Asianet News TamilAsianet News Tamil

‘மகளே’னு பாசத்தோடு கூப்பிட்ட கூல் சுரேஷ்... நோஸ் கட் பண்ணி அனுப்பிய வனிதா மகள் ஜோவிகா

பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டுள்ள வனிதாவின் மகள் ஜோவிகா, கூல் சுரேஷுக்கு நோஸ் கட் கொடுத்த வீடியோ வைரலாகி வருகிறது.

Bigg Boss tamil season 7 Cool Suresh call jovika as daughter but she negotiate it gan
Author
First Published Oct 5, 2023, 2:40 PM IST | Last Updated Oct 5, 2023, 2:40 PM IST

தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த 6 ஆண்டுகளாக நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை 6 சீசன்கள் முடிவடைந்துள்ள நிலையில், இதில் ஒவ்வொரு சீசனிலும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய போட்டியாளர் என சில இருப்பார்கள். அப்படி ஒரு போட்டியாளர் தான் வனிதா விஜயகுமார். இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3-வது சீசனில் விளையாடியபோது ஒவ்வொரு நாளும் அனல்பறக்கும். அந்த சீசன் ஹிட் ஆனதற்கு வனிதா தான் முக்கிய காரணம்.

தற்போது வனிதாவின் மகள் ஜோவிகாவும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டுள்ளார். 18 வயதாகும் ஜோவிகா, இந்த சீசனின் மூலம் கிடைக்கும் புகழ் வெளிச்சத்தை பயன்படுத்தி சினிமாவில் ஹீரோயினாக வேண்டும் என்கிற கனவோடு பிக்பாஸ் வீட்டுக்குள் சென்றுள்ளார். நேற்று நடைபெற்ற பாப்புலாரிட்டி டாஸ்க்கில் கூட சரவண விக்ரம் உடன் விவாதம் செய்து வெற்றிபெற்றார் ஜோவிகா.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

இந்த நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஜோவிகாவுடன் சக போட்டியாளராக கலந்துகொண்டுள்ள கூல் சுரேஷ், நாளை பிறந்தநாள் கொண்டாடும் வனிதாவுக்கு வாழ்த்து தெரிவிப்பதற்காக, ஜோவிகாவை அழைக்கும் போது மகளே என அழைத்தார். இதற்கு நான் மகள் அல்ல ஒரு போட்டியாளர் என உடனடியாக ரிப்ளை கொடுத்து கூல் சுரேஷை நோஸ் கட் செய்துவிட்டார்.

ஜோவிகாவின் இந்த பதிலை சிலர் விமர்சித்து வந்தாலும், பிக்பாஸ் போன்ற நிகழ்ச்சியில் இதுபோன்று செண்டிமெண்ட்டுகளில் சிக்காமல் இருக்கவே அவர் இப்படி சொன்னதாக ஜோவிகாவை ஆதரித்தும் சிலர் கமெண்ட் செய்து வருகின்றனர். இந்த வார நாமினேஷனில் ஜோவிகாவும் இடம்பெற்று உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்...இனி மேக்கப் போடக்கூடாது... பெண் போட்டியாளர்களுக்கு பிக்பாஸ் கொடுத்த நூதன தண்டனை - காரணம் என்ன?

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios