சார் ப்ளீஸ் என்ன விட்டுடுங்க! கதறிய மாணவி! விடாமல் டார்ச்சர் செய்த தலைமை ஆசிரியர்! இறுதியில் நடந்த சம்பவம்.!
அரசு பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தலைமை ஆசிரியரை ரவுண்ட் கட்டி பொதுமக்கள் தர்ம அடி கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த விட்டலாபுரத்தில் அரசு உயர்நிலைப்பள்ளியில் சகலகலாதரன் (59) என்பவர் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு அப்பள்ளியில் பயிலும் 9ம் வகுப்பு மாணவி தலைமை ஆசிரியரின் அறைக்கு வருகை பதிவேடு எடுக்க சென்றார். அப்போது, தலைமை ஆசிரியர் அந்த மாணவிக்கு சாக்லெட் கொடுத்துள்ளார். அதை வாங்கிய மாணவிக்கு கண்ட இடத்தில் கை வைத்து பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.
இதனால், அதிர்ச்சியடைந்த மாணவி அங்கிருந்து அழுதபடி வெளியே சென்றுள்ளார். இதுகுறித்து அந்த மாணவி தலைமை ஆசிரியர் என்னிடம் தவறாக நடக்க முயன்றதாக சக மாணவிகள் மற்றும் பெற்றோரிடம் அழுதுகொண்டே கூறியுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த பெற்றோர் மற்றும் அப்பகுதியை சேர்ந்த 300க்கும் மேற்பட்டோர் பள்ளியை முற்றுகையிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த சம்பவத்தை அறிந்த ரோஷணை போலீசார் உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பள்ளி மாணவி மற்றும் தலைமை ஆசிரியரிடம் தனித்தனியாக விசாரணை நடத்தினர்.
இதையடுத்து தலைமை ஆசிரியரை விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்து செல்ல வேனில் ஏற்றிய போது பொதுமக்கள் சூழ்ந்து கொண்டு தலைமை ஆசிரியரை சராமாரியாக தாக்கினர். ஒருவழியாக தலைமை ஆசிரியரை போலீசார் மீட்டு, வேனில் ஏற்றிச் சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.