உல்லாசத்துக்கு அழைத்த கள்ளக்காதலன்.. வர மறுத்த கள்ளக்காதலி.. இறுதியில் தலைக்கேறிய காமத்தால் நடந்த பயங்கரம்.!
உல்லாசத்துக்கு வர மறுத்த பெண் கொடூரமாக கொலை செய்யப்பட்ட வழக்கில் அவரது கள்ளக்காதலன் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.
murder
வேலூர் மாவட்டம் அணைக்கட்டை அடுத்த வாழைப்பந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் குமார். இவரது மனைவி மலர் (25). இவர் கடந்த வருடம் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். இந்நிலையில், கடந்த 17ம் தேதி ஓய்வூதியம் பெறுவதற்காக சென்றுள்ளார். நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் பெற்றோர் அதிர்ச்சியடைந்து காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதனிடையே, அல்லேரி மலைப்பாதையில் உள்ள ஒரு புதரில் தலை நசுங்கிய நிலையில் பெண் உடல் இருப்பதாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் விசாரணை நடத்தியதில் கொலை செய்யப்பட்டது மலர் என்பது தெரியவந்தது. இதனையடுத்து, அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த கொலை சம்பவம் தொடர்பாக 3 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டதில் கொலை செய்தது சண்முகம் (30) என்பவது தெரியவந்தது. இதுகுறித்து போலீசாரிடம் அவர் அளித்த வாக்குமூலத்தில்;- மலரின் கணவர் குமார் இறந்த பிறகு மலரும், நானும் கள்ளக்காதலில் ஈடுபட்டு வந்தோம்.
இது எனது மனைவிக்கு தெரியவந்ததை அடுத்து என்னை கண்டித்துள்ளார். சம்பவத்தன்று மலர் தனியாக அணைக்கட்டு செல்வதை அறிந்த நான், அவருக்கு போன் செய்து இருவரும் சந்திக்க வேண்டும் என்று கூறினேன். அதன் பிறகு அவரை நான் மலைப்பாதையில் சந்தித்தேன்.
அப்போது அவர் உல்லாசத்துக்கு அழைத்த போது வர மறுத்துள்ளார். இதனால், ஆத்திரத்தில் தலையில் கல்லைப்போட்டு கொடூரமாக கொலை செய்தேன் என்றார். பின்னர், உடலை ஒரு புதரின் ஓரமாக தள்ளிவிட்டு நான் சென்று விட்டேன் என்று கூறினார். இதனையடுத்து, சண்முகம் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.