29 PM IST

நடிகர் கமல்ஹாசன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் எடுத்த அதிரடி முடிவு தான் தற்போது சோசியல் மீடியாவே கொளுந்துவிட்டு எரியும் அளவுக்கு விவாதப் பொருளாக மாறி இருக்கிறது. அவர் பிக்பாஸ் வீட்டில் பெண் போட்டியாளர்கள் அளித்த புகாரை அடுத்து, பெண்களின் பாதுகாப்பு கருதி பிரதீப் ஆண்டனிக்கு ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்பினார். அவரின் இந்த முடிவுக்கு சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்புகளும் கிளம்பி உள்ளன.

அவர் தன்னுடைய அரசியல் லாபத்துக்காக இப்படி செய்துவிட்டதாக ஒரு பக்கம் விமர்சனங்கள் எழுந்து வரும் நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டு கடந்த வாரம் வெளியேற்றப்பட்ட பிரபல பின்னணி பாடகர் யுகேந்திரனின் மனைவி மாலினி, கமலின் இந்த முடிவை கடுமையாக விமர்சித்துள்ளார்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

Bigg Boss yugendran wife Malini befitting reply fot Kamalhaasan's Unfair eviction of Pradeep gan

அதன்படி கமல்ஹாசன் புன்னகை மன்னன் படத்தில் நடித்தபோது அப்படத்தின் ஹீரோயினான ரேகாவை அவரிடம் சொல்லாமலே லிப்கிஸ் அடித்ததை சுட்டிக்காட்டி, 16 வயசு பெண்ணை இப்படி பண்ணியவரெல்லாம் பெண்கள் உரிமை பற்றி பேசலாமா என காட்டமாக கேள்வி எழுப்பி இருக்கிறார். அவரின் இந்த பேச்சு சோசியல் மீடியாவில் கவனம் பெற்றுள்ளது.

அதுமட்டுமின்றி அவர் நடிச்ச முக்கால்வாசி படங்களில் லிப்லாக் சீன் இல்லாமல் இருக்காது என குறிப்பிட்டு பேசியுள்ள யுகேந்திரனின் மனைவி மாலினி, தற்போது பெண்களுக்காக பேசுவதாக கூறுவது சுத்தமாக புரியவில்லை. அவர் இதையெல்லாம் அரசியல் நோக்கத்தோடு தான் பேசி வருவதாகவும் மாலினி குற்றம்சாட்டி இருக்கிறார்.

இதையும் படியுங்கள்...  தன்னுடைய அரசியல் லாபத்திற்காக பிரதீப்பை பலிகடா ஆக்கினாரா கமல்? ரெட் கார்டு சர்ச்சையால் சீறும் நெட்டிசன்ஸ்

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios