Crime News: சென்னையில் பயங்கரம்!காக்கா தோப்பு பாலாஜியின் முக்கிய கூட்டாளி பட்டப்பகலில் ஓட ஓட விரட்டி படுகொலை.!

சென்னை பழைய வண்ணாரப்பேட்டை ஆரணி ரங்கன் தெருவை சேர்ந்தவர் குமார் (எ) கருப்பு குமார் (54). இவர் மீது கொலை, அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருந்து வருகிறது. 

famous Rowdy murder in Chennai... Police investigation

சென்னையில் காக்கா தோப்பு பாலாஜியின் கூட்டாளியான கருப்பு குமார் ஓட ஓட விரட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை பழைய வண்ணாரப்பேட்டை ஆரணி ரங்கன் தெருவை சேர்ந்தவர் குமார் (எ) கருப்பு குமார் (54). இவர் மீது கொலை, அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருந்து வருகிறது. நேற்று ஆரணி ரங்கன் தெரு வழியாக கருப்பு குமார் நடந்து வந்த போது இருசக்கர வாகனத்தில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் அவரை வழிமறித்தது.

இதையும் படிங்க;- Crime News: நிர்வாணமாக மனைவியை கொலை செய்தது ஏன்? ஓவர் ஆக்டிங்கால் வசமாக சிக்கிய கணவர்.. எப்படி தெரியுமா?

famous Rowdy murder in Chennai... Police investigation

உயிர் பயத்தில் இவர்களிடம் தப்பிக்க முயற்சித்த போது அவரை விடாமல் ஓட ஓட விரட்டி சரமாரியாக வெட்டினர். ரத்த வெள்ளத்தில் சரிந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்த கருப்பு குமாரை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட குமார் நேற்று மதியம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

famous Rowdy murder in Chennai... Police investigation

இந்த கொலை சம்பவம் தொடர்பாக கொருக்குப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் பழிக்குப்பழியாக கொலை நடைபெற்றது தெரியவந்தது. கடந்த 2013ம் ஆண்டு வண்ணாரப்பேட்டையை சேர்ந்த ரவுடி வெங்கடா  கருப்பு குமாரை உட்பட 10 பேர் கொண்ட வெட்டி படுகொலை செய்தது. இதற்கு பழிவாங்க வெங்கடாவின் மகன் தன் கூட்டாளிகள் 6 பேருன் சேர்ந்து இந்த கொலை சம்பவத்தை அரங்கேற்றிருப்பது தெரியவந்தது. தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடிவருகின்றனர். கொலை செய்யப்பட்ட கருப்பு குமார் பிரபல ரவுடியான காக்கா தோப்பு பாலாஜியின் கூட்டாளி என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க;-  உல்லாசத்துக்கு அழைத்த கள்ளக்காதலன்.. வர மறுத்த கள்ளக்காதலி.. இறுதியில் தலைக்கேறிய காமத்தால் நடந்த பயங்கரம்.!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios