ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்த விண்வெளி வீரர் ஒருவர் விண்வெளியில் இருந்து பூமிக்கு ரமலான் வாழ்த்து வீடியோ அனுப்பியுள்ளார்.

உலகம் உள்ள இஸ்லாம்பியர்கள் இன்று ஈகைத் திருநாளாம் ரமலான் பண்டிகையைக் கொண்டாடி வருகின்றனர். இதனை முன்னிட்டு பல தலைவர்களும் பிரபலங்களும் மக்களுக்கு தங்கள் ரமலான வாழ்த்தினைக் கூறி வருகிறார்கள். இந்நிலையில், விண்வெளியில் இருந்து வந்த வாழ்த்து அனைவரையும் கவர்ந்திருக்கிறது.

ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்த சுல்தான்-அல்-நெயாடி என்பவர் விண்வெளியில் இருந்து பூமிக்கு ரமலான் வாழ்த்துச் செய்தியை அனுப்பி இருக்கிறார். சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்குச் சென்றிருக்கும் அவர், அங்கிருந்து தனது ரமலான் வாழ்த்துக்களை வீடியோவாகப் பதிவ செய்து அனுப்பி இருக்கிறார்.

சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து காணொளி ஒன்றைப் பகிர்ந்த அவர், தன்னைப் பின்தொடர்பவர்கள், குடும்பத்தினர், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் உலக மக்கள் அனைவருக்கும் ஈத் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். "இன்று, நான் எனது நம்பகமான துணைவரான சுஹைலுடன் ஈத் கொண்டாடுவேன்" எனவும் அல்-நெயாடி குறிப்பிட்டுள்ளார்.

Scroll to load tweet…

"இந்த ஆசீர்வதிக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் எனது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் பூமியில் உள்ள அனைவருக்கும் எனது அன்பான வாழ்த்துக்களை அனுப்புகிறேன். இந்த சிறப்பு சந்தர்ப்பம் உங்களுக்கு அமைதியையும், மகிழ்ச்சியையும், செழிப்பையும் தரட்டும். ஈத் முபாரக்!" என்று அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

41 வயதாகும் விண்வெளி வீரர் நெயாடி ஐக்கிய அரபு அமீரகம் சார்பில் முதல் முறையாக விண்வெளிக்கு அனுப்பப்பட்டவர் என்ற பெருமைக்குச் சொந்தமானவர். இதனால் இவர் சுல்தான் ஆஃப் ஸ்பேஸ் என்று அழைக்கப்படுகிறார். கடந்த பிப்ரவரி மாத இறுதியில் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் விண்கலம் மூலம் மீண்டும் விண்வெளிக்குச் சென்றிருக்கிறார். இதன் மூலம் ஆறு மாத காலத்தை விண்வெளியில் கழித்த முதல் அரபு நாட்டு விண்வெளி வீரர் என்ற பெருமையைப் பெற இருக்கிறார்.