Gold Rate Today : அட்சய திருதியை முன்னிட்டு குறைந்த தங்க விலை! தங்கம் வாங்க சரியான நேரம்!!
நீண்ட நாட்களுக்கு பிறகு மீண்டும் குறைந்துள்ளது தங்கம். இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலையை காண்போம்.
இல்லத்தரசிகளுக்கு விருப்பமான தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 2023ம் ஆண்டின் தொடக்கத்தில் சவரனுக்கு 44 ஆயிரத்தை எட்டியது.
மேலும் சவரனுக்கு 45 ஆயிரத்தை தாண்டி வரலாற்றில் இல்லாத விலைக்கு தங்கம் விற்பனையானது. இருப்பினும் பொதுமக்கள் தங்கம் வாங்க ஆர்வம் காட்டி வருகிறார்கள்.
நேற்றைய நிலவரப்படி, தங்கம் கிராம் ஒன்றுக்கு 15 உயர்ந்து ரூ. 5,565க்கு விற்பனையானது. சவரனுக்கு 120 உயர்ந்து 45,320க்கு விற்பனையானது.
இதையும் படிங்க..அட்சய திரிதியை அப்போ இதையெல்லாம் தானமா கொடுங்க.! லட்சுமி கடாட்சம் வரும்! செல்வம் கொட்டும்!!
இன்றைய (ஏப்ரல் 22) நிலவரப்படி, தங்கம் கிராம் ஒன்றுக்கு 60 குறைந்து 5,605க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு 480 குறைந்து 44,840க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையை பொறுத்தவரை, 90 காசுகள் குறைந்து 80.40க்கு விற்பனை செய்யப்படுகிறது. அட்சய திருதியை முன்னிட்டு தங்கம் மற்றும் வெள்ளி விலை குறைந்துள்ளது பொதுமக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க..iQOO : இப்படியொரு ஆஃபர் கிடைக்காது.. iQOO ஸ்மார்ட்போன்களுக்கு 25,000 வரை ஒரிஜினல் தள்ளுபடி - முழு விபரம்