திமுகவை திகைக்க வைத்து இருக்கும் சர்ச்சைக்குரிய ஆடியோ கிளிப் குறித்து தமிழ்நாடு நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் பதிலளித்துள்ளார்.
10:14 PM (IST) Apr 22
ஆடியோ குறித்த நிதியமைச்சரின் விளக்கத்தை திமுக ஐடி பிரிவைத் தவிர யாரும் நம்பமாட்டார்கள். ஆடியோவை தடவியல் ஆய்வுக்கு உட்படுத்த மறுப்பது ஏன் என்று தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பி இருக்கிறார்.
10:08 PM (IST) Apr 22
திமுகவை திகைக்க வைத்து இருக்கும் சர்ச்சைக்குரிய ஆடியோ கிளிப் குறித்து தமிழ்நாடு நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் பதிலளித்துள்ளார்.
04:00 PM (IST) Apr 22
பலர் பாஜக அமைச்சரவையில் நல்ல பதவிகளை அனுபவித்ததால் அவர்களின் சொத்துக்களும் பன்மடங்கு அதிகரித்துள்ளன.
02:28 PM (IST) Apr 22
55 ஆயிரம் மடிக்கணினிகளை தேவைப்படும் மாணவர்களுக்கு வழங்க எந்த நடவடிக்கையும் எடுக்காததால், இந்த மடிக்கணினிகளின் பேட்டரிகள் உத்தரவாதம் காலாவதி ஆகிவிட்டது என்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
02:06 PM (IST) Apr 22
சுகன்யா சம்ரித்தி யோஜனா (செல்வ மகள் சேமிப்பு திட்டம்) என்பது பெண் குழந்தைகளுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட ஒரு சேமிப்பு திட்டம் ஆகும்.
01:28 PM (IST) Apr 22
கர்நாடகாவில் விரைவில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேர்தல் அதிகாரிகள் பல்வேறு இடங்களில் சோதனையை மேற்கொண்டு வருகின்றனர்.
01:24 PM (IST) Apr 22
அதிமுக கொடியை நாங்கள் சட்டையாகக் கூட தைத்து போட்டுக் கொள்வோம். யாரும் கேள்வி கேட்க முடியாது. விசாரணையின் போது எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கேள்விகளை கேட்கும் நீதிபதிகள், தீர்ப்பின்போது மட்டும் அவருக்கு தேவையான தீர்ப்பை வழங்கும் மர்மம் என்னவென்று தெரியவில்லை என ஓபிஎஸ் ஆதரவாளர் மருது அழகுராஜ் கூறியுள்ளார்.
12:39 PM (IST) Apr 22
பிரதமர் நரேந்திர மோடி இந்த பயணத்தின் போது, பிரதமர் 8 நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். இதன் மூலம் 7 வெவ்வேறு நகரங்களுக்கு பயணம் செய்ய உள்ளார்.
12:31 PM (IST) Apr 22
காந்திநகர் தொகுதியில் போட்டியிடும் ஓபிஎஸ் தரப்பு வேட்பாளர் குமார் தாக்கல் செய்த மனுவை அதிமுக பெயரில் தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக மாநில தலைமை தேர்தல் அதிகாரிக்கு இபிஎஸ் கடிதம் எழுதியுள்ளார்.
12:15 PM (IST) Apr 22
தினசரி 12 மணி நேர வேலையை வலியுறுத்தும் தொழிலாளர் சட்டத் திருத்த மசோதா தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. இதற்கு எதிராக பொதுமக்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
10:45 AM (IST) Apr 22
அட்சய திரிதியை முன்னிட்டு டிஜிட்டல் தங்கத்தை ஆன்லைனில் வாங்கத் திட்டமிடுகிறீர்களா ? உங்களுக்கான செய்திதான் இது.
10:07 AM (IST) Apr 22
ஓபிஎஸ் அணியில் இருந்து பலரும் எடப்பாடி பழனிசாமி அணிக்கு தாவி வருவது, ஓ.பன்னீர்செல்வம் அணியினருக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
09:42 AM (IST) Apr 22
அரசு பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தலைமை ஆசிரியரை ரவுண்ட் கட்டி பொதுமக்கள் தர்ம அடி கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
09:42 AM (IST) Apr 22
ஈகைத் திருநாளாம் ரம்ஜான் என்ற ரமலான் பண்டிகையை நாடு முழுவதும் இஸ்லாமியர்கள் கொண்டாடி வருகின்றனர். காலையிலேயே பள்ளி வாசல்களுக்கு சென்று இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டுள்ளனர்.
08:38 AM (IST) Apr 22
11 வயது சிறுமி ஒருவர் ஐஸ்கிரீம் வாங்கியதற்காக வீட்டில் திட்டுவார்களோ என்று பயந்து தற்கொலை செய்து கொண்டார்.
08:30 AM (IST) Apr 22
நீண்ட நாட்களுக்கு பிறகு மீண்டும் குறைந்துள்ளது தங்கம். இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலையை காண்போம்.
07:59 AM (IST) Apr 22
சென்னையில் காக்கா தோப்பு பாலாஜியின் கூட்டாளியான கருப்பு குமார் ஓட ஓட விரட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
07:34 AM (IST) Apr 22
கடும் எதிர்ப்புகளுக்கிடையே 8 மணிநேர வேலையை 12 மணி நேரமாக மாற்ற வழிசெய்யும் சட்ட மசோதா தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.
07:11 AM (IST) Apr 22
சட்டமன்றம், மக்களவை தேர்தலில் விதிக்கப்படாத நிபந்தனைகள் அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலில் விதிக்கப்பட்டது. பொதுச்செயலாளர் தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்ய 10 மாவட்டச் செயலாளர் முன்மொழிய வேண்டும். 10 மாவட்ட செயலாளர்கள் வழிமொழிய வேண்டும் என நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. தனி நீதிபதி அதிமுகவின் அடிப்படை கட்டமைப்பு விதிகளை கவனிக்க தவறிவிட்டார்.