Asianet News TamilAsianet News Tamil

இடியுடன் கூடிய மழை, ஆலங்கட்டி மழை பெய்ய வாய்ப்பு! தமிழ்நாடு வெதர்மேன் தகவல்

அடுத்த 2 வாரங்களுக்கு தமிழகம், கேரளா உள்ளிட்ட தென் மாநிலங்களில் இடியுடன் கூடிய மழையும் ஆலங்கட்டி மழையும் பெய்ய வாய்ப்பு இருப்பதாக தமிழ்நாடு வெதர்மேன் கணித்துள்ளார்.

Lot of Thunderstorms possible in next 2 weeks: Tamil Nadu Weatherman
Author
First Published Apr 22, 2023, 8:23 PM IST | Last Updated Apr 22, 2023, 8:27 PM IST

அடுத்த இரண்டு வாரங்களுக்கு தமிழ்நாட்டில் இடியுடன் கூடிய மழையும் ஆலங்கட்டி மழையும் பெய்ய வாய்ப்பு இருப்பதாக தன்னார்வ வானிலை அறிவிப்பாளர் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கணித்துள்ளார்.

"இந்திய தீபகற்ப பகுதியில் அடுத்த 2 வாரங்களுக்கு வெப்பத்திலிருந்து சற்று விடுதலை கிடைக்கும். மேற்குத் தொடர்ச்சி மலை பள்ளத்தாக்குப் பகுதியில் இருந்து வரும் காற்று வங்காள விரிகுடாவில் உள்ள உயர் அழுத்தப் பகுதியில் கிழக்கு திசைக் காற்றுடன் மோதுகிறது. இதனால் தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா மற்றும் கேரளாவில் ஆலங்கட்டி மழையும் இடியுடன் கூடிய பலத்த மழையும் பெய்யக்கூடும்" என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

"சென்னை வடமாநிலங்களில் இன்று இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்திருக்கும் அவர், ஞாயிறு மற்றும் திங்கள்கிழமை நகர்ப்பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும் கணித்துள்ளார். தென்னிந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் வெப்பநிலை சாதாரணமாகவோ அல்லது இயல்பைவிடக் குறைவாகவோ இருக்கும்" என்று தெரிவிக்கிறார்.

தமிழக எல்லையில் பயங்கரவாத அமைப்புகளைக் குறிவைத்திருக்கிறோம்! முதல்வர் ஸ்டாலின் தகவல்

இதனால், அடுத்த 2 வாரங்களுக்கு வெப்பத்திலிருந்து சற்று விடுதலை கிடைக்கும் என்று கூறியுள்ள அவர், அடுத்த இரு வாரங்களும் தொடர்ந்து தனது வானிலைக் கணிப்புகளைக் கூற இருப்பதாவும் சொல்லி இருக்கிறார்.

இப்தார் விருந்து ஏன்? ரமலானில் இஸ்லாமிய நண்பர்களுக்கு உதவ இதைத் தெரிஞ்சுக்கோங்க!

கோடைக்காலத்தில் சூடிபிடித்து வரும் நிலையில் தமிழகத்தின் பல பகுதிகளில் இடங்களில் தினமும் வெப்பநிலை 100 டிகிரி செல்சியஸ் அளவைத் தாண்டி சுட்டெரித்து வருகிறது. கடந்த சில நாட்களாக சென்னையில் வெயிலின் தாக்கம் உக்ரமாக இருக்கிறது. ஆனால், இன்று சென்னையில் பல இடங்களில் மழை பெய்துள்ளது. ஆலந்தூர், கிண்டி, வடபழனி, ஆவடி, அம்பத்தூர் எனப் வெவ்வேறு பகுதிகளில் மிதமான மழை கொட்டியது.

வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக நாளை (ஞாயிற்றுக்கிழமை) தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் லேசான மழையும் பெய்யக் கூடும் எனத் தெரிவித்துள்ளது. நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, தேனி, திண்டுக்கல், திருநெல்வேலி, தென்காசி, சேலம், தர்மபுரி, கள்ளக்குறிச்சி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை ஆகிய 15 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் சொல்லி இருக்கிறது.

24ஆம் தேதி முதல் 26ஆம் தேதி வரை லேசான மழை பல இடங்களில் நீடிக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 48 மணி நேரத்திற்கு சென்னை மற்றும் புறநகர் பகுதியில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யும் இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டிருக்கிறது.

விண்வெணியில் இருந்து வந்த ரமலான் வாழ்த்து! வைரல் ஆன சுல்தான் அல்-நெயாடியின் வீடியோ!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios