கர்நாடக தேர்தல் 2023: கத்தை கத்தையா பணம்..வெள்ளி விளக்கும் இருக்கு - அதிரடி காட்டிய தேர்தல் அதிகாரிகள்
கர்நாடகாவில் விரைவில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேர்தல் அதிகாரிகள் பல்வேறு இடங்களில் சோதனையை மேற்கொண்டு வருகின்றனர்.
224 தொகுதிகளைக் கொண்ட கர்நாடகாவில் ஒரே கட்டமாக மே 10 ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. ஆட்சியை தக்கவைக்க பாஜகவும், மீண்டும் ஆட்சியை கைப்பற்றும் காங்கிரஸும், ஐக்கிய ஜனதா தளமும் தீவிரம் காட்டுவதால் மும்முனை போட்டி நிலவுகிறது.
கர்நாடகாவில் தேர்தல் நடைபெற உள்ளதால் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் கொடுப்பதை தடுக்க தேர்தல் அதிகாரிகள் மற்றும் போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். வழக்கம் போல பணம், மதுபானம், தங்கம் மற்றும் வெள்ளி பொருட்கள் என பல பொருட்கள் வாக்காளர்களுக்கு விநியோகிக்கப்படுவதாக தொடர்ந்து புகார்கள் எழுப்பப்பட்டு வருகிறது. தேர்தல் ஆணைய அதிகாரிகள் முக்கிய இடங்கள் மற்றும் சந்தேகப்படும் இடங்களில் தொடர்ந்து சோதனை நடத்தி வருகிறார்கள்.
இதையும் படிங்க..எடப்பாடி அணிக்கு தாவிய முக்கிய புள்ளி..காலியாகும் ஓபிஎஸ் கூடாரம்.! அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி.!
கர்நாடகா சகாரா தொகுதி பாஜக வேட்பாளர் ஹர்தால் ஹாலப்பாவின் உதவியாளரும், சகாரா நகராட்சி துணைத்தலைவருமான மகேஷ் பையில் கட்டுக் கட்டாக பணத்தை அடுக்கிய வீடியோ வைரலாகி வருகிறது. வீடியோ அடிப்படையில் மகேஷ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல பாகல்கோட்டில் ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள வெள்ளிப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
தேர்தல் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். வாக்காளர்களுக்கு கொடுக்கப்படவிருந்த காமாட்சி விளக்குகளில் பாஜக வேட்பாளர் முருகேஷ் நிராணி படம் இருந்தது. முருகேஷ் நிராணிக்கு சொந்தமான குடியிருப்பில் 10 பெட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டது. ரூ.21,45,672 மதிப்புள்ள 963 காமாட்சி விளக்குகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதன் வீடியோ வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க..கருணாநிதி வழி நடக்கும் ஆட்சியில் இப்படியா.? பாஜகவின் நீட்சி.. திமுகவுக்கு அதிர்ச்சி கொடுத்த கூட்டணிக்கட்சி