உண்மையான அதிமுக நாங்க தான்.. ஓபிஎஸ் மனுவை எதுக்கு ஏத்துக்கிட்டீங்க.. எதிர்ப்பு தெரிவித்து இபிஎஸ் கடிதம்!

ஓபிஎஸ் அணி சார்பில் கோலார் தங்கவயலில் அனந்தராஜ், காந்தி நகரில் கே.குமார் ஆகியோரின் மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. ஆனால், புலிகேசி நகர் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நெடுஞ்செழியன் மனு நிராகரிக்கப்பட்டது. 

We are the real AIADMK.. EPS Letter to Karnataka Electoral Officer

காந்திநகர் தொகுதியில் போட்டியிடும் ஓபிஎஸ் தரப்பு வேட்பாளர் குமார் தாக்கல் செய்த மனுவை அதிமுக பெயரில் தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக மாநில தலைமை தேர்தல் அதிகாரிக்கு இபிஎஸ் கடிதம் எழுதியுள்ளார்.

கர்நாடக மாநிலத்தில் உள்ள 224 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் மே மாதம் 10ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில், நேற்று மனு மீதான பரிசீலனை நடைபெற்றது. அப்போது, புலிகேசி நகர் தொகுதியில் அதிமுக சார்பாக போட்டியிடும் கர்நாடக மாநில அதிமுக அவைத் தலைவர் அன்பரசனின் மனு ஏற்றுக்கொள்ளப்பட்டது.  அதேபோல், ஓபிஎஸ் அணி சார்பில் கோலார் தங்கவயலில் அனந்தராஜ், காந்தி நகரில் கே.குமார் ஆகியோரின் மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. ஆனால், புலிகேசி நகர் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நெடுஞ்செழியன் மனு நிராகரிக்கப்பட்டது. 

இதையும் படிங்க;- ஆஹா.. கேஸ் போற போக்க பாத்தா மீண்டும் பொதுச்செயலாளர் தேர்தலா? இபிஎஸ்-க்கு அதிர்ச்சி கொடுக்கும் ஓபிஎஸ் தரப்பு.!

We are the real AIADMK.. EPS Letter to Karnataka Electoral Officer

இந்நிலையில், ஓபிஎஸ் அணி வேட்பாளர்களை அதிமுக வேட்பாளர்களாக ஏற்றுக் கொண்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக மாநில தலைமை தேர்தல் அதிகாரிக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி  கடிதம் எழுதியுள்ளார். அதில், அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது. இரட்டை சிலை சின்னம் ஒதுக்குவதற்கான படிவத்தில் கையெழுத்திட எடப்பாடி பழனிசாமிக்கு மட்டுமே அதிகாரம் உண்டு. தேர்தல் நடத்தும் அலுவலர் தவறான புரிதலால் ஓபிஎஸ் தரப்பு வேட்புமனுவை ஏற்றுக்கொண்டுள்ளார். 

இதையும் படிங்க;-  Karnataka Elections: ஓபிஎஸ் வேட்பாளர்களின் வேட்புமனு நிராகரிப்பு.. இபிஎஸ் வேட்பாளரின் நிலை என்ன?

We are the real AIADMK.. EPS Letter to Karnataka Electoral Officer

உண்மையான அதிமுக தாங்கள் தான் என நீதிமன்றமும், தேர்தல் ஆணையமும் ஒப்புக்கொண்டுள்ளது. அதிமுக சார்பில் புலிகேசி நகர் தொகுதியில் மட்டுமே போட்டியிடுவதாகவும், வேறு எந்த தொகுதியிலும் அதிமுக போட்டியிடவில்லை எனவும் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios