எடப்பாடி அணிக்கு தாவிய முக்கிய புள்ளி..காலியாகும் ஓபிஎஸ் கூடாரம்.! அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி.!
ஓபிஎஸ் அணியில் இருந்து பலரும் எடப்பாடி பழனிசாமி அணிக்கு தாவி வருவது, ஓ.பன்னீர்செல்வம் அணியினருக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
கடந்த ஆண்டு ஜூலை 11-ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு எதிராக ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.
அந்த வழக்குகளில் எடப்பாடி பழனிசாமி பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லும் என்று உத்தரவிடப்பட்டது. எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டது தொடர்பான வழக்கு சிவில் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இதற்கிடையில், எடப்பாடி பழனிசாமி பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டதை இந்தியத் தேர்தல் ஆணையம் அங்கீகரிக்காமல் இருந்து வந்தது.
இதையும் படிங்க..அட்சய திரிதியை அப்போ இதையெல்லாம் தானமா கொடுங்க.! லட்சுமி கடாட்சம் வரும்! செல்வம் கொட்டும்!!
இது தொடர்பாக நீதிமன்றங்களிலும் இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் ஆகிய இரு தரப்பிலும் வழக்குகள் தொடர்ந்தனர். ஆனாலும், நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிச்சாமி ஆதரவான நிலைப்பாடு வந்த நிலையில், தலைமைத் தேர்தல் ஆணையமும், அவரை பொதுச் செயலாளராக அங்கீகரித்துள்ளது. இது ஓபிஎஸ் தரப்புக்கு பின்னடைவாக அமைந்துள்ளது.
இந்த நிலையில் ஓ.பன்னீர்செல்வம், வரும் ஏப்ரல் 24ஆம் தேதி திருச்சியில் பிரமாண்ட மாநாட்டை நடத்துவதற்கான ஏற்பாடுகளைச் செய்து வரும் நிலையில் இது ஓபிஎஸ் தரப்புக்கு கடும் தலைவலியை கொடுத்துள்ளது. திருச்சியில் வரும் 24ம் தேதி ஓபிஎஸ் தலைமையில் நடைபெறவிருக்கும் மாநாட்டிற்கு லட்சக்கணக்கான அதிமுக தொண்டர்கள் வருவார்கள்.
இதையும் படிங்க..அட்சய திருதியை முன்னிட்டு குறைந்த தங்க விலை! தங்கம் வாங்க சரியான நேரம்!!
திருச்சியில் நடைபெறும் மாநாட்டிற்கு பிறகு எடப்பாடி தரப்பினர் சிதறி சின்னாபின்னம் ஆகி விடுவார்கள். திருச்சி மாநாடு ஓ.பன்னீர்செல்வத்திற்கு திருப்புமுனையாக அமையும் என்று ஓபிஎஸ் ஆதரவாளர்கள் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் ஓபிஎஸ் அணியை சேர்ந்த மகளிர் அணி துணைச் செயலாளராக நியமிக்கப்பட்ட என்.ஜெயதேவி நேற்று எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்.
மேலும் தமிழகத்தின் 12க்கும் மேற்பட்ட கல்லூரிகளை சேர்ந்த 500க்கும் மேற்பட்டோர் தங்களை அதிமுகவில் இணைத்துக்கொண்டனர். அடுத்தடுத்து ஓபிஎஸ் அணியில் இருந்து அதிமுக அணிக்கு அதாவது எடப்பாடி பழனிசாமி அணிக்கு பலரும் தாவி வருவதால் ஓபிஎஸ் அணி கடும் அதிருப்தியில் உள்ளனர். திருச்சி மாநாடு முறைப்படி நடக்குமா ? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
இதையும் படிங்க..கருணாநிதி வழி நடக்கும் ஆட்சியில் இப்படியா.? பாஜகவின் நீட்சி.. திமுகவுக்கு அதிர்ச்சி கொடுத்த கூட்டணிக்கட்சி