Asianet News TamilAsianet News Tamil

அல்லா எல்லாரையும் நல்ல பாடியா இருக்கணும்! சிறப்பு தொழுகை நடத்தி ரம்ஜானை கோலாகலமாக கொண்டாடும் இஸ்லாமியர்கள்.!

இஸ்லாமிய நம்பிக்கையின் படி முகம்மது நபிக்கு முதன் முதலில் குரானை வெளிப்படுத்திய மாதத்தை நினைவுகூறும் விதமாக இந்த நோன்பை அனுபவிக்கிறார்கள். ஆண்டுக்கொரு முறை அனுசரிக்கப்படும் இந்த நோன்பு இஸ்லாமியர்களின் ஐந்து கோட்பாடுகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

Ramadan celebration all over the country
Author
First Published Apr 22, 2023, 9:35 AM IST | Last Updated Apr 22, 2023, 9:35 AM IST

ஈகைத் திருநாளாம் ரம்ஜான் என்ற ரமலான் பண்டிகையை நாடு முழுவதும் இஸ்லாமியர்கள் கொண்டாடி வருகின்றனர். காலையிலேயே பள்ளி வாசல்களுக்கு சென்று இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டுள்ளனர். 

இஸ்லாமிய மக்களின் மிக முக்கியமான பண்டிகைகளில் ஒன்றான ரம்ஜான் என்ற ரமலான். ஈகைத் திருநாளாக கொண்டாடப்படும் ரம்ஜான் பண்டிகை இஸ்லாமிய நாட்காட்டியின் படி ஒன்பதாவது மாதமாக வரும் ரமலான் மாதத்தில் இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது. இஸ்லாமிய நம்பிக்கையின் படி முகம்மது நபிக்கு முதன் முதலில் குரானை வெளிப்படுத்திய மாதத்தை நினைவுகூறும் விதமாக இந்த நோன்பை அனுபவிக்கிறார்கள். ஆண்டுக்கொரு முறை அனுசரிக்கப்படும் இந்த நோன்பு இஸ்லாமியர்களின் ஐந்து கோட்பாடுகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
 Ramadan celebration all over the country
ரம்ஜான் என்று அழைக்கப்படும் நோன்பு பெருநாள் பண்டிகை ரமலான் மாதம் 29 அல்லது 30 நாட்கள் நோன்பு நோற்ற பிறகு உலகம் முழுவதும் வாழும் இஸ்லாமியர்களால் கொண்டாடப்படுகிறது. இந்த நோன்பு காலத்தில் காலையில் சூரிய உதயத்திற்கு பிறகு சூரியன் மறைவு வரை உணவு ஏதும் உண்ணாமல் இஸ்லாமியர்கள் நோன்பு இருப்பர். அதன் முடிவில் ஈகைத் திருநாள் என்று தமிழ் மக்களால் அழைக்கப்படும் ரமலான் நாளில் ஏழை மக்களுக்கு அரசி அல்லது கோதுமை போன்ற பொருட்களை இஸ்லாமியர்கள் வழங்க வேண்டும்.

Ramadan celebration all over the country

அதன்படி, இன்று தமிழகம் முழுவதும் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு பள்ளி வாசல்களில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை நடத்தி வருகின்றனர். அதிகாலையிலேயே எழுந்து குளித்து புத்தாடை அணிந்து தொழுகையில் ஈடுபட்ட பின்பு, ஒருவரை ஒருவர் ஆரத்தழுவி அன்பையும் வாழ்த்துகளையும் பகிர்ந்துகொண்டனர்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios