ஐஸ்கிரீம் சாப்பிட விரும்பிய 11 வயது சிறுமி.. பிளாக்மெயில் செய்த தங்கச்சி - கடைசியில் இப்படியா செய்யுறது.!!
11 வயது சிறுமி ஒருவர் ஐஸ்கிரீம் வாங்கியதற்காக வீட்டில் திட்டுவார்களோ என்று பயந்து தற்கொலை செய்து கொண்டார்.
உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் 11 வயது சிறுமி ஒருவர் இரண்டு கைப்பிடி கோதுமைக்கு ஈடாக ஐஸ்கிரீம் வாங்கியதற்காக வீட்டில் திட்டுவார்கள் என்று பயந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இச்சம்பவம் பவானிபூர் கிராமத்தில் நடந்துள்ளது. அங்கு இறந்தவர் தனது குடும்பம் மற்றும் அவரது ஒன்பது வயது தங்கையுடன் தங்கியிருந்தார் என்று கூறப்படுகிறது. சிறுமி தங்கியிருந்த பகுதி வழியாக ஐஸ்கிரீம் விற்பனையாளர் ஒருவர் சென்றுள்ளார். அப்போது அவரிடம் இரண்டு கைநிறைய கோதுமையைக் கொடுத்துவிட்டு ஐஸ்கிரீமை வாங்கினாள் சிறுமி. இதுபற்றி அறிந்ததும், அவரது தங்கை ஐஸ்கிரீம் கேட்டுள்ளார்.
ஆனால் அதற்குள் ஐஸ்கிரீம் விற்பனையாளர் சென்றுவிட்டார். கதறி அழுத தங்கை, கோதுமை வயலில் வேலை செய்து கொண்டிருந்த தனது பெற்றோரிடம் நடந்த சம்பவம் குறித்து கூறுவதாக மிரட்டியுள்ளார். பின்னர், பெற்றோர்கள் வயல்வெளியில் இருந்து வீடு திரும்பியபோது, மூத்த மகள் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்துள்ளார். பிறகு சிறுமியின் உடலை போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இதையும் படிங்க..அட்சய திரிதியை அப்போ இதையெல்லாம் தானமா கொடுங்க.! லட்சுமி கடாட்சம் வரும்! செல்வம் கொட்டும்!!
இதுகுறித்து ஏடிசிபி பிரஜேந்திர திவேதி கூறுகையில், "இறந்த சிறுமி இரண்டு பிடி கோதுமை விற்று தனக்காக ஐஸ்கிரீம் வாங்கியுள்ளார். இதை பார்த்த தங்கை, பெற்றோரிடம் புகார் கொடுப்பதாக மிரட்டினார். பெற்றோர் திட்டுவார்களோ என்ற பயத்தில், சிறுமி தற்கொலை செய்து கொண்டிருக்கலாம். சிறுமியின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது” என்று கூறினார்.
இதையும் படிங்க..கருணாநிதி வழி நடக்கும் ஆட்சியில் இப்படியா.? பாஜகவின் நீட்சி.. திமுகவுக்கு அதிர்ச்சி கொடுத்த கூட்டணிக்கட்சி