PTR Audio: நான் பேசியதாக வெளியான ஆடியோ போலியானது! நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விளக்கம்!!
திமுகவை திகைக்க வைத்து இருக்கும் சர்ச்சைக்குரிய ஆடியோ கிளிப் குறித்து தமிழ்நாடு நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் பதிலளித்துள்ளார்.
திமுகவை திகைக்க வைத்து இருக்கும் சர்ச்சைக்குரிய ஆடியோ கிளிப் குறித்து தமிழ்நாடு நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் பதிலளித்துள்ளார்.
இதற்கு பதில் கூறியுள்ள பழனிவேல் தியாகராஜன் ட்விட்டரில் ஒரு பதிவை வெளியிட்டார். அதில், "நான் பேசியதாக வெளியான 26 வினாடி ஆடியோ தீங்கிழைக்கும் நோக்கில் ஜோடிக்கப்பட்டது என்று" என்று தெரிவித்துள்ளார். அத்துடன் அந்த ஆடியோவின் பகுப்பாவு அறிக்கை ஒன்றையும் இணைத்துள்ளார்.
சர்ச்சைக்குரிய ஆடியோ
அமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் ஆடியோ கிளிப் ஏப்ரல் 19ஆம் தேதி, 2023 அன்று சமூக வலைதளங்களில் வெளியானது. அதில் மு.க.ஸ்டாலின் குடும்பத்தினர் தங்கள் வாழ்நாளில் சம்பாதித்ததை விட ஒரு வருடத்தில் அதிக பணம் சம்பாதித்ததாக அவர் குற்றம் சாட்டியதாக பேசி இருந்த ஆடியோ வெளியாகி பர பரப்பை ஏற்படுத்தி இருந்தது.
அந்த ஆடியோவில், "உதய் மற்றும் சபரி இருவரும் அவர்களது குடும்பத்தினர் தங்கள் முழு வாழ்க்கையில் சம்பாதித்ததை விட அதிக பணத்தை ஒரு வருடத்தில் சம்பாதித்திருப்பதை உணர்ந்துவிட்டனர். இப்போது அது ஒரு பிரச்சனையாகி வருகிறது." என்று கூறப்படுகிறது. பின்னர் அதிக தெளிவில்லாத குரலில் 30,000 கோடி சம்பாதித்துள்ளதாகச் சொல்லப்படுகிறது.
Breaking: மூணாறில் வேன் கவிழ்ந்து விபத்து: 3 பேர் பலி; 50க்கும் மேற்பட்டோர் படுகாயம்
அண்ணாமலை பதில்
நிதி அமைச்சரின் ட்விட்டர் பதிவுக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உடனடியாக பதில் அளித்துள்ளார். "திமுகவின் ஐடி விங்கைச் சேர்ந்தவர்களைத் தவிர, வேறு யாரும் நிதி அமைச்சரின் இந்தத் தற்காப்பு பதிலை நம்ப மாட்டார்கள். அந்த ஆடியோ பற்றி சுதந்திரமான தடயவியல் ஆய்வுக்கு அழைப்பு விடுப்பதில் இருந்து நிதி அமைச்சரை தடுப்பது எது?" எனவும் அண்ணாமலை கேள்வி எழுப்பி இருக்கிறார்.
தனது ட்விட்டர் பதிவில், "தமிழ்நாடு நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இரண்டு நாட்களாக திமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு சமூக வலைதளங்களில் அரைகுறையாகக் கூறிவந்ததை படித்துவிட்டு இந்த அறிக்கையாகத் தயாரித்து வெளியிட்டிருக்கிறார். நிதி அமைச்சர் திமுகவின் ஐடி பிரிவினர் செய்த போலி ஆடியோ பகுப்பாய்வை தன் தற்காப்புக்காகப் பயன்படுத்தியுள்ளார். இது அவரது பலவீனத்தையே காட்டுகிறது" என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
தமிழக எல்லையில் பயங்கரவாத அமைப்புகளைக் குறிவைத்திருக்கிறோம்! முதல்வர் ஸ்டாலின் தகவல்
பிடிஆர் காட்டிய உதாரணம்!
26 வினாடி ஆடியோ குறித்து விளக்கம் வெளியிட்ட சிறிது நேரத்தில் நிதி அமைச்சர் மற்றொரு ட்வீட்டைப் பதிவிட்டார். "இந்த காலத்தில் குறைந்த தரத்தில் 26 வினாடிக்கு ஆடியோ கிளிப்பை உருவாக்குவது கடினம் என்று யாராவது நினைப்பவர்களுக்கு இந்த உதாரணம்... செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்ட குரல்கள் மூலம் ஒரு முழு பாடலே தயாரிக்கப்பட்டுவிட்டது. அதை பல தளங்களில் 16 மில்லியன் பேர் பார்த்திருக்கிறார்கள்" என்று குறிப்பிட்டு தான் காட்டியுள்ள உதாரணத்தை விளக்கும் ஆங்கிலச் செய்தி ஒன்றையும் பகிர்ந்துள்ளார்.
மேலும், ஆதாரம் இல்லாத ஆடியோவை ஒருபோதும் நம்ப வேண்டாம் எனவும் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கேட்டுக்கொண்டிருக்கிறார்.
இடியுடன் கூடிய மழை, ஆலங்கட்டி மழை பெய்ய வாய்ப்பு! தமிழ்நாடு வெதர்மேன் அப்டேட்