மாதம் ரூ.250 முதலீடு செய்தால் 5 லட்சம் கிடைக்கும் - செல்வ மகள் சேமிப்பு திட்டம் பற்றிய முழு விபரம்
சுகன்யா சம்ரித்தி யோஜனா (செல்வ மகள் சேமிப்பு திட்டம்) என்பது பெண் குழந்தைகளுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட ஒரு சேமிப்பு திட்டம் ஆகும்.
சுகன்யா சம்ரித்தி யோஜனா என்ற செல்வ மகள் சேமிப்பு திட்டத்தை கடந்த 2015ம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைத்தார். பெண் குழந்தையின் எதிர்கால கல்வி மற்றும் திருமண செலவுகளுக்காக எதிர்கால நிதியை உருவாக்க பெற்றோரை ஊக்குவிக்க இந்தத் திட்டம் தொடங்கப்பட்டது.
இந்த சுகன்யா சம்ரித்தி கணக்கை, பெண் குழந்தைக்கு 10 வயது ஆவதற்கு முன், எந்தவொரு தபால் அலுவலகத்திலும் அல்லது வங்கிகளின் நியமிக்கப்பட்ட கிளைகளிலும் தொடங்கலாம். சுகன்யா சம்ரிதி கணக்கில் ஆண்டுக்கு ரூ.250 மட்டுமே முதலீடு செய்ய வேண்டும். இதில் ஒவ்வொரு ஆண்டும் அதிகபட்சமாக ரூ.1.50 லட்சம் வரை முதலீடு செய்யலாம். இந்த பணத்தை மாதாந்திர தவணைகளில் டெபாசிட் செய்யலாம்.
ஆனால் சில காரணங்களால் நிதியாண்டில் உங்களிடம் ரூ.1.50 லட்சம் இல்லை என்றால், ரூ.250 டெபாசிட் செய்து கணக்கைத் தொடரலாம். இதில் முதலீடு செய்வதன் மூலம் வருமான வரிச் சட்டத்தின் 80சி பிரிவின் கீழ் வரி விலக்கின் பலனையும் பெறுவீர்கள். இந்தத் திட்டம் பெண்களுக்காக பிரத்தியேகமாக தொடங்கப்பட்ட திட்டமாகும். பெண் குழந்தைகளின் எதிர்காலத்தை பாதுகாப்பதற்காக இந்த திட்டத்தை அரசு தொடங்கியுள்ளது.
இதையும் படிங்க..அட்சய திருதியை முன்னிட்டு குறைந்த தங்க விலை! தங்கம் வாங்க சரியான நேரம்!!
இதன் முதிர்வு காலம் 21 ஆண்டுகள் ஆகும். பெண்ணுக்கு 18 வயது ஆன பிறகு அவருக்கு திருமணம் நடைபெற்றால் இத்திட்டம் முதிர்வடையும். அப்போது பணத்தை எடுத்துக் கொள்ளலாம். ஒரு ஆண்டில் குறைந்தது 500 ரூபாயாக செலுத்த வேண்டும். இல்லாவிட்டால் கணக்கு மூடப்பட்டுவிடும். பெண் குழந்தையின் பெற்றோர் மட்டுமல்லாமல், சட்டபூர்வமான பாதுகாவலர் குழந்தையின் சார்பாக கணக்கில் சேரலாம். தகுதியானவர்கள் இத்திட்டத்தை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இதையும் படிங்க..அட்சய திரிதியை அப்போ இதையெல்லாம் தானமா கொடுங்க.! லட்சுமி கடாட்சம் வரும்! செல்வம் கொட்டும்!!